Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"அச்சாரம்" போட்ட சாணக்கியன்.. லெஃப்ட்டில் கொங்கு சூரியன்.. ரைட்டில் "தங்கம்".. டாப் கியரில் திமுக..!

எடப்பாடி பழனிசாமி கொங்கு, தென்மண்டலத்தில் ஸ்கோர் செய்ய முடியாது என்கிறார்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஓபிஎஸ் அப்பீலுக்கு டெல்லி போகிறார்.. எனவே, இந்த வழக்கின் உத்தரவு வர காலதாமதம் ஆகும்.. அந்த உத்தரவு வந்தால், அதை எதிர்த்து எடப்பாடி அப்பீலுக்கு போவார்.. அந்த தீர்ப்பு வர காலதாமதம் ஆகலாம்.. இந்த இடைப்பட்ட டைமிங்தான், திமுகவுக்கு அச்சாரமாக இருக்க போகிறதாம்.!

அதிமுக விவகாரத்தை பொறுத்தவரை, சுப்ரீம்கோர்ட் தீர்ப்பே இறுதி தீர்ப்பாக எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.. ஆனால், இந்த தீர்ப்பு வருவதற்கு எப்படியும் காலதாமதமாகும் என தெரிகிறது.

எம்பி தேர்தல் வரை, இந்த பிரச்சனை இழுபறியாகவே இழுத்து செல்லக்கூடும் என்றும் எடப்பாடியின் பிடிவாதமே திமுகவுக்கு பிளஸ் ஆகி கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

 சூழல் - ரோல்

சூழல் - ரோல்

நீதிமன்ற தீர்ப்பு தற்சமயம் எடப்பாடிக்கு சாதகமாக வந்துள்ள சூழலில், அதிமுக யார் கையில் போகும்? ஓபிஎஸ் என்ன செய்ய போகிறார்? இதில் திமுகவின் ரோல் என்ன? என்பது குறித்து நாம் சில அரசியல் நோக்கர்களிடம் பேசினோம்.. அவர்கள் இன்றைய அதிமுகவின் இரு தரப்பு சூழலையும் ஒப்பிட்டு பார்த்து, சில கருத்துக்களை தெரிவித்துள்ளனர். அந்த கருத்துக்கள் இவைகள்தான்:

 கருகும் கலர்

கருகும் கலர்

"பாஜகவை பொறுத்தவரை, அதிமுக விவகாரங்களில் தலையிடவில்லை என்றாலும், அதிகாரம் படைத்த கட்சியாக வளர்ந்துவிடக்கூடாது என்பதிலும் கவனமாக இருக்கிறது.. ஒன்றுபட்ட அதிமுகவாக இருந்துவிட்டால் அது பாஜகவுக்கு பிரச்சனை.. திமுகவுக்கும் பிரச்சனை.. அந்தவகையில் இரு கட்சிகளுமே கவனமாக இருக்கின்றன.. பாஜகவுக்கு அடித்தளமே அதிமுகவின் வாக்கு வங்கி என்பதால், இரு தலைவர்களையும் பகைத்து கொள்ளாமல், அதேசமயம், இருவருக்குமே முக்கியத்துவம் தராமல், தன் பிடியில் கட்சியை வைத்து கொள்ள பார்க்கும்.

 கொக்கி கொங்குவுக்கு

கொக்கி கொங்குவுக்கு

அதேபோல திமுகவை பொறுத்தவரை, ஓபிஎஸ்ஸைவிட, எடப்பாடி பழனிசாமிதான் தங்களுக்கு நேரடி பிரச்சனையாக நினைக்கிறது.. இப்போதைக்கு எடப்பாடி, தென்மண்டலம் + கொங்கு மண்டலம் என இரு பக்கமும் கவனத்தை செலுத்தி வருகிறார்.. கொங்கு மண்டலத்தை எடுத்து கொண்டால், திமுக தன் வசமாக்கும் முயற்சியை என்றோ எடுத்துவிட்டது.. செந்தில்பாலாஜி அந்த வேலையை சிறப்பாக செய்து வருகிறார்.. விரைவில், அதிமுகவின் கொங்கு புள்ளிகள் 2 பேர், திமுக பக்கம் தாவக்கூடும் என்றும் தெரிகிறது.. இந்த ஒருவருடத்திலேயே கொங்கு மண்டலத்தில் திமுகவின் செல்வாக்கு உயர்ந்துள்ளது.

 விஐபி - 2

விஐபி - 2

அதேசமயம், எடப்பாடி பழனிசாமி, இந்த ஒரு வருடமாகத்தான் நிறைய சிக்கலில் உள்ளார்.. உட்கட்சி பிரச்சனை, ஓபிஎஸ் விவகாரம், ரெய்டுகள், விசாரணைகள் என எல்லா பக்கமும் நெருக்கடியில் இருப்பதால், இந்த தருணத்தை, திமுக அறுவடை செய்து கொண்டு வருகிறது.. கொங்குவும் மெல்ல மெல்ல திமுக பக்கம் சாய்ந்து கொண்டிருக்கிறது.. தென்மண்டலத்தை எடுத்துக் கொண்டால், முக்குலத்தோர் சமுதாயத்திடம், எடப்பாடிக்கு ஆதரவு பெருகுவதாக தெரிகிறது.. ஆனால், இதுவும் நிரந்தரமில்லை.. அங்குள்ள அதிமுக மாஜிக்கள், காய் நகர்த்தலால் இப்படி ஒரு மாயை தெரியலாமே தவிர, எடப்பாடி பக்கம் முக்குலத்தோர் மக்கள் அவ்வளவு சீக்கிரம் சாய்ந்துவிட மாட்டார்கள்.

 தங்கதமிழ்செல்வன்

தங்கதமிழ்செல்வன்

ஓபிஎஸ் பக்கம் வராமல் இருப்பார்களே தவிர, எடப்பாடி பக்கம் செல்ல வாய்ப்பில்லை என்பதுதான் உண்மை.. ஓபிஎஸ் + டிடிவி + சசிகலா இவர்கள் இணைந்தாலும், பெரிய அளவுக்கு ஆதரவை தென்மண்டலம் முழுக்க பெற்றுவிட முடியாது.. காரணம், இங்கும் திமுக தன்னுடைய வேலையை காட்ட தொடங்கிவிட்டது.. அதிமுக விவகாரம் தலைதூக்க தொடங்கும்போதே, தங்கதமிழ்செல்வன் இங்கு களமிறங்கி விட்டார்.. தென்மண்டல அதிருப்தியாளர்களுக்கு வலையை வீசி உள்ள நிலையில், அதுகுறித்த சாதகமான முடிவுகள் அடுத்தடுத்த நாட்களில் தெரியவரும்.

 நிஜ லீடர்

நிஜ லீடர்

கொங்கு + தென்மண்டலம் இரண்டிலுமே எடப்பாடிக்கு ஏகோபித்த ஆதரவு கிடைக்க போவதில்லை.. அதிமுக பிரச்சனை தீர்ந்து, இரட்டை இலை, கொடி இவைகளை கைப்பற்றி, கட்சியை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தால் மட்டுமே எடப்பாடிக்கு சான்ஸ் கிடைக்கும்.. இலை, கொடி இல்லாத நிலையில், எடப்பாடியால் அரசியல் செய்ய முடியாது.. இலை, கொடி இல்லாத நிலையில், அவருக்கு யாருக்கும் ஆதரவும் தர மாட்டார்கள்... சுருக்கமாக சொன்னால், தெற்கில் தங்க தமிழ்செல்வன், கொங்குவில் செந்தில்பாலாஜி என இருவரும் சுறுசுறுப்பாக மூவ் செய்து வருகிறார்கள்.. அதிமுகவின் நிஜமான ஒற்றை தலைமை, பாஜகதான் என்பதை அறிந்து, அக்கட்சி தலைவர்கள், செயல்பட வேண்டும், தொண்டர்களையும் நினைத்து பார்க்க வேண்டும்' என்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+