கிரையம் பண்றீங்களா? பத்திர ஆபீஸில் டோக்கன் கிடைச்சதா? "ஆடியோ" வரலையே.. பதிவுத்துறை மீண்டும் அதிரடி?
சென்னை: தமிழகத்தில் செயல்பட்டு வரும் பத்திரப்பதிவுத்துறை அலுவலகங்களில் புதிய நடைமுறை அமலுக்கு வர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் நன்மைக்காகவே, பத்திரப்பதிவு துறையில் பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டு வருகின்றன.. இதனால், மக்களின் நேரம் மிச்சமாவதுடன், அவர்கள் மேற்கொள்ளும் பணிகளும் எளிதாக்கும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

ஆன்லைன் வசதி: அதன்ஒருபகுதியாக, டோக்கன் முறை கொண்டுவரப்பட்டது. அதாவது, பத்திரம் பதிய விரும்புவோர், அது தொடர்பான தகவல்களை "ஆன்லைன்" முறையில் பதிவிட வேண்டும்..
இதன் அடிப்படையில், முதல்கட்ட சரிபார்ப்பு முடிந்த நிலையில், பத்திரப்பதிவுக்கான நேரம் ஒதுக்கி, டோக்கன் நம்பர் தரப்படும்.. இந்த டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள எண்களின்படியே, நபர்கள் பதிவுக்கு செல்ல வேண்டும்.. டோக்கனில் தரப்பட்டிருக்கும் வரிசை அடிப்படையில்தான் பத்திரப்பதிவும் மேற்கொள்ளப்படும்.
ஆனால், இம்முறையில் சில குழப்பங்கள் எழுந்தன.. டோக்கனில் நம்பர் தந்திருந்தாலும்கூட, பொதுமக்கள் சார் - பதிவாளர் அலுவலகங்களுக்கு முன்கூட்டியே வந்துவிடுகிறார்கள்.. அதுவும் ஒரே சமயத்தில் பலரும் காத்திருப்பதால், அடுத்தது யாருடைய டோக்கன் நம்பர் வரும் என்பதில் குழப்பம் ஏற்பட்டுவிடுகிறது.
பதிவுத்துறை: வரிசையில் காத்திருக்கும் மக்கள் அனைவருக்கும் எளிதாக தெரியும் வகையில் புதிய நடைமுறை அமல்படுத்தப்படும் என்று பத்திரப்பதிவு துறை தெரிவித்திருந்த நிலையில், சமீபத்தில் புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டது.
அதன்படி, பத்திரப்பதிவுக்கான டோக்கன் நம்பர், விண்ணப்பதாரர் பெயர் போன்ற விவரங்கள் அனைத்தும், அனைவருக்கும் தெரியும்வகையில், ஒவ்வொரு சார் - பதிவாளர் அலுவலகத்திலும், 52 அங்குல திரை எல்இடி திரையில் காணும்வகையில் வசதியை செய்து தந்துள்ளது.. அதேபோல, டோக்கன் நம்பரை தெரிவிக்கும்போது, வெளிப்படையாக அறிவிக்கும் வகையில் மைக் வசதியும் செய்து தரப்பட்டுள்ளது.
புதிய கோரிக்கை: கிட்டத்தட்ட ரயில் நிலையங்களில் உள்ளது போலவே, தெளிவாக அறியும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்த திட்டமும் முழுமையாக பலன் தரவில்லையாம்.
காரணம், டோக்கன், வரிசை எண் விபரங்களை பெரிய ஸ்கிரீனில் காட்டப்படுகிறது என்றாலும், வெறும் காட்சியாக மட்டுமே பார்க்க முடிகிறதாம்.. அதன் ஆடியோவை கேட்க முடியவில்லையாம்.. எனவே, ஒலி வழி அறிவிப்புக்கான வசதியும் செய்து தந்தால், எளிதாக இருக்கும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications