சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: ''விவசாயத்தை விட விளையாட்டு தான் ரொம்ப கஷ்டம்'' என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியது பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு நடிகர் தனுஷின் தந்தையும், இயக்குநருமான கஸ்தூரி ராஜா பதிலளித்துள்ளார். ''விவசாயம் தான் நம்பர் ஒன். அதுதான் உயிர் நாடி. ஜீவநாடி. சோறு திங்கலனா எவன்யா உயிரோடு இருக்க முடியும்? சோறு தின்றால் தானே விளையாட்டுக்கு போக முடியும்'' என்று கூறினார்.

முதல்வர் விஜய்யின் அமைச்சரவையில் பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக இருப்பவர் ஆதவ் அர்ஜுனா. இந்நிலையில் தான் 2 நாட்களுக்கு முன்பு சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் ஆதவ் அர்ஜுனா பேசினார்.

can-one-play-without-food-kasturi-raja-raises-question-after-aadhav-arjuna-says-sports-is-more-dif

அப்போது அவர் விவசாயத்தை விட ரொம்ப கஷ்டமான துறை விளையாட்டு துறை என்று கூறினார். இதனால் சிலர் அவரை விமர்சனம் செய்து வருகின்றனர்.

இதுதொடர்பாக ''விவசாயத்தை விட ரொம்ப கஷ்டமான துறை விளையாட்டு துறை. இரண்டையும் சமமாக பார்க்கலாம். ஏனென்றால் விளையாட்டு வீரர் காலை 5 மணிக்கு எழுந்து 6 மணிக்கு மைதானத்தில் இருக்க வேண்டும். 3 மணிநேரம் அவனுடைய பயிற்சி இருக்க வேண்டும். கடினமான வேலைகளை முடித்துவிட்டு தான் பள்ளிகளுக்கு செல்ல வேண்டும். கால்வலி, உடல் வலி இருக்கும். தூக்கம் வரும். 2 ஆயிரம் கலோரிகள் காலையிலேயே போய் இருக்கும்.

இப்படி இருக்கும்போது விளையாட்டு வீரர், வீராங்கனைகள் படிப்பில் சரியாக கவனம் செலுத்த முடியாது. இதனால் தான் பள்ளி கல்வித்துறை அமைச்சரிடம் படிக்கிற பசங்களையும், விளையாடுற பசங்களையும் ஒரே அறையில் வைப்பதே தப்பு. விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பு கவனிப்பு வழங்க வேண்டும் என்று கூறியுள்ளோம் '' என்றார். விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில் ஆதவ் அர்ஜுனா இந்த கருத்தை தெரிவித்தார்.

ஆனால் இந்த கருத்துக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விவசாயத்தை, விளையாட்டு துறையுடன் ஒப்பிட்டு பேசியதை விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தான் சென்னையில் நடந்த படவிழா ஒன்றில் நடிகர் தனுஷின் தந்தையும், இயக்குநருமான கஸ்தூரி ராஜா பங்கேற்று பேசினார். அப்போது அவரிடம் ஒருவர், ''விளையாட்டு அமைச்சர்(ஆதவ் அர்ஜுனா) விவசாயத்தை விட விளையாட்டு தான் கடினமான ஒன்று என பேசி உள்ளார்.. இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?'' என கேட்கப்பட்டது.

அதற்கு கஸ்தூரி ராஜா, ''அவங்ககிட்ட வம்பில் மாட்டிவிடாதீர்கள். அதெல்லாம் நமக்கு தேவையில்லை. ஆனால் விவசாயம் தான் நம்பர் ஒன். அதுதான் உயிர் நாடி. ஜீவநாடி. சோறு திங்கலனா எவன்யா உயிரோடு இருக்க முடியும்? சோறு தின்றால் தானே விளையாட்டுக்கு போக முடியும். விளையாட்டு என்பது இளைஞர்களை கட்டமைப்பது.

ஆனால் விவசாயம் அப்படியானது இல்லை. ஒவ்வொரு உயிர்களையும் காப்பாற்றுவது. உயிருள்ள ஜீவராசிகளுக்கும் விவசாயம் வேண்டும். ஆனால் ஆடு, மாடுகள் எல்லாம் விளையாட்டுக்கு போகிறதா? ஆனால் ஆடு, மாடுகளுக்கும் எல்லாம் விவசாயம் வேண்டும். அதனால் விவசாயத்துடன் எதையும் ஒப்பீடு செய்ய வேண்டாம்'' என்று கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+