"வேலி" தாண்டுதா வெள்ளாடுகள்.. 15 சீட்டா?.. அடித்தாடும் எடப்பாடி பழனிசாமி.. ஆஹா, திமுக சுதாரிக்கணுமே
சென்னை: பாஜகவை அதிமுக கழட்டிவிட்டுள்ளதால், வலுவான கூட்டணியை அமைக்க வேண்டிய நெருக்கடி எடப்பாடி பழனிசாமிக்கு ஏற்பட்டுள்ளது.. இதே காரணத்துக்காகவே, தன்னுடைய கூட்டணியை வலுவாக வைத்திருக்க வேண்டிய கட்டாயம் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு ஏற்பட்டுள்ளது. அப்படியானால் என்ன நடக்க போகிறது?
அதிமுக - பாஜக கூட்டணி முறிவு தற்காலிகமானது என்றே பலரும் கருதிவருகிறார்கள்.. எப்படியும் பாஜக, அதிமுகவை சமாதானப்படுத்திவிடும் என்றும் சலசலப்புகள் உள்ளன.

சமாதானம்: அதற்கேற்றவாறே, பாஜக மேலிட தலைவர், அதிமுக சீனியர் ஒருவருக்கு போனை போட்டு பேசியிருக்கிறார்.. ஆனால், வெள்ளைக்கொடி எடப்பாடி பழனிசாமியிடம் வேலைக்கு ஆகவில்லை. முறிந்தது முறிந்ததுதான் என்று கூட்டணி விஷயத்தில் கறாராக இருக்கிறாராம்.
அதேசமயம், பாஜக இல்லாத நிலையில், கூட்டணியை பலப்படுத்தும் முயற்சியில் இறங்கி உள்ளார். இப்படிப்பட்ட சூழலில்தான், மருத்துவமனையில் இருக்கும் திருமாவளவனுக்கு போனை போட்டு நலம் விசாரித்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இந்த நலம் விசாரிப்பது, அரசியல் நாகரீகமா? அல்லது கூட்டணிக்கான அறிகுறியா? என்ற குழப்பம் எழுந்துள்ளது..
திருமாவளவன்: இந்த திருமாவளவன் 2 விஷயங்களில் உறுதியாக இருப்பார் என்று தெரிகிறது.. ஒன்று, சின்னம், மற்றொன்று அதிக தொகுதிகள்.. கடந்த தேர்தலில், சிதம்பரத்தில் தனி சின்னத்திலும், விழுப்புரத்தில் உதயசூரியன் சின்னத்திலும் விசிக போட்டியிட்டதால், இந்த முறை எப்படியாவது தனி சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று நினைக்கிறார்.
மொத்தம் 13 தொகுதிகளை தேர்வு செய்துள்ள நிலையில், 4 தொகுதிகளாவது பெற்றுவிட வேண்டும் என்பதில் விசிக உறுதியாக உள்ளதாக தெரிகிறது. எனவே, அதிக சீட்களை அதிமுக ஒதுக்கும்பட்சத்தில், விசிக அணி மாறுமா என்று தெரியவில்லை.
அதேசமயம், பாமகவையும் கூட்டணிக்குள் கொண்டு வர முயற்சிக்கிறதாம் அதிமுக.. வடமாவட்டங்கள் மட்டுமல்லாது அதிமுகவின் கோட்டை என்று சொல்லப்படும் கொங்குவிலும்கூட, பாமகவின் ஆதரவு அதிமுகவுக்கு தேவையாக உள்ளது.. கடந்த முறை அதிமுகவுக்கு உதவியது, கொங்கு மண்டல பாமக என்பதையும் மறுக்க முடியாது.
வன்னியர்கள்: ஏற்கனவே, வன்னியர்களின் ஆதரவை ஓரளவு அதிமுக பெற்றிருக்கும்நிலையில், பாமகவின் தயவும் அதிமுகவுக்கு இந்த முறை நிச்சயம் தேவைப்படலாம் என்கிறார்கள். ஆனால், அதிமுக கூட்டணியில் பாமக இடம்பெறும் பட்சத்தில், விசிகவின் நிலைப்பாடு தெரியவில்லை.
விசிகவையும் தாண்டி, கம்யூனிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சிகளிடம் அதிமுக நெருங்கி வந்து கொண்டிருப்பதை திமுகவும் கவனிக்காமல் இல்லை.. காங்கிரஸ் கட்சியின் அழகிரியை பொறுத்தவரை, இந்த முறை அதிக தொகுதிகளை திமுகவிடம் கேட்டு பெறுவோம் என்று கடந்த 3 மாதங்களுக்கு முன்பேயே கூறியிருந்தார். ஆனால், கடந்த முறை போல, காங்கிரசுக்கு 10 தொகுதிகளை திமுக தர வாய்ப்பில்லையாம்.. எப்படியும் இதில் பாதி தொகுதிகளே வழங்கப்பட உள்ளதாக சலசலக்கப்படுகிறது.
பாஜக: காங்கிரசின் மூத்த தலைவர்களுக்கு திமுக கூட்டணியில் சில அதிருப்தி இருந்தாலும், திமுகவை எக்காரணம் கொண்டும் விட்டுவிடக்கூடாது என்பதில் ராகுல் காந்தி உறுதியாகவே இருக்கிறாராம். திமுகவின் துணையோடுதான், பாஜகவை எதிர்கொள்ள முடியும் என்பதையும் ராகுல் உணர்ந்தேயிருப்பதாக தெரிகிறது. எனினும், 13 முதல் 15 வரை காங்கிரஸ் சீட் கேட்டால் திமுக என்ன செய்யும் என்ன தெரியவில்லை.
அதேபோல, மதிமுகவுக்கு ஒரு சீட் மட்டுமே, திமுக இந்த முறை ஒதுக்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் கசிந்தன. அதனால்தான், தேர்தலில் இம்முறை போட்டியிட போவதில்லை என்று வைகோவின் மகனும் அறிவித்திருந்தார்.. இப்படிப்பட்ட சூழலில், திடீரென 5 தொகுதிகளில் மதிமுகவின் குறி விழுந்துள்ளதால், இது மிகுந்த குழப்பத்தையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி வருகிறது.. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டும், திமுகவிடம் கூடுதல் சீட் கேட்க முடிவு செய்துள்ளதாம்.
திமுக கூட்டணி: ஆக, அதிமுக - பாஜக கூட்டணி முறிவால், மொத்த அரசியல் களமும் மாறி கொண்டிருக்கிறது.. கூட்டணி மாறுதலுக்கான "சூழல்" களத்தில் நிலவுவதால், இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள அரசியல் கட்சிகளும் காய் நகர்த்த துவங்கிவிட்டன.
"திமுக கூட்டணியிலிருந்து சில கட்சிகள், அதிமுகவுக்கு வரக்கூடும்" என்று மாஜி அமைச்சர் ஜெயக்குமாரும் அடிக்கடி பகீரை கிளப்பி கொண்டிருக்கிறார்.. எனவே, தன்னுடைய கூட்டணியை, இழுத்து பிடித்து வைத்து கொள்ளும் நெருக்கடி, திமுகவுக்கு நாளுக்கு நாள் ஏற்பட்டு வருகிறது.. இந்த கூட்டணி விவகாரத்தில் வெற்றி பெற போவது திமுகவா? அதிமுகவா? பொறுத்திருந்து பார்ப்போம்..!!!!
-
சீட்டுக்கு மட்டும் பேசும் திருமா! தமிழகம் வாழ..திமுக வீழ வேண்டும்! செய்வீர்களா? ஜெ ஸ்டைலில் எடப்பாடி -
தலித்துகள் என்றால் ஏளனமா? திமுக - விசிக கூட்டணி அவசியமா? தமிழன் பிரசன்னாவை நோக்கி இளைஞர்கள் கேள்வி! -
66/234! விசிக கேட்ட 10+1 தேமுதிகவுக்கு! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை சீட்! DMK-க்கு 166-ஆ? -
6 + 2.. திமுக கூட்டணியில் விசிகவிற்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு.. திருமா மனதை கரைத்த ஸ்டாலின் -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
விசிகவின் ராஜ்ய சபா சீட் கோரிக்கை.. ஸ்டாலின் சொன்னது என்ன? திருமாவளவன் கொடுத்த விளக்கம் -
கள்ளக்குறிச்சியை கையில் எடுத்த திருமாவளவன்! விசிகவின் 15 Stronghold உத்தேச பட்டியல்! -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி












Click it and Unblock the Notifications