Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நிஜம் நிழலாகிறது.. எடப்பாடி பழனிசாமியுடன் இணையும் "பெரிய பிரபலம்".. திமுக மிஸ் பண்ணுதா? சிக்கலாகுமே?

Subscribe to Oneindia Tamil

சென்னை: "கூட்டணி முறிந்தது முறிந்ததுதான், கதம் - கதம்.. இனி மீண்டும் இணைவதற்கு வாய்ப்பே இல்லை" என்று எடப்பாடி பழனிசாமி சொல்லிவிட்டாலும், இதுவரை அதிமுகவுடன் எந்த கட்சியும் கூட்டணியை வைக்கவில்லை. அது தொடர்பான உறுதியான அறிவிப்புகளும் இதுவரை வரவில்லை.

பாஜக கூட்டணியிலிருந்து, இப்போது விலகியிருப்பது, அதிமுகவுக்கு கூடுதல் பலத்தை தந்து கொண்டிருப்பதுடன், பாஜக எதிர்ப்பு வலுவாக உள்ள தமிழகத்தில், அந்த வாக்குகளில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தையாவது இந்த முறை பெற்றுவிடும் என்கிறார்கள்.

Can MNM Kamal Haasan join AIADMK alliance and What are the parties in Edappadi Palanisamys mega alliance

மெகா கூட்டணி: இதற்கு மேலும் வலு சேர்ப்பதற்காகவே, திமுக கூட்டணியிலிருக்கும் சில கட்சிகளையும் தங்கள் பக்கம் கொண்டுவர அதிமுக முயற்சிப்பதாக தெரிகிறது. காரணம், மெகா கூட்டணி வைத்து போட்டியிடுவோம் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்து ஒரு வருடமாகியும், அதற்கான அறிகுறிகள் இதுவரை தென்படவில்லை. யாருடன் கூட்டணி வைக்க போகிறார் என்றும் இதுவரை முடிவாகவில்லை.

ஆனால், திமுகவுக்கு இணையான கூட்டணியை உருவாக்க வேண்டிய கட்டாயம் அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, பாரிவேந்தர், டாக்டர் கிருஷ்ணசாமி, ஏசி சண்முகம், ஜிகேவாசன், ஜான்பாண்டியன் போன்றோருடன் நல்ல இணக்கமான போக்கை அதிமுக கொண்டிருந்தாலும், திமுகவின் வாக்குகளை தங்கள் பக்கம் திருப்ப, பெரிய கட்சிகளின் தயவும் அதிமுகவுக்கு தேவையாக இருக்கிறது.. அதனால்தான், பாமகவிடம் பேச்சு நடப்பதாக சலசலக்கப்படுகிறது.

நிபந்தனைகள்: எனினும், சில நிபந்தனைகள் இரு தருப்பிலுமே போடப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள்.. அல்லது பாஜக பக்கம் பாமக சென்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும் சொல்கிறார்கள். இப்படி இழுபறி நீடித்தவாறே உள்ள நிலையில், பாமக இதுவரை எந்த முடிவையும் வெளிப்படுத்தவில்லை. ஒருவேளை பாஜக பக்கம் பாமக தாவினால், விசிகவை அதிமுகவுக்கு இழுக்கும் முயற்சியும் ஆரம்பமாகும் என்கிறார்கள்.

எனினும், மெகா கூட்டணி அமைக்க, இந்த கட்சிகள் மட்டுமே போதாது என்பதை உணர்ந்துதான், திமுக கூட்டணி கட்சிகளிடமும் பக்கம் வலையை விரிக்க முயன்றது அதிமுக.. ஆனால், அங்கிருந்து யாருமே, இப்போதைக்கு கூட்டணி மாறுவது போல தெரியவில்லை.. எனவே, திமுக கூட்டணியை சாராத கட்சிகள் + பாஜக எதிர்ப்புடைய கட்சிகளுக்கு அதிமுக தூண்டில் வீசிவருகிறதாம்.

சீமான் பளீர்: அந்தவகையில், சீமானிடம் பேசியதாக தெரிகிறது. ஆனால், அவர் கூட்டணிக்கு ஒப்புக்கொள்ளவில்லையாம். இதை சீமானே ஓபனாக செய்தியாளர்களிடம் சொல்லிவிட்டார். இதற்கு பிறகு, அதிமுகவின் "குறி" கமல்ஹாசன் பக்கம் திரும்பியிருக்கிறதாம்..

இதற்கு காரணம், பாஜகவை மிக தீவிரமாக எதிர்த்து வருபவர்களில் கமல்ஹாசனும் ஒருவர். கமலை பொறுத்தவரை, இந்த முறை கூட்டணி வைத்து போட்டியிடுவது என்ற முடிவில் இருக்கிறார்.. அதேசமயம் "பாஜக எதிர்ப்பு" என்பதிலும் உறுதியாக உள்ளார். அதனால்தான், திமுக கூட்டணியில், காங்கிரஸ் தயவுடன் இணைந்து தேர்தலை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

புதிய கட்சிகள்: ஆனால், திமுக கூட்டணியில் ஏற்கனவே "ஹவுஸ்புல்" கட்சிகள் இருப்பதால், புதிய கட்சிகள் இணைவது சிரமம் என்கிறார்கள். அப்படியே கூட்டணியில் இணைந்தாலும், சீட் ஒதுக்கீடுகளில் சிக்கல் எழக்கூடும். அப்படியே சீட் ஒதுக்கினாலும், கமலுக்கு திமுக கூட்டணி ஒத்துவருமா? என்று தெரியவில்லை.

காரணம், மநீம முன்னாள் பிரபலம் கோவை மகேந்திரன், தற்போது திமுகவில்தான் முக்கிய பொறுப்பில் உள்ளார். ஒருவேளை, இந்த முறையும் கோவையில், கமல் போட்டியிட நேர்ந்தால், அதே கோவையை சேர்ந்த மகேந்திரன் உள்ளிட்டோர் இறங்கி, கமலுக்காக வேலை பார்ப்பார்களா? என்ற ஐயம் நிலவுகிறதாம்.

கமல்ஹாசன்: இதுவே, அதிமுகவுடன் கமல்ஹாசன் கூட்டணி வைத்தால், கொங்குவின் மணியான தலைவர்களே, மய்யத்துக்காக இறங்கி வேலைபார்ப்பார்கள், மற்ற "தாராளங்களையும்" அவர்களே கவனித்து கொள்வார்களாம். அதனால்தான், மநீமய்யத்துடன் கூட்டணி வைக்க அதிமுக முயல்வதாக தெரிகிறது.

அந்தவகையில், 1+1 சீட்களை ஒதுக்கி, தேர்தல் செலவையும் ஏற்க அதிமுக முன்வந்தால், கமல்ஹாசன் என்ன முடிவெடுப்பார்? அல்லது 1+1 சீட்டுகளை திமுகவும் ஒதுக்க முன்வந்தால் கமல்ஹாசன் என்ன முடிவெடுப்பார்? ராகுல் உட்பட காங்கிரசுடன் நெருக்கத்தில் உள்ள கமல்ஹாசன், அதிமுகவுடன் கூட்டணி வைப்பாரா? திரையுலகில் உதயநிதியுடன் நெருக்கத்தில் உள்ள கமல்ஹாசன், அதிமுகவுடன் கூட்டணி வைப்பாரா? தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+