Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"பழனி" போட்ட குண்டு.. கிறுகிறுத்து போன தலைவர்கள்.. தூள் தூளாகும் கணக்கு.. 3 ஆகிறதா அதிமுக?

எடப்பாடி, ஓபிஎஸ் பிளவுபட்டு கிடக்க கேசி பழனிசாமி வேறு ஐடியா சொல்லி வருகிறார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: எடப்பாடி ஒருபக்கம், ஓபிஎஸ் மறுபக்கம் என பிரிந்து கிடக்கிறார்களே என்று தொண்டர்கள் வேதனையிலும் வேதனையில் உள்ளனர்.. இந்த சமயத்தில், கட்சி இன்னொரு பார்ட் ஆக உடையும் என தெரிகிறது..!

Recommended Video

    ADMK-வில் அடுத்தது என்ன? OPS-க்கு சவாலாக இருக்கும் EPS

    அதிமுக இப்போது ஓபிஎஸ் அணி, எடப்பாடி அணி என்று இரண்டாக உடைந்திருக்கிறது. .. இதில் எடப்பாடி பழனிசாமி அணியில் ஒருங்கிணைப்பாளர்- இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் தூக்கி எறியப்பட்டுவிட்டன.

    அதற்கு பதிலாக பொதுச்செயலாளர், துணைப் பொதுச் செயலாளர் என்கிற பதவிகள் கொண்டு வரப்பட்டுள்ளன.. இதில் எடப்பாடி பழனிச்சாமி, தற்காலிக பொதுச் செயலாளர் என்று நேற்று நடந்த பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

     புது பொறுப்பு

    புது பொறுப்பு

    அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கம் என்று பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றிய நிலையில், அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி நீக்கம் என்று ஓபிஎஸ் அறிவித்து பதிலடி தந்தார்.. இதன்மூலம் அவர் அடுத்தகட்ட நடவடிக்கைக்கும் தயாராகிவிட்டார் என்பதும் தெளிவாகி விட்டது.. அதுமட்டுமல்ல, ஓபிஎஸ் தலைமையில் பொதுக்குழு கூடுகிறது என்றும், இதில் புதிய மாவட்டச் செயலாளர்கள், நகர செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், மற்றும் கிளை செயலாளர்கள் நியமனம் நடைபெறுகிறது என்றும் கூறப்படுகிறது.

     யதார்த்த களம்

    யதார்த்த களம்

    மேலும், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக கே.சி. பழனிச்சாமி இணை ஒருங்கிணைப்பாளராக நியமனம் செய்யப்படுகிறார் என்றும் தகவல்கள் விறுவிறுவென பரவியது.. ஆனால் யதார்த்த களம், வேறு மாதிரியாக சென்று கொண்டிருக்கிறது.. எடப்பாடிக்கு பதில், கேசி பழனிசாமியை ஆப்ஷனில் ஓபிஎஸ் வைத்திருக்க, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான கே.சி. பழனிசாமியோ, வேறு ரூட்டில் சென்றுள்ளார்.

     மிஸ் ஆகும் கணக்கு

    மிஸ் ஆகும் கணக்கு

    நேற்று இந்த களேபரம் நடக்கும்போது, தனியாக செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதிமுக பொதுச் செயலாளரை தொண்டர்கள் தான் தேர்வு செய்ய முடியும் பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்வு செய்ய முடியாது என்று கூறிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி. பழனிசாமி இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் அதிமுகவை சிதைத்து கொண்டிருப்பதாக குற்றம் சாட்டினார். சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது அவர் சொன்னதாவது:

     கருப்பு நாள்

    கருப்பு நாள்

    "அதிமுக வரலாற்றில் இது ஒரு கருப்பு நாள்.. கடந்த நான்கு ஆண்டுகளாக ஓபிஎஸ் - இபிஸ் தங்களுக்கு தகுந்தார் போல், கட்சியின் விதிகளில் பல மாற்றங்களை செய்திருக்கிறார்கள்.. ஆனால், எளிதில் அவ்வாறு செய்ய முடியாது. ஓபிஎஸ் - எடப்பாடி பழனிசாமி சுயநலத்தால் இவ்வளவு பெரிய சண்டை நடந்துள்ளது.. கடந்த 4 ஆண்டு காலத்தில் இவர்களுக்கு ஏற்றாற் போல் பல்வேறு திருத்தங்களை செய்து மாற்றி உள்ளனர்.. ஆளும் கட்சியை எதிர்த்து பேச கட்சியில் ஆள் இல்லை.. இவர்களுடைய பிளவு பாஜக மற்றும் திமுகவுக்குத் தான் உதவும்..

     பழனிசாமி

    பழனிசாமி

    அதிமுக உறுப்பினர்களை வைத்து பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.. அதிமுகவின் எந்த அணியையும் சாராத பொது உறுப்பினர்களை வைத்து தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கூட்டம் நடத்தப்படும். வருகிற 16ம் தேதி சென்னை கோயம்பேட்டில் இந்த கூட்டம் நடத்தப்பட உள்ளது. எடப்பாடி பழனிசாமியுடன் இருக்கும் அனைவரும் குற்றம் சுமத்தப்பட்டவர்கள்.. இவர்களால் எப்படி மத்திய அரசை எதிர்க்க முடியும்? சின்னம் முடக்கினாலும் பரவாயில்லை..

     40 வருட அரசியல்வாதி

    40 வருட அரசியல்வாதி

    தன்னையும் தன்னை சூழ்ந்திருப்பவர்களை பாதுகாக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி நினைக்கிறார்" என்று கூறியிருந்தார். கே.சி. பழனிசாமியை பொறுத்தவரை, எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதி... 40 வருட காலமாக அதிமுகவில் இருக்கிறார்.. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தர்மயுத்தம் நடத்திய துணை முதல்வர் ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்தார்... ஓபிஎஸ் மறுபடியும் அதிமுகவில் இணைந்த பிறகும் அவரது ஆதரவாளராகவே செயல்பட்டார் கே.சி.பழனிச்சாமி.

     மைனஸ் பாயிண்ட்ஸ்

    மைனஸ் பாயிண்ட்ஸ்

    சசிகலா நியமனம், அதிமுக சட்ட விதிகளில் திருத்தம் உள்ளிட்டவைகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை விரைந்து விசாரணைக்கு வருவதில் தீவிரம் கவனம் செலுத்தியவர் பழனிசாமி ஆவார்.. அதேசமயம், எடப்பாடி மீது நிறைய அதிருப்தி கொண்டவர். என்றாலும், ஓபிஎஸ் மீது ஓரளவு ஆதரவையும் வைத்திருப்பவர்.. தற்போது, அதிமுகவின் எந்த அணியையும் சாராத பொது உறுப்பினர்களை வைத்து இவர் கூட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளது, எடப்பாடி - ஓபிஎஸ் இரு தரப்புக்குமே மைனஸாக பார்க்கப்படுகிறது..

     அலர்ஜி?

    அலர்ஜி?

    ஒருவேளை கேசி பழனிசாமி இந்த முயற்சியை மேற்கொண்டால், இதனால் அதிமுக மேலும் பலவீனமாகும் என்றே தெரிகிறது.. ஆளுக்கு ஒரு பக்கம் ஆதரவாளர்களை திரட்ட ஆரம்பித்தால் கட்சி என்னாவது? எனினும், கேசி பழனிசாமியை வைத்து ஓபிஎஸ் ஒரு கணக்கு போட்டு வரும்போது, எந்த அணியையும் சாராத பொது உறுப்பினர்களை திரட்ட போவதாக குண்டை தூக்கி போட்டுள்ளது குழப்பத்தை தந்துள்ளது.. ஆக மொத்தம், "பழனிசாமி" பெயர் என்றாலே ஓபிஎஸ்ஸுக்கு சற்று சிக்கல்தான் போல..!

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+