"மச்சக்காரர்".. எந்த ரூட் பிடிச்சாலும் எடப்பாடிக்கே சக்ஸஸ்?.. அப்ப "லோட்டஸ்" மலருகிறதா.. உஷார் திமுக
எடப்பாடி பழனிசாமி பாஜகவை எதிர்த்து அரசியல் செய்ய தயாராகிவிட்டாரா என தெரியவில்லை
சென்னை: எடப்பாடி பழனிசாமி, மத்திய பாஜகவை எதிர்க்க துணிந்துவிட்டாரா? அல்லது பாஜகவுடன் இணைந்து கூட்டணி வைப்பாரா? அப்படி கூட்டணி வைக்க நேர்ந்தால், டிடிவி தினகரனை ஏற்பாரா? என்பன போன்ற அலசல்கள் சோஷியல் மீடியாவில் கிளம்பி உள்ளன.
எடப்பாடி செய்தியாளர்களிடம் பேசியபோது, "சென்னைக்கு வரும்போதெல்லாம் ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை தாங்கள் சந்திக்க வேண்டிய அவசியமில்லை.. பாஜக ஒரு தேசியக் கட்சி, அதிமுக என்பது தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சி.மோடி, அமித்ஷா கட்சி வேறு, எங்கள் கட்சி பாஜக தேசியக் கட்சி. அதிமுக, தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சி. 31 ஆண்டுகாலம் தமிழகத்தை சிறப்பாக ஆண்ட கட்சி அதிமுக. இரண்டு கட்சிகளும் வேறு வேறு" என்று கூறயிருந்தார்.
இது அரசியல் அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.. இந்த பேட்டியை வைத்து, பாஜகவை ஏற்காத எடப்பாடி ஆதரவாளர்கள் பெரும் குஷியில் உள்ளனர்.. அமித்ஷாவையே எதிர்த்து பேசிவிட்டாரே, அப்படியானால் பாஜகவை பகைத்து கொள்ள எடப்பாடி தயாராகிவிட்டாரா? அல்லது எடப்பாடியை எதிர்க்க பாஜகவும் துணிந்துவிட்டதா? என்ற கேள்விகள் வட்டமடித்து வருகின்றன.

60 சீட்கள்
ஒருதரப்பில் எடப்பாடி பேசியது, பாஜகவுக்கு எதிரானதாகவே பார்க்கப்பட்டு வருகிறது.. கடந்த சட்டப்பேரவை தேர்தலிலேயே இந்த எதிரான நிலைப்பாட்டை எடப்பாடி எடுத்துவிட்டார் என்றும் சொல்கிறார்கள்.. 70 சீட்கள் வேண்டும் என்று கடந்த தேர்தலில் அண்ணாமலை பிடிவாதம் போதும்சரி, கூட்டணி இல்லாமலேயே 60 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று அண்ணாமலை மார்தட்டியபோதும்சரி, கோட்டையில் காவி கொடி பறக்கும் என்று துணிந்து சொன்னபோதும்சரி, வாயே திறக்காத எடப்பாடி பழனிசாமி, கடைசி நேரத்தில் 20 சீட்டை மட்டும் பாஜகவுக்கு ஒதுக்கி தந்துவிட்டு, தன் நிலைப்பாட்டை செயலில் காட்டினார்.

லீலா பேலஸ்
லீலா பேலஸ் ஹோட்டலுக்கு வந்திருந்த அமித்ஷா, சசிகலா, மற்றும் தினகரனுடன் கூட்டணி வைத்துக்கொள்ளும்படி சொன்னபோதும்கூட, அதற்கும் எந்த பதிலையும் சொல்லாமல் இருந்துவிட்டு, வெளியே வந்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி, "எந்த காலத்திலும், சசிகலாவுக்கு கட்சியில் இடமில்லை" என்று திட்டவட்டமாக அறிவித்தபோதும்சரி, அப்போதும் பாஜகவின் பேச்சை கண்டுகொள்ளாமல் இருந்தார்.. அந்த சமயத்தில் டெல்லி சென்று, பிரதமரை சந்தித்து பேசிவிட்டு, பேட்டி தந்தபோதும் இதே கருத்தைதான், டெல்லியில் இருந்தே ஆணித்தரமாக சொன்னார்... கடந்த 6 மாத காலமாக, ஒருங்கிணைந்த அதிமுகவை பாஜக மேலிடம் மறைமுகமாக வலியுறுத்தி வரும்நிலையிலும்கூட, தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாகவும், பிடிவாதமாகவும் இருப்பதால், பாஜகவுக்கு எதிரான மனநிலைமைக்கு எடப்பாடி வந்துவிட்டதாக ஒரு சொல்கிறார்கள்..

காம்ரேட்ஸ்
அந்தவகையில், பாஜக அல்லாத மெகா கூட்டணிக்கும் தயாராகி வருகிறாராம்.. திமுக கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் 2 கட்சிகளும் அதிருப்தியில் உள்ளதால், அவர்களை தங்கள் பக்கம் கொண்டு வரும் முயற்சியிலும் இறங்கி வருவதாகவும், அந்தவகையில், பாமக + தேமுதிக + கம்யூனிஸ்ட்கள் + காங்கிரஸ் என பாஜக நீங்கலாக கூட்டணி உருவானால், எடப்பாடிக்கு அது மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட்டாக அமையும் என்றும் கணிப்புகள் ஓடிக் கொண்டிருக்கின்றன.

நேரெதிர்
ஆனால், இதற்கு நேர்மாறாக இன்னொரு கணிப்புகளும், அலசல்களும் வெடித்து கிளம்பி உள்ளன.. அதன்படி, எடப்பாடி மிகச்சரியான முறையிலேயே அரசியல் செய்வதாக பாஜக கருதுகிறதாம்.. தன்னை சுற்றிலும் ஏகப்பட்ட கேஸ், விவகாரங்களை வைத்திருக்கும் எடப்பாடிக்கு, பாஜகவை பகைத்து கொள்ள முடியாத சூழலும் உள்ளது, இரட்டை இலையை பெற வேண்டிய சூழலும் உள்ளது.. அந்தவகையில், பாஜகவை தவிர்த்து அரசியல் செய்ய முடியாத நிலைமையில் எடப்பாடி இருப்பதாக தெரிகிறது,

லோட்டஸ்
இந்த நிலைமைதான் பாஜகவுக்கும் என்கிறார்கள்.. ஒரு மூத்த பத்திரிகையாளர், தனியார் சேனல் ஒன்றிற்கு தந்துள்ள பேட்டியில் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.. அதில், "62 எம்எல்ஏக்களை வைத்திருக்கும் எடப்பாடியை பாஜக கைவிடாது.. அதிமுக
தலைமையிலான எடப்பாடியுடன்தான் கூட்டணி என்பதில் பாஜக மேலிடம் முடிவு செய்துவிட்டதாக தெரிகிறது.. 2024 தேர்தலிலும் சரி, 2026 தேர்தலிலும்சரி, எடப்பாடி தலைமையிலான கூட்டணியில்தான், போட்டியிட வேண்டும் என்பதில் பாஜக தெளிவாக இருக்கிறது.. இதற்கு காரணம், திமுகவை எதிர்ப்பதில், ஓபிஎஸ்ஸைவிட எடப்பாடியின் அரசியல், டெல்லி மேலிடத்தை கவர்ந்துள்ளது..

ஜோடனைகள்
திமுகவை யார் எவ்வளவு எதிர்க்கிறார்களோ, அவர்களை பாஜக அரவணைத்தே செல்லும்.. ஆனால், அமித்ஷா சென்னை வந்தபோது, குருமூர்த்தியை சந்தித்ததாகவும், எடப்பாடி பற்றி சலசலக்கப்பட்டதாகவும் செய்திகள் கசிந்தன.. அவையெல்லாம் பொய் தகவல்கள்.. அமித்ஷாவிடம் எடப்பாடியை பற்றி யாருமே தவறான கருத்தை சொல்லவில்லை.. இதெல்லாம் திமுகவும், ஓபிஎஸ்ஸும் சேர்ந்து தயாரிக்கும் ஒப்பனைகள்.. அதிமுக என்றால் அது எடப்பாடி பழனிசாமிதான்.. திமுகவை ஒழிக்க வேண்டுமானால், அதற்கு எடப்பாடி தலைமையிலான கூட்டணிதான் சரியாக இருக்கும் என்ற நம்பிக்கை மேலிடத்துக்கு உள்ளது.. அந்தவகையில் பாஜக தலைவர்கள் தெளிவாகவே இருக்கிறார்கள்..

மச்சக்காரர்
எனினும், சசிகலா, தினகரன், போன்றோரை இணைத்துக்கொண்டால் கூடுதல் பலம் கிடைக்கும் என்று வலியுறுத்துகிறார்களே தவிர, மற்றபடி, கூட்டணி முறியும் அளவுக்கெல்லாம் இரு தரப்புமே செல்ல மாட்டார்கள் என்று அந்த மூத்த பத்திரிகையாளர் அடித்து சொல்கிறார்.. ஆக, பாஜக அல்லாத கூட்டணி என்றாலும் எடப்பாடிக்கு பிளஸ் + பாஜகவுடன் சேர்ந்த மெகா கூட்டணி என்றாலும் எடப்பாடிக்கே பிளஸ் பாயிண்ட்டாக இருக்கிறதே என்ற "வியப்புக்கரிய விவாதங்கள்" இணையத்தில் வட்டமடித்து கொண்டிருக்கின்றன.. பாஜக எப்படி முடிவு செய்தாலும், அதிமுக தொண்டர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதுதானே முக்கியம்.. பார்ப்போம்!!
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம












Click it and Unblock the Notifications