சடசடனு சரிய ஆரம்பித்த தங்கம் விலை.. விற்க வேண்டிய நேரம் வந்துவிட்டதா? ஆனந்த் சீனிவாசன் நறுக்
சென்னை: கடந்த சில காலமாகவே தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், அது இப்போது சட்டென சரிய ஆரம்பித்துள்ளது. இதனால் அதிக விலைக்கு வாங்கிய பலரும் தங்கத்தை விற்றுவிடலாமே என்ற ரேஞ்சுக்கு யோசித்து வருகிறார்கள். இதற்கிடையே இது தொடர்பான கேள்விக்குப் பிரபலப் பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார்.
நமது நாட்டில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்தே வந்தது. குறிப்பாக இந்தாண்டு தொடக்கம் முதலே தங்கம் விலை உச்சம் தொட்டு வந்தது. ஒரு சவரன் தங்கம் விலை ரூ.97,000ஐ கூட கடந்திருந்தது. அதன் பிறகு மெல்லச் சரிந்த தங்கம் விலை இப்போது சவரனுக்கு ரூ.92,000 என்று விற்பனையாகி வருகிறது. இப்படித் தடாலடியாக ரூ.5000 குறைந்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

ஆனந்த் சீனிவாசன்
இதனால் இளைஞர்கள், குறிப்பாக இப்போது புதிதாகத் தங்கம் வாங்கிய பலரும், தங்கத்தை விற்றுவிடலாமா என்று கூட யோசிக்க ஆரம்பித்துவிட்டனர். அவர்களின் புலம்பல்களைச் சமூக வலைத்தளங்களில் பார்க்க முடிகிறது. ஆனால், தப்பித் தவறிக் கூட அப்படிச் செய்ய வேண்டாம் என எச்சரிக்கிறார் ஆனந்த் சீனிவாசன். தங்கம் விலை இனி வரும் காலத்தில் எப்படிப் போக வாய்ப்பு இருக்கிறது என்பதையும் அவர் விளக்கியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது யூடியூப் பக்கத்தில், "வெள்ளி பக்கமே போக வேண்டாம்.. ஏனென்றால் வெள்ளி இன்னும் இறங்கும். வெள்ளி இறங்கி செட்டில் ஆக இன்னும் டைம் ஆகும்.. ஏனென்றால் சில்வர் பியூச்சர்ஸ் மார்க்கெட் இன்னும் குறைவாகவே இருக்கிறது.. சில்வரை இன்னைக்கு நீங்க விற்கப் போனால் 140 ரூபாய் கிடைப்பதே லக். ரொம்ப லக்கா இருந்தா 150 ரூபாய் கிடைக்கும்.. அதிகபட்சமாக அது 207 ரூபாய் வரைக்கும் போனது. முக்காவசி பேர் 195, 199 ரூபாயில் வாங்கி இருப்பார்கள்.
தங்கம் என்ன செய்ய வேண்டும்!
அப்போ நீங்கள் தற்போதைய விலையில் இருந்து 40% உயர்ந்தால் தான் வாங்கிய விலையே வரும். அது ஷாட்ர் டேர்மில் இன்னும் 5 முதல் 10% வரை குறைய வாய்ப்பு இருக்கிறது. தங்கத்தைப் பொறுத்தவரை.. உங்கள் முதலீட்டில் அதிகபட்சம் 10% தங்கம் இருந்தால் அது போதும். அதிகபட்சம் 400 கிராம் இருந்தால் போதும். 200 முதல் 250 கிராம் இருந்தால் கூட போதும். அதேநேரம் 400 கிராமுக்கு கம்மியாக இருந்தால்.. அப்பப்போ கொஞ்சம் கொஞ்சமா கன்சிடர் பண்ணலாம்.
ஒரு கிராம் ரூ.20,000
சிலர் இப்போது தங்கம் விலை சரிய ஆரம்பித்துள்ள நிலையில், இப்போது அதை விற்றுவிட்டு மீண்டும் குறையும்போது வாங்கலாமா என கேட்கிறார்கள். அப்படி இப்போது தங்கத்தை யாராவது விற்றால் அப்படியொரு முட்டாள் வேறு யாரும் இருக்க மாட்டார்கள்.. நிச்சயம் உங்கள் வாழ்நாளுக்குள் தங்கம் விலை கிராமுக்கு 20,000 ரூபாய்க்கு போகும். எனவே, தங்கத்தை விற்பது முட்டாள்தனம்.
உங்களுக்குத் தங்கம் வேண்டுமா வேண்டாமா என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். என்னைப் பொறுத்தவரை உங்கள் முதலீட்டில் 10 முதல் 15%க்கு மேல் தங்கம் இருக்கக் கூடாது. அந்த 400 கிராம் ரூல்ஸையும் மறந்துவிடாதீர்கள். விற்பது என்றே பேச்சுக்கே இடமில்லை.. குறையும்போது எல்லாம் அது தங்கத்தை வாங்குவதற்கான ஒரு வாய்ப்பு மட்டுமே.. ஏனென்றால் டாலர் மதிப்பில் தங்கம் அடுத்த ஆண்டுக்குள் அது 5000 டாலருக்கு போய்விடும். (இப்போது அது 4100 டாலர் என்ற ரேஞ்சில் உள்ளது)
தங்கத்தை விற்கலாமா?
இன்னும் சிலர் கையில் இருக்கும் தங்கத்தை விற்றுவிட்டு பங்குகளை வாங்கலாமா.. இல்லை பங்குகளை விற்றுவிட்டு தந்தத்தை வாங்கலாமா எனக் கேட்கிறார்கள். என்னை பொறுத்தவரை இரண்டுமே தவறு.. இரண்டுமே முட்டாள்தனம். இது குதிரை ஓடிப் போன பிறகு கதவை மூடுவது மாதிரி. உங்களிடம் இருக்கிற பணத்தில் ஒரு போர்ஷன்ல தங்கம், ஒரு போர்ஷன் பங்குகளை வாங்குவதே சரியாக இருக்கும்" என்றார்.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ள கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு, உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்












Click it and Unblock the Notifications