சோலாரில் மின் உற்பத்தி செய்து அரசுக்கு மின்சாரத்தை அனுப்ப முடியுமா? வீடுகளில் வைப்போர் பாருங்க
சென்னை: சோலார் மூலம் மின்உற்பத்தி செய்து அரசுக்கு மின்சாரத்தை அனுப்ப முடியுமா? என்பது குறித்து மின்சாரம் மற்றும் சோலார் தொடர்பான நிபுணரான பாலு தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அதனை இப்போது பார்ப்போம்.
நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சூரிய ஒளி (சோலார்) மின்சார தகடுகளை அமைக்கும் ஒரு கோடி வீடுகளுக்கு, மாதந்தோறும் 300 யூனிட் மின்சாரம் இலவசம் என்ற அறிவிப்பினை வெளியிட்டிருந்தார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இதுபற்றி நாடாளுமன்றத்தில் பேசும் போது, "சூரிய மின் திட்டம் மூலம் வீடுகளின் மேற்கூரையில் சூரிய ஒளி தகடு (சோலார் பேனல்) அமைக்கும் நாட்டில் 1 கோடி குடும்பங்களுக்கு மாதந்தோறும் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும்.
இந்த திட்டத்தால் சோலார் மின்சார பயன்பாடு மற்றும் உபரி மின்சாரத்தை வினியோகம் செய்யும் நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதன் மூலம் ஆண்டுக்கு ரு.15 ஆயிரம் முதல் ரூ.18 ஆயிரம் வரை ஒவ்வொரு குடும்பமும் மிச்சப்படுத்தும் வாய்ப்பு ஏற்படும். இந்த திட்டம் மின்சார வாகனங்களை சார்ஜ் செய்வதற்கும் உதவும்.
மேலும் உற்பத்தி, நிறுவல் மற்றும் பராமரிப்பு ஆகியவற்றில் தொழில்நுட்ப திறன்களைக் கொண்ட ஏராளமான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் மற்றும் தொழில்முனைவு வாய்ப்புகளையும் இந்த சோலார் திட்டம் வழங்கும்" என்று அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியிருந்தார்.
இந்நிலையில் சோலார் மூலம் மின்உற்பத்தி செய்து அரசுக்கு மின்சாரத்தை அனுப்ப முடியுமா? என்பது குறித்து மின்சாரம் மற்றும் சோலார் தொடர்பான நிபுணரான பாலு தனது சமூக வலைதளங்களில் விளக்கம் அளித்துள்ளார். அதனை இப்போது பார்ப்போம்.
"உங்க வீட்ல கனைக்டிங் லோடு 3kw வைங்க உங்க வீட்டுக்கு இந்த 3kw ல 85% லோடுக்கு தான் நீங்க உங்க வீட்ல சோலார் பவர் உற்பத்தி செய்து EB க்கு அனுப்ப முடியும் அப்படினா 2.550w க்கு தான் உங்க வீட்டு மாடில சோலார் பிளாண்ட் போட முடியும் அப்படி 6 பேனல் (400w மோனோ பெர்க் ) மாட்டினால் நாள் ஒன்றுக்கு சுமார் 9 யூனிட் (எந்த பேனலும் 100% எபிசென்சி இருக்காது 85% 90% தான் இருக்கும்) உற்பத்தி ஆகும்..
மாதம் சுமார் 270 யூனிட் தான் உற்பத்தி ஆகும் நீங்கள் மாத மாதம் 250 யூனிட் யூசேஜ் இருந்தால் , சோலார் வழியாக உங்கள் வீட்டில் உற்பத்தி செய்து EBக்கு நீங்கள் அனுப்பிய 270யூனிட்டில் நீங்கள் உங்கள் வீட்டில் உபயோக படுத்திய 250 யூனிட்டை கழித்து மீதம் இருக்கும் 20 யூனிட்டை உங்கள் கணக்கில் வைப்பார்கள். அந்த யூனிட் ஒரு வருடத்திற்கு உங்கள் கணக்கில் இருக்கும், உங்கள் வீட்டில் சோலார் பவர் உற்பத்தி குறைவாக இருக்கும் போது உங்கள் கணக்கில் இருக்கும் உங்கள் யூனிட்டை கழித்து கொள்வார்கள்..
இது தான் இப்போதைய நடைமுறைல இருக்கு இதே காண்செப்ட்ல தான் (1D) டேரிப்பும் அடுக்கு மாடி குடியிருப்பில் இருக்கும் ஜென்ரல் யூசேஜ் பவர்ம், இதுல முக்கியமாக கவனிக்க வேண்டியது, உங்கள் மாடியில் 400w சோலார் பேனல் மாட்டுவதற்கு 14அடிக்கு 12அடி இடம் வேண்டும் அதற்கான ஸ்டச்சர் டிசைன் உங்க மாடியில் இருக்கும் இடத்தை பொருத்து தான் அமைக்க முடியும்..
முதல் எல்லோரும் ஒன்றை புரிஞ்சுக்கனும் உங்க வீட்டோட கணைக்டிங் லோடு என்னவோ அதோட 85% தான் சோலார் பவர் பிளாண்ட் போட முடியும். வீட்டு லைன்க்கு சிங்கில் பேஸ் லைன் 3kw வாங்கி வச்சிருக்கவுங்க ரேர் தான் இந்தியால ஆரம்ப கட்டத்துல அதிகமான மக்கள் 1kwல இருந்து 1500w தான் சிங்கில் பேஸ் லைன் கனைக்டிங் லோடு வாங்கி வச்சிருப்பாங்க.

அதற்கு தகுந்த மாதிரி தான் உங்கள் ஏரியா ட்ரேன்ஸ்மெசின் இருக்கும் உங்க ஏரியா ட்ரேன்ஸ்மெசின் 500kKVA னா அதோட லோடுல 85% டூ 90% லோடு தான் கனைக்ட் பண்ணியிருப்பாங்க அப்படி இருக்கும் போது எப்படி நம்ம சவுரியத்துக்கு மொட்ட மாடில சோலார் பேனல் போட்டு அதிகமான பவர் உற்பத்தி பண்ணி EB க்கு அனுப்ப முடியும்..?
நம் வீட்டில் மாட்டும் சோலார் பிளாண்ட்க்கு ஆகும் செலவுல கிரீன் எனர்ஜிக்காக மத்திய , மாநில அரசு உங்களது வங்கி கணக்குக்கு கொடுக்கும் மானியம் போக, மிச்ச பணத்த நீங்க தான் கொடுக்க வேண்டும்" இவ்வாறு கூறியுள்ளார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications