தூண்டிலை "அங்கே" வீசிய திருமாவளவன்.. திகைத்த திமுக.. தலைவலியில் தலைவர்கள்.. சிலிர்ப்பில் சிறுத்தைகள்
விசிக தலைவர் திருமாவளவனின் அரசியலை தேசிய தலைவர்கள் உற்றுநோக்க தொடங்கிவிட்டார்கள்
சென்னை: விசிக தலைவர் திருமாவளவனின் அரசியல் நகர்வு, தேசிய அளவில் கவனம் பெற்று வருகிறது.. இதை திராவிட கட்சிகளும், தேசிய கட்சிகளும் உற்றுநோக்கி வருகின்றன.
இந்த முறை திமுக கூட்டணியில் இருந்து, விசிக விலகக்கூடும் என்றும், அதிமுகவுடன் கூட்டணி வைக்க நிறைய சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் செய்திகள் அவ்வப்போது கசிந்தபடியே உள்ளன.
திமுகவுடன் நல்ல இணக்கத்திலேயே உள்ளோம், எந்த கொம்பனாலும் எங்கள் கூட்டணியை பிரிக்க முடியாது என்று திருமாவளவன் பலமுறை தெளிவுதந்துவிட்டபோதும்கூட, கூட்டணி சலசலப்புகள் தொடர்ந்தபடியே உள்ளன.

வார்னிங்
இதற்கு சில காரணங்களும் சொல்லப்பட்டு வருகின்றன.. ஆலமரம்போன்ற அதிமுகவை பாஜக தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்து கொண்டிருப்பதால், அதுகுறித்த எச்சரிக்கையை அதிமுகவுக்கு பலமுறை விடுத்து வருகிறார் திருமாவளவன்.. "பாஜகவிடம் ஜாக்ரதையாக இருங்கள்" என்றும் அலர்ட் செய்து கொண்டே இருக்கிறார்.. திருமாவளவனின் இந்த அக்கறை கலந்த எச்சரிக்கையைதான் சிலர், அதிமுகவுடன் கூட்டணி என்று திரித்து விடுவதாக தெரிகிறது.. அதேபோல, சில மாதங்களுக்கு முன்பு, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், பாரத் ராஷ்டிரிய சமிதி என்ற புதிய கட்சியை துவக்கியிருந்தார்..

சரவெடி திருமா
அந்த துவக்க விழாவில், திமுக சார்பில் ஒருத்தருமே பங்கேற்கவில்லை. ஆனால் கூட்டணியில் இருந்த திருமாவளவன் பங்கேற்றிருந்தார்.. அந்த நிகழ்வின்போது, பிற மாநில தலைவர்களிடம் திருமாவளவனை, சந்திரசேகர ராவ் அறிமுகப்படுத்தியும் வைத்திருக்கிறார்.. இதனால் திருமாவளவன், சந்திரசேகர ராவ் தலைமையில் உருவாகும் அணியில் இடம்பெற விரும்புகிறார் என்றும், காங்கிரஸ் அணியில் நீடிக்க விரும்பவில்லை என்பதை வெளிப்படுத்தி விட்டார் என்றும் அப்போதே ஒரு பேச்சு கசிந்தது.. கூட்டணி தொடர்பாக சலசலப்புகளை தெலுங்கானா நிகழ்வு ஏற்படுத்தியிருந்த நிலையில், அது திருமாவளவனுக்கான தேசிய அரசியலின் அடுத்த கட்ட நகர்வு என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

பாய்ச்சல் திருமா
சமீபத்தில் டிவி சேனல் ஒன்றிற்கு திருமா பேட்டி தந்திருந்தார்.. அதில் பாஜக, காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளுமே இந்தியாவில் ஒரு பொது மொழி தேவை என்ற கருத்தை முன்வைக்கின்றன... பிராந்திய மொழிகளை அழிக்க இரண்டு கட்சிகளுமே முடிவு செய்துள்ளன என்று வெளிப்படையாகவே கூறியிருந்தார்.. இத்தனை நாள் பாஜகவை மட்டுமே சாடிக்கொண்டிருந்த நிலையில், காங்கிரஸையும் சீண்டியிருந்ததாகவே அந்த பேச்சு கவனிக்கப்பட்டது.. இந்த சூழலில்தான் தேசிய அரசியலும் அவரது கவனம் குவிந்து வருவதாக சொல்கிறார்கள்.. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவிலும் விசிக தன்னுடைய புதிய கிளையை நிறுவியுள்ளது.

தலித் வாக்குகள்
இதுகுறித்து ட்வீட்டை பதிவிட்டு, ஆந்திராவில் புதிய கிளைகளை திறந்துள்ளதாகவும், பல மாவட்டங்களில் அலுவலகங்கள் இருப்பதாகவும் அதில் தெரிவித்திருக்கிறார்.. இதற்கெல்லாம் முக்கிய காரணம், பட்டியலின மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாக்கு வங்கிதான்.. அதனால்தான், இரண்டு திராவிட கட்சிகள் ஏதாவது ஒன்று, விசிகவுடன் தொடர்ந்து கூட்டணியை வைத்து வருகின்றன என்று சுட்டிக்காட்டுகிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.. இதைதான் தேசிய தலைவர்களும் நன்றாகவே உணர்ந்து வைத்துள்ளதால், திருமாவின் அரசியலை உற்றுகவனிக்க தொடங்கிவிட்டதாகவும் சொல்கிறார்கள்..

சந்திரசேகரராவ்
திருமாவளவனுக்கு கர்நாடகாவில் நல்ல வரவேற்பு உண்டு... அடிக்கடி அம்மாநில விழாக்களில் கலந்து கொண்டும் வருகிறார்.. தமிழ்நாட்டை சேர்ந்த விசிக கர்நாடகாவிலும் தன் கிளையை நிறுவியுள்ளது.. இப்போது தெலுங்கானாவிலும் நிறுவியுள்ளது.. தெலுங்கானாவில் விசிகவுக்கான முக்கியத்துவம் எந்த அளவுக்கு கூடப்போகிறது என்று தெரியவில்லை.. 2 விதமான சந்தேகங்கள் அங்குள்ள அரசியலில் கிளம்பி உள்ளது.. சந்திரசேகரராவ், பாரத் ராஷ்டிரிய சமிதியுடன் விசிக கூட்டணியில் இடம்பெறக்கூடுமா? அப்படி இடம்பெற்றால் காங்கிரஸ் அதை ஏற்குமா? என்பது மிகப்பெரிய கேள்விதான்..

பாஜக B TEAM
காரணம், தெலுங்கானா மட்டுமல்லாமல் தென்னிந்தியாவில் கவனத்தை திருப்பி வருகிறார் ஓவைசி.. பாஜகவின் பி - டீம் என்ற விமர்சனங்களை எல்லாம் காதில் வாங்காமல், தொடர்ந்து தன்னுடைய செல்வாக்கை நிரூபித்து வருகிறது.. அப்படித்தான் தெலுங்கானாவிலும் காலூன்றி உள்ளதுடன், ஒடுக்கப்பட்ட மக்களின் வாக்குகளை தன்பக்கம் திருப்பி வைத்துள்ளது.. இப்போது திருமாவும் அங்கு என்ட்ரி தந்துள்ளதால், ஒடுக்கப்பட்ட தலித் மக்களின் வாக்குகளை, அள்ள போவது யார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

அங்கீகாரம்
இப்படி தென்னிந்தியாவில் அடுத்தடுத்த கிளைகளை விரிவுபடுத்திவருவதை, திராவிட கட்சிகளும், தேசிய கட்சிகளும் உற்றுநோக்கி வருகின்றன.. இதுஒருவகையில் அக்கட்சிகளுக்கு கலக்கத்தை தந்து வருவதாகவும் சொல்கிறார்கள்.. தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சியாக உள்ள நிலையல், தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாற்றும் அடுத்த கட்டத்தை நோக்கிதான் விசிகவின் பயணம் அடியெடுத்து வைத்துள்ளது.

தலைவலி திருமா
ஒவ்வொருமுறையும் சின்னம் பிரச்சனையும் விசிகவுக்கு தலைவலியை தந்துவிடும்.. தனிச்சின்னத்தில் போட்டியிட்டு, அங்கீரிக்கப்பட்ட கட்சியாக மாறவும் தீவிரம் காட்ட துவங்கி உள்ளதாக தெரிகிறது.. அந்தவகையில் விசிகவின் பரந்த அரசியல் நகர்வானது, திராவிட கட்சிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.. ஒருவேளை விசிகவின் கிரேஸ் உயர்ந்துவிட்டால், அதிக சீட்களை கேட்கக்கூடுமோ? என்ற கூடுதல் கலக்கமும் இப்போதே கிளம்பி உள்ளதாம்.. என்னதான் நடக்க போகிறது? பார்ப்போம்..!!












Click it and Unblock the Notifications