தைலாபுரம் தோட்டத்தில் கண்கள் சிவந்த காந்தி.. ஆனானப்பட்ட ராமதாஸாலேயே முடியாதது சாத்தியமா? பரபர பாமக
சென்னை: பாமகவில் டாக்டர் ராமதாஸ். அன்புமணி இடையிலான மோதல் கட்சியின் தலைமை விவகாரத்துடன் முடிந்துவிட்டாலும், அதன் தாக்கம் இன்னும் தொடரவே செய்கிறது.. இப்போது ராமதாஸின் மூத்த மகள் காந்தி புதிய அரசியல் அமைப்பை தொடங்க முடிவு செய்துள்ளார்.,, டிசம்பர் 6-ம் தேதி அவர் எடுக்கப்போகும் இந்த முடிவுக்கு பின்னால் இருக்கும் காரணங்கள் பாமகவில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.. அதை பற்றின எக்ஸ்ளுசிவ் தகவல் ஒன்று நமக்கு கிடைத்துள்ளது..!!
பாமகவின் நிறுவனர் டாக்டர் ராமதாசின் மூத்த மகளும், பாமக தலைவர் டாக்டர் அன்புமணியின் சகோதரியுமான காந்தி, டிசம்பர் 6-ந்தேதி புதிய அரசியல் அமைப்பை துவக்கவிருக்கிறார். டாக்டர் ராமதாசின் ஆசியுடன் இந்த அமைப்பை துவக்கவிருப்பதாக பாமகவின் மூத்த நிர்வாகிகள் சொல்கிறார்கள்.

பாமக டாக்டர் ராமதாஸ்
ஆனால், "காந்தி துவக்கவிருக்கும் புதிய அரசியல் அமைப்பு, பாமகவிற்கு பின்னடைவை ஏற்படுத்தும், உங்களுக்கு எதிராக துவக்கப்படுவதாகவும், அதனால் அந்த அமைப்பை காந்தி துவக்கக்கூடாது என அய்யா ராமதாசிடம் சொல்லுங்கள்" என்றும் அன்புமணியிடம் பாமகவினரே சொன்னார்களாம்.
அதற்கு அன்புமணி, "எந்த புதிய அமைப்பும் பாமகவை பலகீனப்படுத்திட முடியாது.. அவர் பாட்டுக்கு ஏதாவது செய்துக்கிட்டு இருப்பார். அதையெல்லாம் யோசி குழப்பிக்காதீங்க.. கட்சி வேலையை பாருங்க" என்று அட்வைஸ் செய்கிறாராம்.
புதிய அரசியல் அமைப்பை தொடங்கும் ஐடியா காந்திக்கு ஏன் ஏற்பட்டது? என ஐயா ராமதாஸ்க்கு நெருக்கமான பழைய கால சீனியர்கள் தரப்பில் நாம் விசாரித்தோம்.
அன்புமணி ராமதாஸ்
அப்போது அவர்கள் நம்மிடம் பேசும்போது, "அய்யாவுக்கும் அன்புமணிக்கும் மோதல் உருவாகி இரு துருவங்களாக அவர்கள் செயல்பட்டபோது, அய்யாவால் கட்சிக்குள் அழைத்து வரப்பட்டவர் காந்தி. கட்சியின் செயல் தலைவராகவும் நியமித்தார். ஒரு கட்டத்தில் அப்பா, மகன் இருவருக்குமான மோதல் முற்றுப்பெற்று, பாமகவை மொத்தமாக அன்புமணியிடம் அய்யா ஒப்படைத்துவிட்டார். இந்த முடிவை எடுக்க நீதிமன்ற முடிவுகளும் அன்புமணிக்கு சாதகமாக இருந்தது.
அன்புமணிதான் பாமகவின் தலைவர் என்றானதும், அய்யாவை நம்பி அவரது பின்னால் நின்ற பாமக நிர்வாகிகளின் நிலை என்ன என்பது குறித்த கேள்வி எழுந்தது. அய்யா பின்னால் நின்ற நிர்வாகிகளை அன்புமணி அரவணைத்தாலும், அவர்களுக்குரிய கட்சி பதவிகள் தருவதில் முரண்பட்டார் அன்புமணி. குறிப்பாக, காந்திக்காக அன்புமணியிடம் பேச்சுவார்த்தை நடத்தினார் அய்யா ராமதாஸ்.
காந்தியின் புதிய அமைப்பு
பாமகவின் செயல் தலைவர் அல்லது பாமகவின் மகளிர் அணியின் மாநில தலைவர் அல்லது பாமகவின் வன்னியர் சங்கத்தின் மாநில தலைவர் என 3 முக்கிய பொறுப்புகளில் ஏதாவது ஒன்றில் காந்தியை நியமிக்க வேண்டும் என்று அன்புமணியிடம் அய்யா ராமதாஸ் அழுத்தம் கொடுத்தார். ஆனால், இதற்கு அன்புமணி சம்மதிக்கவில்லை.
சில நாட்கள் போகட்டும், அன்புமணியே ஒப்புக்கொள்வார் என சொல்லி காந்தியையும் சமாதானப்படுத்தினார் அய்யா. ஆனால், கிட்டத்தட்ட 5 மாதங்கள் கடந்து விட்ட நிலையிலும், காந்திக்கு எந்த பொறுப்பும் கொடுக்கப்படவில்லை.
கண்கள் சிவந்த காந்தி
இரண்டு வாரங்களுக்கு முன்பு இது குறித்து ராமதாசிடம் பேசியிருக்கிறார் காந்தி. தைலாபுரம் தோட்டத்தில் இது தொடர்பான நீண்ட விவாதம் அப்பாவுக்கும் மகளுக்கும் நடந்திருக்கிறது. காந்தியை வைத்துக்கொண்டே, அவருக்கான பதவி குறித்து அன்புமணியிடம் பேசினார் அய்யா. ஆனால், எடுத்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்பதை அழுத்தமாக மறுத்துள்ளார் அன்புமணி.
இதனைக்கேட்டு கோபமான காந்தி, நானும் ஒரு அரசியல் அமைப்பை தொடங்குகிறேன். என் சக்தியை காட்டுகிறேன். நம் சமூகத்திலும் பாமகவிலும் இருக்கும் பெண்கள் அனைவரும் எனது பின்னால் வருவார்கள். அப்போது தனது தவறை அன்புமணி உணர்வார்" என்று சொல்லி விட்டுப்போனார் காந்தி.
பாமகவில் பரபரப்பு
அதன் தொடர்ச்சித்தான், டிசம்பர் 6-ந்தேதி புதிய அரசியல் அமைப்பை தொடங்குகிறார். இதற்கு டாக்டர் அய்யாவின் ஆசியும் ஆதரவும் இருக்கிறது. மேலும், அந்த அமைப்புக்கு பின்னால் இருந்து உதவி செய்யுமாறு ஜி.கே. மணி உள்ளிட்ட தனது நலன்விரும்பிகளான ஆரம்பகால சீனியர்களை கேட்டுக்கொண்டுள்ளார் அய்யா ராமதாஸ்" என்று இந்த தகவல்களையெல்லாம் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்கள் சீனியர்கள்
ஆளானப்பட்ட ராமதாஸாலேயே அன்புமணியின் தலைமையை பலகீனப்படுத்த முடியவில்லை.. காந்தி எல்லாம் எம்மாத்திரம்? " என்கிற குரல் பாமக தரப்பில் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளதாம்..!!!
- நமது சிறப்பு நிருபர் எழில்


Click it and Unblock the Notifications
