Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அல்லோகல்லப்படும் கூட்டணி.. ஆரம்பித்த எடப்பாடி.. அசராத பாஜக.. அப்ப திமுகவை ஓவர்டேக் செய்யுமா அதிமுக?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசியிருக்கிறார்.. என்ன நடக்கிறது அதிமுகவில்?

4 வருடங்களுக்கு முன்பேயே, குடியுரிமை சட்டம், சிஏஏ போன்ற விவகாரங்கள் சிறுபான்மையினர் மத்தியில் அதிருப்தி அலையை உருவாக்கியிருந்தது. அப்போதே மூத்த தலைவர் அன்வர்ராஜா, எடப்பாடி பழனிசாமியிடம் இந்த அதிருப்தி குறித்து பலமுறை எடுத்து சொன்னாராம்.

Can GK Vasan alliance without BJP and what are the Major Strategies of AIADMK Edappadi Palanisamy

ஓபிஎஸ்: இதையடுத்து, பாஜகவை கூட்டணியிலிருந்து கழட்டிவிட, எடப்பாடியும் முடிவெடுத்தபோதுதான், திடீரென ஓபிஎஸ் உள்ளே புகுந்து, அப்போது ஆட்டத்தை கலைத்துவிட்டாராம். அதனால்தான், கடந்த முறையும் பாஜகவுடன் அதிமுகவுக்கு கூட்டணி தொடர நேர்ந்துவிட்டதாம்.

தற்சமயம், அதிமுக + பாஜக இடையேயான கூட்டணி முறிந்துவிட்டதாக எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வமாக அறிவித்ததுடன், இப்போதுவரை, செல்லும் இடங்களில் எல்லாம் மீண்டும் மீண்டும் உறுதிபடுத்தியவாறே இருக்கிறார்.

கூட்டணி என்ன: கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது தொடர்பாக தமிழக தலைவர்கள் கருத்து தெரிவிக்க வேண்டாம் என்று பாஜக மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம் அன்றைய தினமே உத்தரவிட்டிருந்தார். அப்போதிருந்து இப்போதுவரை பாஜக அமைதி காத்தபடியே உள்ளது. ஆனால், அதிமுகவோ தங்கள் நிலைப்பாட்டில் உறுதியை நிலைநாட்டியபடியே வருகிறார்கள்.

இப்படிப்பட்ட சூழலில் தேர்தலும் நெருங்கி வருகிறது.. கடந்த முறை அதிமுகவின் சறுக்கலுக்கு காரணமே, பலவீனமான கூட்டணியும், தேர்தல் வியூகமும்தான் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்திருந்தார்கள். அதற்கேற்றவாறு, திமுக கூட்டணி பலம்வாய்ந்த கூட்டணியாக திகழ்ந்தது.. கிட்டத்தட்ட அதுபோன்ற ஒரு சூழலே இந்த முறையும் உருவாகிவிடும்போல தெரிகிறதாம். காரணம், இதுவரை அதிமுகவில் கூட்டணி முடிவாகவில்லை.. உறுதியாகவுமில்லை..

செங்கோட்டையன்:
அதிமுகவை பொறுத்தவரை 2 வகையான டீம்கள் உள்ளன.. சீனியர்கள் ஜெயக்குமார், சிவி சண்முகம், கேபி முனுசாமி, தம்பிதுரை, செங்கோட்டையன் போன்றோர் எல்லாமே ஓரணியிலும், தங்கமணி, வேலுமணி, விஜயபாஸ்கர் என பாஜகவுக்கு ஆதரவாளர்கள் மற்றொரு அணியிலும் உள்ளதால், எப்படியும் பாஜகவை கூட்டணியிலிருந்து இழக்க வாய்ப்பிருக்காது என்றே நம்பப்பட்டது.

ஆனால், அப்படியொரு பிளவு அதிமுகவுக்குள் ஏற்படவில்லை.. எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைத்து தலைவர்களுமே ஒன்றிணைந்து காணப்படுவது கட்சிக்கான பலத்தை கூட்டியுள்ளது.

அதிர்ச்சி: அதேசமயம், ஏற்கனவே கூட்டணியிலிருந்த டாக்டர் கிருஷ்ணசாமி, ஜிகே வாசன், ஜான்பாண்டியன், ஏ.சி.சண்முகம், போன்றோர், இதுவரை கூட்ணிக்கான ஆதரவை அதிமுகவுக்கு தரவில்லை.. பாஜகவுக்கும் ஆதரவு தரவில்லை. கூட்டணியிலிருந்து பாஜகவை கழட்டிவிடுவதாக அதிமுக அறிவித்ததுமே, அனைத்து கூட்டணி தலைவர்களுக்குமே இது அதிர்ச்சியைதான் தந்திருந்தது.. அதனால்தான், இரு தரப்பையும் சமாதான முயற்சியை மேற்கொள்ள போவதாக சொன்னார்கள்.

ஒருமுறை தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன் ஒரு பேட்டி தந்திருந்தார்.. அதில், "3வது அணி என்றெல்லாம் இப்போது பேச தேவையில்லை.. நல்லதையே நினைப்போமே.. அதிமுக - பாஜக இருவருமே சேரக்கூடும்" என்றார்..

கிருஷ்ணசாமி:
இதையேதான் புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமியும் சொல்லியிருந்தார்.. இதையேதான், தமாகா தலைவர் வாசனும் சொல்லியிருந்தார்.. அதனால்தான், வாசன் "எந்த கூட்டணியிலும் இப்போதைக்கு தமாகா. இல்லை" என்று செய்தியாளர்களிடம் 2 மாதங்களுக்கு முன்பு அறிவிக்கவும் நேர்ந்தது.

அதுமட்டுமல்ல, கடந்த மாதம் நம்முடைய ஒன் இந்தியாவில் ஒரு பிரத்யேக செய்தி வெளியிட்டிருந்தோம்.. அதாவது, சென்னை ஏர்போர்ட்டில், எடப்பாடியை எதேச்சையாக சந்திக்க நேரிட்டதாம். அப்போது, ஏர்போர்ட்டிலேயே இருவரும் 30 நிமிடம் பேசியிருக்கிறார்கள்.. பாஜகவை கூட்டணியில் சேர்த்து கொள்ளும்படி, வாசன் வலியுறுத்தினாராம். ஆனால், எடப்பாடியின் பிடிவாதத்தை வாசனால் தகர்க்கவே முடியவில்லையாம்.

பாஜக : "பாஜகவுடனான கூட்டணிக்கு இனி வாய்ப்பே இல்லை. இது பாஜக தலைமைக்கே உறுதியாக தெரியும். ஆனால், நீங்கள் எங்களுடன் இருக்க வேண்டும் என விரும்புகிறோம்" என்று சொன்னாராம் எடப்பாடி பழனிசாமி.

விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளநிலையில், மீண்டும் ஜிகே வாசன், எடப்பாடி பழனிசாமியை நேற்று சந்தித்து பேசியிருக்கிறார்.. பாஜகவை கூட்டணிக்குள் கொண்டுவருவதற்கான மீண்டும் துவங்கப்பட்டுள்ளதா? அல்லது அதிமுக கூட்டணிக்குள் வாசன் வரப்போகிறாரா? என்று தெரியவில்லை..

வாசன் முடிவு: வாசனை பொறுத்தவரை மேலிட பாஜக தலைவர்களின் நேரடி அன்பையும், நம்பிக்கையை பெற்றவர்.. தமாகாவை பாஜகவுடன் இணைக்க போவதாக பலமுறை செய்திகள் கசிந்திருந்தது..

அதுமட்டுமல்ல, வாசனுக்கு எம்பி சீட் தரப்போவதாக, 3 முறை பாஜக தரப்பில் சொல்லப்பட்டதாம்.. எனவே, அவரது கூட்டணி முடிவு என்னவாக இருக்கும் என்றும் தெரியவில்லை. அதேசமயம் வாசன் போன்றோர் அதிமுக கூட்டணியில் இணைந்தாலும்கூட, திமுகவுக்கு இணையாக மெகா கூட்டணியை நிர்ணயிக்க வேண்டிய கட்டாயமும், நெருக்கடியும், எடப்பாடி பழனிசாமிக்கு இன்று ஏற்பட்டுள்ளது.

ஆக, கடந்த பொதுத்தேர்தல் சிறுபான்மையினர் வாக்குகளில் கிட்டத்தட்ட 69 சவீதத்தை திமுக கூட்டணி வாங்கியிருந்தது.. இந்தமுறை எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகள் எடப்பாடியுடன் கைகோர்த்துள்ள நிலையில், சிறுபான்மையினர் ஆதரவு அதிமுகவுக்கு ளபெருகுமா? பாஜகவை கழட்டிவிட்டதற்கான பலனை அதிமுக அறுவடை செய்யுமா? அல்லது வழக்கம்போல் இந்தமுறையும் சிறுபான்மையினர் ஓட்டுக்களில் திமுகவே ஸ்கோர் செய்யுமா? தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+