"கிளம்பி வரட்டா".. மேலிடம் காதை கடித்த "லீடர்".. மிங்கிள் ஆக முடியுமா? பாஜகவில் இணையும் தமிழக கட்சி
ஜிகே வாசனின் தமாகா, பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன
சென்னை: தமிழக அரசியல் களம் சூடாகி உள்ளது.. எம்பி தேர்தலுக்கான பேச்சுவார்த்தைகளும், கூட்டணி விவகாரங்களும் தலைதூக்கி வருகின்றன.. திமுகவுக்கு எதிராக, கூட்டணி அமைக்க போவது யார்? வரும் தேர்தலில் யாருடைய தலைமையில் கூட்டணி அமைய போகிறது? என்ற எதிர்பார்ப்புகள் எழுந்து வரும் நிலையில், பாஜக எடுத்து வரும் "மூவ்" குறித்த தகவல் ஒன்று நமக்கு கிடைத்துள்ளது.
ஒருங்கிணைந்த அதிமுகவை எதிர்நோக்கும் பாஜக, தனியாக நின்று தேர்தலை சந்திக்கவும் ரெடியாகி வருகிறது. அந்தவகையில், சில முக்கிய கட்சிகளின் ஆதரவையும் கோரி நிற்கிறது.
அந்தவகையில் முதல் வலையை வாசனிடம் வீசி உள்ளது.. பாஜகவுக்கு நெருக்கமானவராக வாசன் கருதப்பட்டு வந்தாலும், தமாகாவை தனித்தே இயக்கி வருகிறார்.. எனினும், இந்த முறை வாசனிடம், புது டீல் ஒன்றை பேசியிருக்கிறது பாஜக மேலிடம்

3 புள்ளிகள்
அதன்படி, "உங்களை மத்திய அமைச்சராக்குகிறோம். பாஜகவில் இணைந்துவிடுங்கள்" என்று கூறியுள்ளனர்.. இதே கோரிக்கையை பாஜக மேலிடம் 3 முறை வைத்தும், அப்போதெல்லாம் அன்புடன் மறுப்பு தெரிவித்திருந்தார் வாசன்.. ஆனால், இந்த முறை இதே வேண்டுகோளை பாஜக வைக்கவும், சற்று யோசித்துள்ளார்.. மேலும், தன் கட்சியினரிடம் கலந்து பேசிவிட்டு சொல்கிறேன் என்றும் சொல்லியிருந்தார்.. அதன்படியே, சமீபத்தில் சென்னையில் நடந்த செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகளிடம் இதை பற்றி கருத்து கேட்டுள்ளார் வாசன்..

மிங்கிள்
அவர்களில் 70 சதவீதம் பேர், வாசன் மத்திய அமைச்சராக வேண்டும், அதற்கு கைமாறாக, கட்சியை பாஜகவுடன் இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்களாம்.. "உங்களுக்கான முக்கியத்துவமும் பாஜக தொண்டர்களிடம் நாம் மிங்கிள் ஆக முடியும்ங்கிற பட்சத்தில் கோரிக்கையை கன்சிடர் பண்ணலாம்" என வாசனுக்கு மூத்த நிர்வாகிகள் சொல்லியிருக்கிறார்கள்... பிறகு அதற்கான ஒப்புதல் கடிதத்தையும் வாசனிடம் தமாகா நிர்வாகிகள் தந்துள்ளனர்.. இதையடுத்து, வரும் புத்தாண்டில் இந்த இணைப்பு சாத்தியமாகும் என்கிற தகவலும் வெளியானது.. ஆனால், இதில்தான் தற்போது ஒரு சிக்கல் எழுந்துள்ளதாம்..

முட்டுக்கட்டை
தமாகாவில் உள்ள சிலர், இதற்கு முட்டுக்கட்டை போடுகிறார்களாம்.. அவர்கள் வாசனிடம், "தமாகா தொண்டர்கள் காங்கிரஸ் உணர்வாளர்கள். அவர்களால் பாஜகவில் எப்படி எளிதாக ஐக்கியமாக முடியும்? அதனால், காங்கிரசில் மீண்டும் இணைவதற்கு முயற்சித்துப்பார்க்கலாமே? மாநில தலைவரை மாற்ற மேலிடம் ஆலோசித்து கொண்டிருக்கிறது.. இதற்கு சரியான நபர் யாரும் இல்லை.. அதனால்தான், மாநில தலைவரை இங்கு இன்னமும் மாற்றாமல் இருக்கிறார்கள் என்று தகவல் வருகிறது. அதனால், காங்கிரசில் இணைய முயற்சிக்கலாமே" என்று வாசனிடம் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

பல்ஸ் ராகுல்
இதனால் வாசன் குழப்பம் அடைந்துள்ளாராம்.. கட்சிக்குள் ஒருபக்கம் ஆதரவு இருந்தாலும், இன்னொரு பக்கம் இப்படி பாயிண்ட்டையும் சீனியர்கள் எடுத்து சொல்லி உள்ளதால், முடிவு எதையும் எடுக்காமல் இருக்கிறாராம்.. அதனாலேயே பாஜகவில் இணையும் எண்ணம் இல்லை என்று சொல்லி வருகிற வாசன், ராகுலின் பல்ஸ் பார்க்க, டெல்லியில் உள்ள தனது சோர்ஸ் மூலம் முயற்சித்து பார்த்திருக்கிறார்... கார்கே மூலம் இந்த தகவல் ராகுலுக்கு சொல்லப்பட்டுள்ளது.. "காங்கிரசிலிருந்து பிரிந்தவர்கள் யார் வேண்டுமானாலும் மீண்டும் காங்கிரசுக்குள் வரட்டும் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால், வாசன் மட்டும் வேண்டாம்" என்று சொல்லிவிட்டாராம் ராகுல்காந்தி.

சைக்கிள் தமாகா
ஏற்கனவே ஒருமுறை இப்படித்தான் வாசன், தமாகவை கலைத்துவிட்டு பாஜகவில் வாசன் இணையப்போகிறார் என்ற செய்தி கிளப்பியது.. "காங்கிரஸ் பாரம்பர்யத்தை சேர்ந்த ஜி.கே.வாசன், மதவாதக் கட்சியான பாஜகவில் சேருவதா? என்று காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவரான கே.எஸ்.அழகிரி அப்போதே விமர்சித்திருந்தார்.. இப்போது ராகுல் காந்தியும் வாசனை தவிர்த்துவிட்ட நிலையில், பாஜகவில் தமாகாவை இணைப்பதை தவிர வாசனுக்கும் வேறு வழியில்லை என்றே தெரிகிறது..!!
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications