"கண்ணாடி ரூம்" ஏன்.. தீபிகாவின் காவி "பிகினி".. சங்கிகளின் பிரச்னையே இதுதான்.. டாக்டர் ஷர்மிளா நறுக்
டாக்டர் ஷர்மிளா பாஜகவை விமர்சித்து பரபரப்பு ட்வீட் ஒன்றினை பதிவிட்டுள்ளார்
சென்னை: பெண்கள் தங்கள் உரிமைகளை நிலைநாட்டுவது என்பது பாஜகவுக்கு எப்போதுமே பிரச்சனைதான் என டாக்டர் ஷர்மிளா விமர்சித்துள்ளார்.. இதற்கு பலரும் திரண்டு வந்து கருத்துக்களை பதிவிட்டு, விவாதங்களையும் துவக்கி வைத்துள்ளனர்.
சில தினங்களுக்கு முன்பு அரசியல் விமர்சகரும், திமுக ஆதரவாளருமான டாக்டர் ஷர்மிளா, நம் ஒன் இந்தியா தமிழுக்கு ஸ்பெஷல் பேட்டி ஒன்றை தந்திருந்தார்.
காயத்ரி ரகுராமை சஸ்பெண்ட் செய்து, மாநில தலைமை அறிவித்திருந்த நேரமது.. எனவே, அதுகுறித்த கேள்வியை ஷர்மிளாவிடம் முன்வைத்தோம்.

சாய் பல்லவி
அப்போது பாஜகவில் அரசியல் செய்ய வரும் பெண்களுக்கான அவலங்களை ஷர்மிளா சொல்லியிருந்ததுடன், பாஜகவால், அரசியலில் பெண்கள் எதிர்கொள்ளும் வேறு சில விஷயங்களையும் ஷர்மிளா அப்போது நம்மிடம் கூறியிருந்தார்.. குறிப்பாக, காயத்ரிக்கு, தன் கட்சிக்குள் எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்திருந்தால், இதே டெய்ஸி ஆடியோவுக்கு ரியாக்ட் செய்திருப்பாரா என்று தெரியாது.. நிச்சயம் டெய்ஸி விவகாரத்தையும் கடந்து தான் சென்றிருப்பார்.. இன்னைக்கு தனக்கு ஒரு பிரச்சனை என்றதும், பெண்ணுக்காக சப்போர்ட் செய்வதாக காட்டிக் கொள்ள குரல் எழுப்புகிறார்..

கனிமொழி
உண்மையிலேயே காயத்ரி, பெண்களுக்கு பாதுகாப்பை விரும்புபவராக இருந்தால், அல்லது எச். ராஜா, என்னைக்கு கனிமொழியை பேசினாரோ, அன்னைக்கு காயத்ரி குரல் கொடுத்திருக்க வேண்டும்.. அன்று காங்கிரஸில் இருந்த குஷ்புவையும் எச்.ராஜா தரக்குறைவாக பேசினாரே.. அப்போவெல்லாம் காயத்ரி ஏன் வாய் திறக்கவில்லை.. பிஸ்கிஸ் பானுவை பலாத்காரம் செய்தவர்களை மாலை போட்டு வரவேற்று வெளியே அனுப்பினார்களே, அப்போவெல்லாம் காயத்ரி வாய் திறக்கலையே.. அப்படின்னா, உங்களுக்கு தேவைப்படும்போது மட்டும் கோபப்படுவீங்க.. கொந்தளிப்பீங்களா?

டைம்லைன்
பாஜகவை எதிர்த்து கருத்துக்களை செய்யக்கூடிய பெண்கள், அதன் சித்தாந்தங்களை எதிர்த்து அரசியல் செய்யக்கூடிய பெண்கள், இதைவிட பன்மடங்கு, அச்சுறுத்தல்களையும், இதே போன்ற கொச்சையான வார்த்தைகளையும், இதேபோன்ற அவமானங்களையும் தினம் தினம் சந்தித்து கொண்டுதான் இருக்கிறோம்... ஃபேஸ்புக், ட்விட்டர் என டைம்லைன்களிலேயே இப்படி கொச்சையாக பதிவிடுகிறார்கள் அதையும் கடந்துதான் வந்துள்ளோம்.. தங்கள் தட்சியின் சித்தாந்தத்தை உணர்ந்தவர்கள், தங்கள் கட்சியின் சித்தாந்தத்தை உள்வாங்கியவர்கள் எல்லாம் இப்படி தரக்குறைவாக செய்ய மாட்டார்கள்..

கண்ணாடி கதவு
"என் அலுவலகத்தில் கண்ணாடி கதவுகளாக மாற்றிவிட்டேன், குஷ்பு, காயத்ரி ரகுராம், பாஜக ஆபீசுக்கு வந்தால் உள்ளே என்ன நடக்கிறது என்பது எல்லாருக்கும் தெரிய வேண்டும் என்று அண்ணாமலை சொன்னார் என்றால், இதற்கு முன்னாடி அந்த கட்சி ஆபிசில் என்ன நடந்தது என்பதை ஒப்புதல் வாக்குமூலமாக அண்ணாமலை தருகிறாரா? குஷ்பு, காயத்ரி உட்பட பெண்களை பற்றி என்ன மதிப்பீடுகளை அண்ணாமலை வைத்துள்ளார்? என்பதையும் யோசிக்க வைத்துள்ளது. பாஜகவில் மட்டுமல்ல, இது எல்லா கட்சிகளை சார்ந்த பெண்களுக்கும் இப்படியான அவலங்கள் தினம் தினம் நடந்து கொண்டுதான் இருக்கிறது என்று வேதனையுடன் நம்மிடம் பகிர்ந்திருந்தார்.

பிகினி தீபிகா
இந்நிலையில், இன்றைய தினம் டாக்டர் ஷர்மிளா ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார்.. அந்த ட்வீட்டில் பாஜகவின் கருத்தியலுக்கு எதிராக பதிவிட்ட பெண்கள், கருத்து சொன்ன பெண் பிரபலங்கள் குறித்து லிஸ்ட் போட்டுள்ளார்.. அதில், "முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் போட்டாலும் சங்கிகளுக்கு பிரச்சனை - தீபிகா பிகினி போட்டாலும் சங்கிகளுக்கு பிரச்சனை - சாய்பல்லவி / மாஹுவா / காயத்திரி உண்மையை பேசினாலும் சங்கிகளுக்கு பிரச்சனை - பொதுவாக பெண்கள் தங்கள் உரிமைகளை நிலைநாட்டுவதே சங்கிகளுக்கு பிரச்சனை" என்று காட்டமாக கூறியுள்ளார். இந்த ட்வீட்டுக்கு பலரும் திரண்டு வந்து ஆதரவு கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்கள். அப்படியானால் ஈரானில் ஹிஜாப் பிரச்சனை வெடித்தது என்றும் ஷர்மிளாவிடம் சிலர் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.
-
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications