யாருங்க அந்த "விவிஐவி"? ராகுல் காந்தி அசரலயே.. எடப்பாடி பழனிசாமியும் விடலயே.. கவனிக்கும் பாஜக, திமுக
சென்னை: தேர்தல் நெருங்கி வரும்சூழலில், அதிமுக கூட்டணிக்கு மும்முரமாகி கொண்டிருக்கிறது. அந்தவகையில் சில பிரத்யேக தகவல்கள், நமக்கு கிடைத்துள்ளன.
எம்பி தேர்தலுக்காக தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன.. அந்தவகையில், சில மாதங்களுக்கு முன்பு தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி பேசும்போது, கடந்த முறையைவிட இந்த முறை திமுகவிடம் அதிக சீட் கேட்போம், காங்கிரஸ் இல்லாமல் திமுகவால் வெற்றி பெற முடியாது என்றும் கூறியிருந்தார்.

அழகிரி: கூட்டணி ரேட்டை உயர்த்தவே அழகிரி இவ்வாறு பேசியதாக கருதப்பட்டாலும், காங்கிரசுடன் எடப்பாடி பழனிசாமியும் கூட்டணி வைக்கப்போவதாக அரசல் புரசலாக வட்டமடித்தன. ஒருபடி மேலேபோய், ராகுலுக்கு போனை போட்டு, எடப்பாடி பேசியதாகவும் சொன்னார்கள்.. இதற்குநடுவில், ஓபிஎஸ் ஆதரவாளரும், மூத்த தலைவருமான மருது அழகுராஜ், பேட்டி ஒன்றை தந்திருந்தார்.
அதில், "எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுன், அரசியல் ஆலோசகர் சுனிலுடன் இணைந்து பேச்சுவார்த்தைகள் நடத்தி வருவதாகவும், விரைவில் காங்கிரசுடன் எடப்பாடி பழனிசாமி சேர போகிறார்" என்று சரவெடியை வீசியிருந்தார். இப்படி எத்தனையோ யூகங்கள் வெளிவந்தபடியே இருந்த நிலையில், உண்மையிலேயே காங்கிரசுடன் எடப்பாடி கூட்டணி வைக்க போகிறாரா? என்ற சந்தேகங்கள் நிலவியபடியே உள்ளன.
விருப்பம்: ஆனால், பல காங்கிரஸ் தலைவர்களுக்கு அதிமுகவுடன் கூட்டணி வைக்கவே விருப்பம் உள்ளதாக சொல்கிறார்கள்.அதனால்தர்ன, தமிழக காங்கிரசுடன், அதிமுக தரப்பில், கடந்த மாதம் ரகசியமாக பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டதாம். அப்போது காங்கிரசுக்கு 20 சீட்டுக்களை ஒதுக்கவும் அதிமுக மேலிடம் ஒப்புக்கொண்டதாம்.
எனினும், அதிமுகவுடன் கூட்டணிக்கு ராகுல் ஒப்புக்கொள்ளவில்லையாம். திமுகவுடன் இணக்கமான உறவு உள்ளபோது, தேவையில்லாமல் இப்படி குட்டையை குழப்ப வேண்டாம் என்று, கறாராக சொல்லிவிட்டாராம்.
உடன்பிறப்புகள்: இப்போது விஷயம் என்னவென்றால், பாஜகவை கழட்டிவிட்ட பிறகு, அதிமுக கூட்டணிக்கு இப்போது வரை, முக்கிய கட்சிகள் எதுவும் வந்து சேரவில்லை. அதனால், நாடாளுமன்ற தேர்தலை அதிமுக தனித்து சந்திக்குமோ என்கிற கேள்வி தான் உடன்பிறப்புகளிடம் தொக்கி நிற்கிறது. அதனால்தான், எடப்பாடி பழனிசாமி அனுப்பிய சீக்ரெட் தூது குறித்து, ஒரு ரகசியல் தகவல் அதிமுகவில் தீயாய் பரவி கொண்டிருக்கிறது.
அதாவது, சோனியா அல்லது ராகுல்காந்தியை தன்னுடைய சார்பில் நம்பிக்கையுள்ள நபர் ஒருவர் சந்திக்க வேண்டும் என விரும்பியிருக்கிறாராம் எடப்பாடி பழனிச்சாமி.
யார் அந்த விவிஐபி: அதற்காக, நாட்டின் ஒரு சில உச்சபட்ச பதவிகளில் ஒன்றை வகித்த விவிஐபியும். தனது நண்பருமான ஒருவரின் உதவியையும் கேட்டுள்ளார். "தனது சார்பில், சோனியா அல்லது ராகுலை சந்தியுங்கள். அதிமுக கூட்டணிக்கு காங்கிரஸ் வந்தால் 15 சீட் தருவதாக வாக்குறுதி தந்து கூட்டணிக்கு அழையுங்கள்" என எடப்பாடி கேட்டுக்கொண்டாராம்.
அதன்படி, காங்கிரஸ் தலைமையை நெருங்குவதற்காக, அக்கட்சியில் உள்ள சீனியர் லீடர் ஒருவரை தொலைப்பேசியில் பிடித்து பேசியிருக்கிறார் அந்த விவிஐபி. விபரங்களை அறிந்த சம்மந்தப்பட காங்கிரஸ் தலைவரோ, ராகுலிடம் இந்த விஷயத்தை கொண்டு செல்ல, திமுகவுடன் எந்த முரண்பாடும் இல்லாதபோது மாற்று சிந்தனை நமக்கு எதற்கு ? இப்போதைக்கு சந்திக்க வேண்டாம் என்று தெரிவித்து விட்டாராம் ராகுல்காந்தி. எடப்பாடியின் தூது ஆரம்பத்திலேயே புஸ்ஸாகியிருக்கிறது.
சிறுபான்மையினர் ஓட்டுக்கள்: இன்னொன்றையும் இங்கு நாம் சுட்டிக்காட்ட வேண்டி உள்ளது.. காங்கிரஸை தவிர்த்துவிட்டு, திமுக தனித்து போட்டியிட்டால், இஸ்லாமிய மற்றும் சிறுபான்மையினர் ஓட்டுக்களை பெறுவதில் திமுகவுக்கும் சிக்கல் உள்ளது..

அனைத்து தரப்பினரின் ஆதரவுடன் திமுக வெற்றி பெற வேண்டுமானால், காங்கிரஸ் போன்ற கட்சிகளுடன் இணைந்தால் மட்டுமே சாத்தியமாகும். இப்போது அதிமுகவுக்கும் சிறுபான்மையினர் ஓட்டுக்களுக்கான நெருக்கடி உள்ளதால், அடுத்தக்கட்ட நடவடிக்கையாக எடப்பாடி பழனிசாமி என்ன செய்ய போகிறார் என்ற ஆர்வமும் எகிறி வருகிறது.
எதிர்பார்ப்பு: அதுமட்டுமல்ல, "மெகா கூட்டணி" என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்து, ஒரு வருட காலமாகிவிட்ட நிலையில், யாருடன்தான் அதிமுக கூட்டணி வைக்க போகிறது? தெரியவில்லை, பொறுத்திருந்து பார்ப்போம்.!!












Click it and Unblock the Notifications