Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"மாஸ்டர் மைன்ட்".. ஓஹோ.. இதுதான் காரணமா.. ஓபிஎஸ்ஸே எதிர்பார்க்கலையாமே.. யாரது எடப்பாடி பழனிசாமியா?

எடப்பாடி பழனிசாமி முக்குலத்தோர் சமுதாய வாக்குகளை பெறுவாரா

Subscribe to Oneindia Tamil

சென்னை: பசும்பொன்னுக்கு எடப்பாடி பழனிசாமி இந்த முறையும் செல்லவில்லை.. நந்தனம் தேவர் சிலையிலேயே மரியாதை செலுத்த போகிறார்.. ஆனால், பசும்பொன்னுக்கு ஏன் எடப்பாடி செல்லவில்லை என்ற யூகமான தகவல் தற்போது வட்டமடித்து வருகிறது.

முத்துராமலிங்க தேவரின் 115வது ஜெயந்தி விழா பசும்பொன்னில் வரும் அக்டோபர் 30ம் தேதி நடக்க போகிறது.. இதனை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை செலுத்த உள்ளனர்.

ஜெயலலிதா இருந்தவரை பெரும்பாலும் தேவர் ஜெயந்திக்கு பசும்பொன் சென்றுவிடுவார். அவருக்கு பிறகு, எடப்பாடியும், ஓபிஎஸ்ஸும் அந்த வழக்கத்தைத் தொடர்ந்தார்கள்.

 மாயத்தேவர்

மாயத்தேவர்

ஆனால் கடந்த முறை எடப்பாடி பசும்பொன்னுக்கு செல்லவில்லை.. இந்த முறை தேவர் ஜெயந்தி நிகழ்வை முன்னிட்டு பசும்பொன்னுக்கு அஞ்சலி செலுத்த எடப்பாடி பழனிசாமி வருவாரா? அப்படி வந்தால், ஓபிஎஸ் - சசிகலா இணைந்து வருவார்களா? என்பன போன்ற கேள்விகள் தமிழக அரசியலில் சுழன்றடித்தது. ஏற்கனவே வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கிய விவகாரத்தில், தேவர் ஜெயந்திக்கும் எடப்பாடி வராமல் போனது, தென்மண்டலத்தில் அதிருப்தியை கூட்டியது.. அதேபோல, மாயத்தேவருக்கும் எடப்பாடி பழனிசாமி செல்லவில்லை..

 அக்மார்க் முத்திரை

அக்மார்க் முத்திரை

இப்போது மீண்டும் தேவர் ஜெயந்தி வரஉள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி என்ன செய்ய போகிறார்? என்ற எதிர்பார்ப்பு எகிறியது.. எடப்பாடி பழனிசாமியை முக்குலத்தோருக்கு எதிரானவர் என்கிற முத்திரையை குத்த, அந்த தேவர் ஜெயந்தி வாய்ப்பு எந்த அளவுக்கு சசிகலா, ஓபிஎஸ் தரப்புக்கு உதவியதோ, அதுபோலவே மாயத்தேவருக்கு அஞ்சலி செலுத்த எடப்பாடி செல்லாததையும் தங்களுக்கு சாதகமாக ஓரளவு பயன்படுத்தி கொண்டது என்றே சொல்லலாம். ஆனால், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் கடந்த முறை போலவே இந்த முறையும் பசும்பொன்னுக்கு செல்லவில்லை.

கேன்சல்

கேன்சல்

சில நேரம் பசும்பொன்னிற்கு நேரடியாக சென்று மரியாதை செலுத்துவோம், அதிலெல்லாம் உள்நோக்கம் கற்பிக்கக் கூடாது என்று ஜெயக்குமார் காரணம் சொல்லி உள்ளார். இந்த காரணம் ஒருபக்கம் இருந்தாலும், நிஜமாகவே ஏன் எடப்பாடி பசும்பொன்னுக்கு செல்லவில்லை என்ற தகவல் கசிந்து வருகிறது... தேவர் சமூகத்தின் மிகப்பெரிய பிம்பமாக ஓபிஎஸ் தன்னை காட்டிக்கொள்ளும்போது, அதை நொறுக்கி தள்ள, நீங்களும் கட்டாயம் பசும்பொன் செல்ல வேண்டும் என்று எடப்பாடிக்கு அவரது ஆதரவாளர்கள் எடுத்து சொன்னார்களாம்...

 பக்கா ப்ளான்

பக்கா ப்ளான்

ஆனால், பசும்பொன் செல்லும்போது, அங்கே ஓபிஎஸ் தரப்பினர் திட்டமிட்டு ஏதாவது கலாட்டா செய்துவிட்டால் என்னாவது? இதை வைத்தே ஓபிஎஸ் டீம் அனுதாபம் தேடி கொள்ள முயலலாம்.. இதனால், தேவர் சமூகத்தின் கொஞ்ச நஞ்சம் ஆதரவையும் தாம் இழக்க வேண்டி வந்துவிடுமே? இதற்கெல்லாம் தேவையில்லாமல் இடம்கொடுக்காமல் இருக்க வேண்டுமானால், பசும்பொன்னுக்கு போகாமல் இருப்பதே நல்லது" என்று எடப்பாடி தரப்பு முடிவு செய்துவிட்டதாம்..

 மாஸ் அஸ்திரம்

மாஸ் அஸ்திரம்

இருந்தாலும், தொடர்ந்து பசும்பொன்னுக்கு 2வது முறையாக செல்லாமல் இருப்பதால், எடப்பாடி பழனிசாமிக்குதான் மேலும் பின்னடைவு ஏற்படும் என்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்.. அதுமட்டுமல்ல, ஓபிஎஸ்ஸுக்கு பயப்படும்படியான சூழல் தற்போது எடப்பாடிக்கு வந்துவிட்டதா? அவர் ஒருவருக்காக, ஒட்டுமொத்த தேவர் வாக்குகளை இழக்க நேரிடுவதா? என்றும் கேள்வி எழுப்புகிறார்களாம்.. எனினும், தேவர் சமூக ஆதரவை அள்ளுவதற்கு, எடப்பாடி பழனிசாமி ஏதாவது மெகா அஸ்திரத்தை கையில் நிச்சயம் வைத்திருப்பார், அதை கூடிய சீக்கிரம் பிரயோகிப்பார் என்றும் சொல்கிறார்கள்.. பார்ப்போம்..!!!

தூண்டில்

தூண்டில்

இதனிடையே இன்னொரு தகவலும் வெளியாகி உள்ளது.. சமீபகாலமாகவே தென்மண்டலத்தை சேர்ந்த அதிமுக புள்ளிகள், ஓபிஎஸ்ஸை விமர்சிக்காமல் உள்ளதாக கூறப்படுகிறது.. பேட்டிகள், அறிக்கைகளில்கூட ஓபிஎஸ்ஸின் பெயரை பயன்படுத்தாமல் உள்ளார்களாம்.. எந்த சூழலிலும் ஓபிஎஸ்ஸை இவர்கள் விமர்சிப்பதே கிடையாதாம்.. இந்த விஷயத்தை கேள்விப்பட்டு, எடப்பாடி பழனிசாமி ரொம்பவே டென்ஷனாகி இருப்பதாகவும், அவர்கள் யார் யார் என்பதை லிஸ்ட் எடுக்கவும் சொல்லி இருந்தாராம்.. அதேபோல, எடப்பாடி டீமில் உள்ள முக்கிய நபர்குளக்கும் வலையை ஓபஎஸ் விரித்தததாகவும் கூறப்பட்டது.. அந்தவகையில், வரப்போகும் தேவர் ஜெயந்தியன்று, ஓபிஎஸ் தரப்புக்கு யார் யார் செல்கிறார்கள் என்பதையும் கண்காணிக்க சொல்லி உள்ளதாம் எடப்பாடி தரப்பு.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+