"ரூ.1000".. தங்கச்சிங்க விஷத்த குடிச்சிட்டு சாகுறாங்களே.. கேள்வி கேட்டவரையே கிறுகிறுக்க விட்ட சீமான்
சென்னை: செய்தியாளர்கள் ஒரு கேள்வியை சீமானிடம் கேட்டால், மொத்த பேரும் அசந்துபோகும்படியான, பதில் கேள்வியை சீமான் கேட்டுவிடுவார்.. அப்படித்தான் காஞ்சிபுரத்திலும் நடந்துள்ளது...!!
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது வழக்கம்போல் திமுக அரசு மீதான விமர்சனங்களை முன்வைத்தார்.. சில கேள்விகளையும் எழுப்பினார்.. சில குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தார்.

சீமான் பேசியதாவது: "இப்போ என்ன நடக்குதுன்னு தெரிஞ்சிட்டு பேசுங்க.. பள்ளிக்கூடத்து குழந்தைகளுக்கு காலையிலேயே சோறு இல்லை.. சாப்பிட்டுவிட்டு, பள்ளிக்கூடம் கிளம்பி வர முடியல. இங்கே சோறு போட்டாதான் அவங்களுக்கு சாப்பாடு..
1000 ரூபாய்: பேருந்துக்கு யார்கிட்டயும் காசு இல்லை.. பேருந்து இலவசம்னு சொல்றீங்க.. குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் தரேன்னு சொல்றீங்க.. கல்லூரி படிக்கப்போகும் என் தங்கச்சிகளுக்கு 1000 ரூபாய் தரேன்னும் சொல்றீங்க.. அந்த ஆயிரம் ரூபாய்க்கு கையேந்தும் நிலைமையிலேதானே எங்களை எல்லாம் வெச்சிருக்கீங்க.. அப்பறம் "டெவலப்னு" ஏன் பேசறீங்க? வளர்ச்சி, வளர்ச்சின்னு ஏன் பேசறீங்க?
பள்ளிக்கூடத்துல பஸ் கட்டணம் இனி கிடையாது, இலவசம்னு சொல்றீங்களே... அப்படின்னா அந்த பள்ளிக்கூட படிப்புக்கான கட்டணத்தை யார் கட்டுவது? லட்சக்கணக்குல கேக்குறாங்களே? நீங்க வேணும்னா கல்வி கட்டணத்தை எடுத்துக்குங்க... இலவசமாகவும், தரமாகவும் கல்வியை எங்களுக்கு குடுங்க.. பஸ் கட்டணத்தை நாங்களே போட்டுக்கறோம்.. எது வளர்ச்சின்னு இருக்கு இல்லை?" என்று தடாலடியாக திருப்பி கேட்டார் சீமான்.
நல்ல விஷயம்தான்: இதையடுத்து செய்தியாளர்கள், திருச்சியில் முதல்வர் ஸ்டாலினிடம் பெண்கள் கோரிக்கை வைத்த நிலையில், உடனடியாக அதை நிறைவேற்றி தந்துள்ளாரே.. இதை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கருத்து கேட்டனர். அதற்கு சீமான் சொன்னதாவது:
"நல்ல விஷயம்தான்.. வரவேற்கிறேன்.. பெண்களின் கோரிக்கையை உடனே ஏற்று நிறைவேற்றியதைபோல, ஒவ்வொன்னையும் உடனே உடனே செய்துட்டா, ரொம்ப நல்லாயிருக்கும்.. பள்ளிக்கூடத்து பிள்ளைங்க எல்லாம், என் அப்பாவை குடியை நிறுத்த சொல்லுங்கன்னு, விஷத்தை குடிச்சிட்டு செத்துப்போறாங்க.. அந்த கோரிக்கையை ஏற்று, டாஸ்மாக்கை நிப்பாட்டிட்டாருன்னா, ரொம்ப நல்லாயிருக்கும்" என்றார் சீமான்.
தம்பிகள்: வழக்கம்போல சீமானின் தம்பிகள் இந்த வீடியோவையும் இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.. திமுக தரப்பினர் திரண்டு சென்று சரமாரியாக பதிலளித்து கொண்டிருக்கிறார்கள்.
-
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல்











Click it and Unblock the Notifications