பூத் சிலிப் இல்லாமல் ஓட்டு போட முடியுமா? வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: நீங்கள் வெளியூரில் இருந்து இப்போது தான் சொந்த ஊருக்கு ஓட்டுப்போட வந்திருப்பீர்கள்.. அப்படியான நிலையில் பூத் சிலீப் உங்களிடம் இருக்காது. அப்படி உங்களிடம் பூத் சிலிப் இல்லாமல் ஓட்டு போட முடியுமா? இதைப் பற்றிப் பலருக்கும் சந்தேகம் இருக்கிறது.. உண்மையை சொல்வதென்றால் பூத் சிலிப் இல்லாமல் தாராளமாக நீங்கள் ஓட்டுப்போடலாம். அதற்கான விதிமுறைகளை இந்த பதிவில் பார்ப்போம்.

பூத் சிலிப் இல்லாமலேயே ஒருவர் வாக்களிக்க முடியும். அதற்கான விதிமுறைகள் விவரம்:

பூத் சிலிப் முக்கியம் இல்லை.. உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்க வேண்டும் அது தான் வாக்களிக்க மிக முக்கியமான தகுதி, வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருந்தால், பூத் சிலிப் இல்லாவிட்டாலும் நீங்கள் வாக்களிக்கலாம்.

Can one vote without a booth slip Election Commission issues important announcement for voters

பொதுவாக பூத் சிலிப் என்பது நீங்கள் எந்த அறையில், எந்த வரிசை எண்ணில் இருக்கிறீர்கள் என்பதைத் தெரிந்துகொள்ள உதவும் ஒரு தகவல் சீட்டு மட்டுமே ஆகும். அது ஒரு அடையாள ஆவணம் கிடையாது. பலரும் பூத் ஸ்லீப் இல்லாமல் எப்படி ஓட்டுப்போடுவேன் என்று நினைக்கிறார்கள். உங்களிடம் பூத் சிலிப் இல்லை என்றால், தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது 'Voter Helpline' செயலி மூலம் உங்கள் பாகம் எண் மற்றும் வரிசை எண்ணை சில நொடிகளில் தெரிந்துகொள்ளலாம்.

அதேநேரம் உங்களிடம் வாக்காளர் அடையாள அட்டை அல்லது தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள 12 அடையாள அட்டைகளில் (ஆதார், பான் கார்டு, ஓட்டுநர் உரிமம் போன்றவை) ஏதேனும் ஒன்று இருந்தால் தான் வாக்களிக்க முடியும்.

பூத் சிலிப்பை ஆன்லைனில் உங்களுக்கு பார்க்க தெரியாது என்றாலும் கவலைப்பட வேண்டாம். ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கு வெளியேயும் அரசியல் கட்சியினர் அல்லது தேர்தல் அதிகாரிகளின் உதவி மையங்கள் இருக்கும். அங்கேயும் உங்கள் பெயர் எந்த வரிசையில் உள்ளது என்பதைச் சரிபார்த்துக் கொள்ள முடியும்.

இறுதியாக சொல்லவருவது வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்து, உங்களிடம் ஏதேனும் ஒரு அரசு அங்கீகாரம் பெற்ற அடையாள அட்டை இருந்தால், பூத் சிலிப் இல்லாமலேயே உங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றலாம். அதேநேரம் பூத் ஸ்லீப் மட்டுமே இருந்தால் வாக்களிக்க முடியுமா என்றால், அதுவும் முடியாது.

ஏனெனில் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி, பூத் ஸ்லிப் என்பது ஒரு அடையாள ஆவணம் கிடையாது. உங்கள் பாகம் எண் மற்றும் வரிசை எண்ணை நீங்கள் எளிதாகத் தெரிந்துகொள்ள உதவும். பூத் ஸ்லீப் என்பது நீங்கள் எந்த வாக்குச்சாவடி மையத்திற்குச் செல்ல வேண்டும் என்பதைக் காட்டுவதற்கே உதவும்.

வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருந்தால், பூத் ஸ்லிப்புடன் சேர்த்து வாக்காளர் அடையாள அட்டை அல்லது தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள 12 அடையாள அட்டைகளில் (ஆதார், பான் கார்டு, ஓட்டுநர் உரிமம் போன்றவை) ஏதேனும் ஒன்று இருந்தால் தான் வாக்களிக்க முடியும். ஓட்டுப் போடுவதற்கு அரசு அங்கீகரித்த 'ID Proof' கட்டாயம் தேவையாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+