"ஹெவி ரிஸ்க்".. எடப்பாடி கையிலெடுக்கும் பிரம்மாஸ்திரம்.. அதிரும் பாஜக கூடாரம்.. அப்படின்னா அவ்ளோதானா
எடப்பாடி பழனிசாமி யார் யாருடன் கூட்டணி வைக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்து வருகிறது
சென்னை: அமித்ஷா, பிரதமர் மோடி இருவருமே தமிழகம் வந்து சென்ற நிலையில், எடப்பாடி பழனிசாமி என்ன செய்ய போகிறார் என்ற எதிர்பார்ப்பு எகிறி வருகிறது.
அதிமுக உட்கட்சி விவகாரம் தீர்ந்தால் மட்டுமே, கூட்டணி வலுவடையும் என்ற நிலை உள்ளது.. அப்படி இருக்கும்போது, மெகா என்று எதை முன்னிறுத்தி எடப்பாடி பேசினார் என்ற சந்தேகம் வட்டமடிக்கிறது.
டிடிவி + பாஜக + பாமக + புதிய தமிழகம் + பாரிவேந்தர் + என இத்தனை பேரையும் ஒன்றிணைக்கலாம் என்ற முடிவுடன் மெகா கூட்டணி என்று எடப்பாடி சொல்லியிருக்க வாய்ப்புள்ளதாக கூறுகிறார்கள்.

65 சப்போர்ட்
எனினும், எடப்பாடி பழனிசாமி சொல்லும் மெகா கூட்டணி என்பது இன்னைக்கு நடைமுறை சாத்தியமில்லை என்றே அரசியல் வல்லுநர்கள் சொல்கிறார்கள்.. எடப்பாடி + ஓபிஎஸ் இணைந்துதான், 33 சதவீத சதவீதத்தை வைத்துள்ளனர்.. இதில் இருவரும் பிரியும்போது, வாக்குகளும் பிரிந்து, அது கட்சியின் வெற்றி வாய்ப்பை மீண்டும் ஒருமுறை பாதித்துவிடும் என்பதே தொண்டர்களிடையே கவலையாக இருந்து வருகிறது.. 62 எம்எல்ஏக்கள் எடப்பாடிக்கு ஆதரவாக இருந்தாலும்கூட, களநிலவரமும், தொண்டர்கள் மனநிலையும் இப்போதுவரை உறுதியாக தெரியாமல் இருப்பது மிகப்பெரிய பலவீனமாக பார்க்கப்படுகிறது.

ரத்தத்தின் ரத்தங்கள்
எடப்பாடியால்தான், கட்சி உடைந்துள்ளது என்பதும், ஜெயலலிதாவின் பதவிக்கே குறி வைத்து நகர்த்தி வரும் அரசியலும் தொண்டர்களுக்கு அதிர்ச்சியையும் தந்து வரும்நிலையில், எம்ஜிஆர், ஜெயலலிதா வளர்த்த கட்சியை, இன்று பாஜக பஞ்சாயத்து செய்யும் நிலைமையில் கொண்டு வந்துவிட்டுவிட்டார்களே என்ற கவலையும் ரத்தத்தின் ரத்தங்களை சூழ்ந்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கவலை தெரிவித்து வருகிறார்கள்.. ஓபிஎஸ்ஸை பொறுத்தவரை, ஓபனாகவே எடப்பாடிக்கு அழைப்பு விடுத்துவிட்டாலும், பாஜகவை இந்த விஷயத்தில் பஞ்சாயத்து செய்யும்படி, மறைமுகமாக கேட்டுக் கொண்டாலும், முடிவு எடுக்க போவது என்னவோ எடப்பாடியாகவே இருக்கிறார்.

ஹை ரிஸ்க்
ஆனால், எடப்பாடி பழனிசாமி இவை எதற்குமே சமாதானம் ஆகவில்லை என்கிறார்கள்.. 60க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் பலம், 95 சதவீத நிர்வாகிகள் பலம் இருந்தும், ஓபிஎஸ்ஸுக்கு நிகராக தமக்கு மரியாதை தரப்பட்டுவிட்டதே என்ற நினைக்கிறாராம்.. அவராவது 2 பேரையும் சேர்த்து வைத்து பார்த்துவிட்டு போனார்.. ஆனால், அமித்ஷா அதற்குகூட வாய்ப்பு தரவில்லையே என்ற வருத்தம் கவ்வி உள்ளதாம்.. இருவரையும் ஏர்போர்ட்டில் சமமாக நிற்க வைத்ததால்தான், அமித் ஷாவை எடப்பாடி பழனிசாமி சென்று சந்திக்கவில்லை என்றும் இன்னொரு காரணம் சொல்லப்படுகிறது..

தில் முடிவு
எனவேதான், ஒருங்கிணைந்த அதிமுக என்ற விஷயத்துக்கு எடப்பாடி இன்னமும் சம்மதம் சொல்லவில்லை என்கிறார்கள்.. அதேசமயம், தன்னுடைய தலைமையிலான கூட்டணியை பாஜக ஏற்க வேண்டும், ஒதுக்கப்படும் சீட்களை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது உட்பட என்ற விருப்பத்தையும் ஆதரவாளர்களிடம் எடப்பாடி சொல்லி வருகிறாராம்.. அவ்வாறு பாஜக தன் கருத்தை ஏற்காத பட்சத்தில், தனித்து போட்டியிடவும் முயற்சிகள் மேற்கொள்ளலாம் என்ற மாற்று ஐடியாவும் உள்ளதாம்..

அஸ்திரம்
எடப்பாடியின் தொடர் உறுதியும், பிடிவாதமும், டெல்லியை கடுப்பாக்கி உள்ளதாகவும், அடுத்தக்கட்ட அஸ்திரம் மேலிடத்தில் இருந்து சிலுவம்பாளையத்திற்கு பாயலாம் என்றும் யூகங்கள் கிளம்பி உள்ளன.. எடப்பாடி தன்னை ஏற்றுக்கொள்வார் என்று ஓபிஎஸ் ஒருபக்கமும், டிடிவி மறுபக்கமும் வழிமேல் விழிவைத்து காத்திருக்கும்போது, யூடர்ன் போட்டு வேற பக்கம் தன் வழியில் போய் கொண்டே இருக்கிறார் சிலுவம்பாளையம் பழனிசாமி...!!!
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications