"சேலஞ்ச்".. கார்கே ஆட்டம் ஆரம்பம்.. ஒரு சிக்கல் இருக்கே.. சபாஷ் கார்த்தி.. ரவீந்திரன் துரைசாமி பளீச்
ரவீந்திரன் துரைசாமி மல்லிகார்ஜு கார்கே குறித்து ஒன் இந்தியாவுக்கு பேட்டி தந்துள்ளார்
சென்னை: மல்லிகார்ஜுன கார்கே சிறப்பாக செயல்படுவார் என்றாலும், ஒரே ஒரு விஷயத்தில் சிக்கல் எழலாம், ஆனால் அதுகூட சரிசெய்யப்பட்டுவிடலாம் என்று கருத்து கூறியுள்ளார் அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி.
அகில இந்திய காங்கிரஸ் தலைவருக்கான தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே 7,897 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றிருக்கிறார். இதையடுத்து நாடு முழுவதும் கதர் கட்சிக்குள் புதிய மாற்றங்கள் கொண்டுவரப்படும் என்று நம்பப்பட்டு வருகின்றன..
இந்நிலையில், கார்கே வெற்றி பெற்றது குறித்தும், அவரது செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பது குறித்தும், அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமியிடம் கேட்டோம். அதற்கு ரவீந்திரன் துரைசாமி, நம் ஒன் இந்தியாவுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் சொன்ன கருத்துக்கள் இதுதான்:

ரவீந்திரன் துரைசாமி
நேரு குடும்பத்தின் ஆசீர்வாதத்தினால்தான் 90 சதவீத வாக்குகளை பெற்றுள்ளார் மல்லிகார்ஜுனா கார்கே.. சோனியா காந்தி, மன்மோகன்சிங்கின் 10 ஆண்டுகால ஆட்சி எந்தவித பிரச்சனையும் இல்லாமல் சமூகமாக சென்றது.. அதுபோலவே கட்சிக்குள்ளேயும் மல்லிகார்ஜுனா கார்கேவுக்கு அகில இந்திய அளவில் எந்தவிதமான பிரச்சனையையும் உருவாக்காது என்றே நம்புகிறோம்.. ஆனால், ராஜஸ்தான், சட்டீஸ்கர் மாநில முதல்வர்கள், தங்களுக்கு காங்கிரஸ் தலைமை பதவி தேவையில்லை, மாநில முதல்வர் பதவிதான் முக்கியம் என்று சொன்னதையும் நாம் பார்த்தோம்..

சிக்கல் முடிச்சு
சோனியாகாந்தியின் குடும்பமாக இருந்தாலும் சரி, மல்லிகார்ஜுனா கார்கேவின் ஆலோசனையின்படியே இருந்தாலும் சரி, மேற்கண்ட இந்த 2 இடங்களில் ஆளுமை செலுத்துவது என்பது பெரிய விஷயம்.. குதிரைக்கொம்பு என்றே சொல்லலாம்.. அந்த 2 மாநிலங்களிலும் அரசியல் சிக்கல் உள்ளது.. ஆட்சி அவர்கள் 2 பேரின் கையில் உள்ளதால், எந்த அளவுக்கு தங்கள் அதிகாரத்தை கட்சிக்குள் நிலைநிறுத்த போகிறார்கள், அதனால் ஏற்படும் பின்விளைவுகள் என்னென்ன என்பதை இனிமேல்தான் பார்க்க வேண்டும்..

கார்த்திக் சிதம்பரம்
கர்நாடகாவை எடுத்துக்கொண்டால், சித்தராமையா வந்த இடத்தில் மல்லிகார்ஜுன கார்கே வந்திருக்க வேண்டும்.. அது மல்லிகார்ஜுன கார்கேக்கு ஏமாற்றமாகத்தான் இருந்திருக்கும்.. அந்த ஏமாற்றத்தின் விளைவுகள், கர்நாடகத்தில் காங்கிரஸுக்குள் என்ன தாக்கத்தை தரப் போகிறது என்பதையும் இனிமேல்தான் கவனிக்க வேண்டும்.. தமிழ்நாட்டில் பல விமர்சனங்களை கார்த்திக் சிதம்பரம் மீது வைத்தாலும்கூட, டெல்லி, சோனியா, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி இவர்களின் வேட்பாளரையும் மீறி ஜனநாயகத்தின் பக்கம் நின்று, சசிதரூருக்கு ஆதரவு தந்தது பெரிய விஷயம்..

தோதான லீடர்
அதனுடைய தாக்கத்தையும் 2024-ல் எப்படி இருக்க போகிறது என்தையும் பார்க்க வேண்டும்.. இவையெல்லாம் மிகப்பெரிய அளவுக்கு கட்சிக்குள் மாற்றத்தை ஏற்படுத்திவிடாது என்றே தெரிகிறது.. ஆனால், இந்த விஷயத்தில் குறிப்பிட்டு கவனிக்க வேண்டியது, ராஜஸ்தான், சட்டீஸ்கர், கர்நாடகா இந்த 3 மாநிலங்களிலும் என்னமாதிரியான விளைவுகளை ஏற்படுத்தப் போகின்றன என்பதுதான் முக்கியம்.. காங்கிரஸ் ஒற்றுமையை அனைவருமே விரும்புவதால், அதற்கு ஏதுவான, தோதான தலைவர்தான் மல்லிகார்ஜுன கார்கே.. அவரால், அந்த குடும்பத்துக்கும் எந்தவிதமான பிரச்சனையும் வராது..

கன்ட்ரோல்
இருந்தாலும் கர்நாடக விவகாரங்களில் சோனியா குடும்பம் என்ன நினைக்கறது? கார்கே என்ன நினைக்கிறார்? என்பதையும் கவனிக்க வேண்டும்.. காங்கிரஸ் மேலிடம் என்ன சொன்னாலும் அதற்கு கட்டுப்பட்டே செய்வார்.. ஆனால் சொந்த மாநிலம் என்பதாலும், முதல்வர் பதவியை தவறவிட்டதாலும், கர்நாடகாவில் மட்டும் தன் விருப்பப்படியான முடிவுகளை கார்கே எடுக்க வாய்ப்புள்ளது.. ஒருவேளை கார்கே இதை வெளிப்படுத்தும்போது, மேலிடமும் அதற்கு நிச்சயம் ஒப்புக் கொள்ளும் என்றே தெரிகிறது.. ஒரு மாநிலத்தை விட்டுக்கொடுத்தால்தான், மற்ற மாநிலங்களில் தங்கள் எண்ணப்படி கார்கே நகர்வார் என்பதையும் மேலிடம் அறியாமல் இல்லை..

சிதறும் கணக்கு
திமுக காங்கிரஸ் கூட்டணி அல்லது பிற மாநிலங்களில் உள்ள காங்கிரஸ் கூட்டணிகளில் சீட் விவகாரங்கள் தொடர்பாக பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது.. உத்தரபிரதேசத்தில் கூட்டணி கிடையாது.. அதேபோல பீகாரில், காங்கிரஸ் கூட்டணியில் இருப்பதால் தனக்கு லாபமா என்பதிலேயே தேஜஸ்விக்கு மாறுபட்ட கணக்கு உள்ளது.. ஸ்டாலினும் குறைவான சீட்டுதான் தர வாய்ப்புள்ளது.. காரணம், ஸ்டாலினுக்கு இணையான தலைவர் யாரும் இங்கு இல்லை.. எடப்பாடி அலை, ஓபிஎஸ் அலை என்பதெல்லாம் பேப்பரில் வேண்டுமானால் எழுதி கொள்ளலாம்..

மண்குதிரை
ஆனால் நடைமுறையில் அப்படி எதுவுமே இல்லை.. பாஜக எதிர்ப்பில் எடப்பாடி பழனிசாமி இதுவரை சசிகலா மாதிரி மண்குதிரையாகத்தான் இருக்கிறார்.. எடப்பாடியால் தங்களுக்கு ஆக வேண்டியது எதுவுமேயில்லை என்று பாஜகவே சொல்லும்போது, காங்கிரஸ் மட்டும் திமுகவை உதறிவிட்டு, வந்து எடப்பாடியுடன் கூட்டணி வைப்பார்களா என்ன? அதற்கான வாய்ப்புகளும் குறைவுதான்" என்றார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications