“நாங்க சோஃபா வாங்க கூடாதா? பாஜகவை அடிப்பதை விட திமுகவினர் விசிகவைதான் அடிக்கிறாங்க” - வன்னி அரசு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மயிலாப்பூரில் நடைபெற்ற மிலாடி நபி விழா நிகழ்வில் பேசிய விசிக அமைச்சர் வன்னி அரசு, "நாங்க எல்லாம் சோஃபா வாங்கக்கூடாதா? நீங்க மட்டும்தான் சோஃபா வச்சிருக்கணுமா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை மயிலாப்பூரில் உள்ள கவிக்கோ மன்றத்தில் சீர்மை பதிப்பகம் ஒருங்கிணைத்த 1501வது மீலாதுந் நபி விழா நேற்று (ஆகஸ்ட் 30) மாலை நடைபெற்றது. இந்த விழாவில் தவெக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான், சமூக நீதித் துறை அமைச்சர் வன்னி அரசு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Can t We Buy Sofas Are You the Only Ones Who Should Own Them Asks Minister Vanni Arasu

வன்னி அரசு பேச்சு

இந்த நிகழ்வில் பேசிய சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு, "இன்றைக்கு திமுக தோழர்களும், திமுக ஆதரவாளர்களும், பாஜகவை விமர்சிப்பதை விட, பாஜகவின் செயல்பாடுகளை அம்பலப்படுத்துவதை விட, விடுதலை சிறுத்தைகள் மீது அதிகம் கவனம் செலுத்துகிறார்கள் என்று நான் பார்க்கிறேன். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி என்ன செய்கிறது? யார் என்ன செய்கிறார்கள், விசிக தலைவர் என்ன பேசுகிறார்? எந்த பிரச்சனையில் யார் கைது செய்யப்பட்டார் என்பது குறித்து பதிவு செய்துகொண்டிருக்கிறது.

அதே சமயம் புதிதாக அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் நாங்கள், அமைச்சராக வந்தபிறகு இந்த ஒருநாளில் என்னென்ன பணிகள் செய்திருக்கிறோம்? என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தி இருக்கிறோம்? என்பதை சொல்ல வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது. அதை விட்டுவிட்டு, பாஜக என்ன செய்கிறது? ஆர்.எஸ்.எஸ் என்ன செய்கிறது? என்று மட்டும் பார்த்துக்கொண்டிருப்பது எதற்காக? நம்முடைய நோக்கம் என்ன? நாம் எதை நோக்கி பயணிக்கிறோம்?

நாங்க சோஃபா வாங்க கூடாதா?

பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் குறித்து மட்டும் விமர்சனம் செய்வது எங்கள் முழுநேர அரசியல் அல்ல, அந்த அமைப்புகளின் செயல்பாடுகள், மக்களையும், அரசியலையும், சமூகத்தையும் எவ்வாறு பாதிக்கிறது என்பதை பார்ப்பது தான் முக்கியம். அந்த பின்னணியில் தான் நாங்கள் ஒவ்வொரு விஷயத்தையும் அணுகுகிறோம். மக்கள் உரிமை, சமத்துவம், சமூகநீதி, ஜனநாயகம் இந்த அடிப்படையில் தான் நம்முடைய அரசியல் பயணம் தொடர்ந்து செல்ல வேண்டும்.

சட்டசபையில் சோஃபா என்று சொன்னாலே பேசக் கூடாது என்று சொல்கிறார்கள். நாங்கள் சோஃபா வாங்கக் கூடாதா? எல்லாருக்கும் சோஃபா என்பது தான் திராவிட மாடல். நீங்க மட்டும் தான் சோஃபா வச்சிருக்கணுமா? திமுகவினர் பாஜகவை அடிப்பதை விட விசிகவை தான் அதிகமாக அடிக்கிறார்கள். எதை நோக்கிச் செல்கிறது திமுக?" எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.

சோஃபா மாடல் என விமர்சனம்

2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தமிழகத்தில் தவெக தலைமையில் புதிய ஆட்சி அமைப்பதற்கான அரசியல் நகர்வுகள் தீவிரமாக நடைபெற்ற காலகட்டத்தில் "சோஃபா" விவகாரம் பேசுபொருளானது. தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி அமைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தபோது, விசிக அலுவலகத்திற்கு சோஃபா ஒன்று அனுப்பப்பட்டதாக ஒரு தகவல் பரவியது.

அதன் பின்னரே தமிழக வெற்றிக் கழகம் மற்றும் விசிக இடையே கூட்டணி உறுதியானதாகவும் சிலர் விமர்சனங்களை முன்வைத்தனர். 'சோஃபா மாடல் அரசு’ என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் விமர்சித்தனர். ஆனால், முன்பே ஆர்டர் செய்திருந்த சோஃபா அலுவலகத்துக்கு அன்று வந்ததாகவும், அதற்கும் கூட்டணி முடிவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் விசிக தரப்பில் அப்போது தெரிவிக்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+