’மாநிலக் கட்சி’ நாதக வாக்கை வெயிட்டாக தாக்கும் விஜய்.. சீனுக்குள் வருவாரா சீமான்! 2026ல் ட்விஸ்ட்
சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் நடவடிக்கைகள் கவனிக்க வைத்துள்ளது. கடந்த மக்களவை தேர்தலில் 8 சதவீத வாக்கை பெற்றதன் மூலம் அங்கிகரிக்கப்பட்ட மாநில கட்சியாக மாறியுள்ளது. இந்த தேர்தலில் சீமான் அதனை தக்க வைப்பாரா என்ற எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது.
1958ஆம் ஆண்டு ஆதித்தனார் தொடங்கிய நாம் தமிழர் கட்சி, காலப்போக்கில் செயலிழந்த நிலையில் இருந்தது. பின்னர் 2010ஆம் ஆண்டு சீமான் தலைமையில் கட்சி மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது. தமிழ் தேசியம், தமிழர் உரிமை, இலங்கைத் தமிழர் பிரச்சனைகளை முன்வைத்து, திராவிட அரசியலுக்கான மாற்று சக்தியாக தன்னை நிலைநிறுத்த முயற்சி செய்து வந்தது.
தற்போது கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவியை வகிக்கும் சீமான், முதல் கட்டமாக மக்களிடையே கட்சியின் வாக்கு வங்கியை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தனித்துப் போட்டியிடும் அரசியல் பாதையைத் தேர்வு செய்தார்.

நாம் தமிழர்
2011 சட்டமன்றத் தேர்தல் மற்றும் 2014 மக்களவைத் தேர்தலில் போட்டியிடாது விலகி நின்ற நாம் தமிழர் கட்சி, 2016 சட்டமன்றத் தேர்தலில் பெரிய முடிவெடுத்து அனைத்து 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டது. அப்போது சீமான் உள்பட போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவம் தோல்வியடைந்தாலும், கட்சிக்கு 1.7 சதவீத வாக்குகள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. அதன்பிறகு நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி 2.15 சதவீத வாக்குகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்தது.
சீமான்
2019 மக்களவைத் தேர்தலிலும் கட்சி மாநில அளவில் 3.9 சதவீத வாக்குகளைப் பெற்றது. மேலும் 22 இடைத்தேர்தல்களில் 3.15 சதவீத வாக்குகள் கிடைத்தன. 2021 சட்டமன்றத் தேர்தலில் 6.6 சதவீத வாக்குகளைப் பெற்று, திமுக, அதிமுகக்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரிய வாக்கு வங்கியைக் கொண்ட கட்சியாக நாம் தமிழர் உருவானது. எந்தக் கூட்டணியிலும் இணையாமல் தனித்துப் போட்டியிட்டு இதை சாதித்தது குறிப்பிடத்தக்கது.
மாநில கட்சி அந்தஸ்து
இந்த சூழலில் தான் கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் 8 சதவீதத்தைத் தாண்டிய வாக்குகளைப் பெற்று, இந்திய தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை அதிகாரப்பூர்வமாக பெற்றது. இப்போது மாநில அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக இருக்கும் நாம் தமிழர் கட்சி, 2026 தேர்தலிலும் தனித்துப் போட்டியிடும் திட்டத்தைத் தெளிவாக அறிவித்துள்ளது. இதன்மூலம் கட்சி தனது அரசியல் அடையாளத்தைத் தொடர விரும்புகிறது.
தமிழக வெற்றி கழகம்
ஆனால் 2026 தேர்தல் நாம் தமிழருக்கு கடுமையான சவால்களையும் கொண்டு வந்துள்ளது. காரணம், நடிகர் விஜய் தொடங்கியுள்ள 'தமிழக வெற்றி கழகம்' முதல்முறையாக தேர்தலில் களம் காண உள்ளது. இதனால் இளைஞர்கள் மற்றும் நகர்ப்புற வாக்காளர்கள் மத்தியில் யார் அதிக ஆதரவைப் பெறுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுவரை மூன்றாம் அரசியல் சக்தியாக தன்னை நிலைநிறுத்த முயன்ற நாம் தமிழர் கட்சிக்கு, இப்போது தவெகவுடனான மறைமுக போட்டியும் தவிர்க்க முடியாததாக இருக்கும்.
இளைஞர் வாக்கு
மேலும், மாநிலக் கட்சி அந்தஸ்தைத் தக்க வைத்துக்கொள்ள நாம் தமிழர் கட்சிக்கு குறைந்தபட்சம் 8 வாக்கு சதவீதம் பெற வேண்டிய அவசியமும் உள்ளது. அதனால், 2026 தேர்தல் சீமான் மற்றும் அவரது கட்சிக்கு ஒரு முக்கியமான சவலாக இருக்கும். கடந்த தேர்தல்களை விட அதிக ஆதரவைப் பெற முடிகிறதா அல்லது அதே நிலைதானா? அல்லது இன்னும் கீழே செல்லுமா? என்பது இந்தத் தேர்தலுக்கு பின்னர் தெரியும்.
-
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
தலைமைச் செயலகமா? தவெக தலைமை அலுவலகமா? வானதி சீனிவாசன் கேள்வி -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள்












Click it and Unblock the Notifications