Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சால்மன் மீன் வாங்கறீங்களா? மூளைக்கு ஒமேகா 3 பவர் உயருமே.. இந்த ஆரஞ்சு கலர் மீனால் உடல் எடை குறையுமா

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடல் உணவுகளில் மீன்கள் என்றாலே தனி ருசிதான்.. அதிலும் குறிப்பாக மருத்துவ குணங்கள் நிறைந்த மீன்களை தேடிப்பிடித்து சாப்பிடுபவர்கள் அதிகம்.. அந்த வகையில், எலும்புகள் முதல் உள் உறுப்புகள் வரை ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் பலம் தரக்கூடிய ஒரு மீன் வகை என்றால் அது சால்மன் மீன்கள்தான்.. இந்த மீனின் சத்துக்கள், அருமை பெருமைகளை பற்றி சுருக்கமாக இங்கே பார்க்கலாம்....!!

அபாரமான சுவையும், சதைப்பற்றும் கொண்ட இந்த மீன்கள் பார்ப்பதற்கே ஆரஞ்சு மற்றும் இளஞ்சிவப்பு கலரில் சூப்பராக காட்சியளிக்கும்.. நன்னீர் ஓடைகளில் குஞ்சுகளை பொரித்து, பிறகு கடலுக்கு இடம்பெயர்ந்து வளர்ந்து, மீண்டும் இனப்பெருக்கத்திற்காக நன்னீருக்கே திரும்பும் ஒரு விசித்திரமான வாழ்க்கை சுழற்சியை இந்த மீன்கள் கொண்டுள்ளன..

Orange Fish

உலகளவில் பசிபிக் மற்றும் அட்லாண்டிக் பகுதிகளில் காணப்படும் மீன்களே உண்மையான சால்மன் மீன்களாக கருதப்படுகின்றன.. இதனை தமிழில் காலா மீன் அல்லது கிழங்கான் மீன் என்று அழைக்கிறார்கள்.

ஆரஞ்சு கலர் மீன் - மூளைக்கு ஒமேகா 3

இந்த மீனில் உள்ள ஊட்டச்சத்துக்களை லிஸ்ட் போட்டால் அது நீண்டுகொண்டே செல்லும். புரோட்டீன் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் இதில் மிக அதிகமாக நிறைந்துள்ளன.. இதன்காரணமாகவே, ரத்த அழுத்தத்தை குறைத்து, கொலஸ்ட்ரால் அளவை சீராக்கி, இதய நோய் அபாயத்திலிருந்து நம்மை பாதுகாப்பதில் சால்மன் மீன்கள் முதலிடம் பிடிக்கின்றன.. இது தவிர வைட்டமின் B1, B2, B3, B5, B12, பொட்டாசியம் மற்றும் துத்தநாகம் போன்ற தாதுக்களும் இதில் கொட்டிக்கிடக்கின்றன..

முக்கியமாக, இன்றைய காலகட்டத்தில் பலரையும் வாட்டும் மூளை சோர்வு மற்றும் நினைவாற்றல் குறைபாட்டிற்கு சால்மன் மீன் ஒரு சிறந்த மருந்தாகும்.. இதிலுள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மூளை செயல்பாட்டை தூண்டி நினைவாற்றலை அதிகரிக்கின்றன.

சால்மன் மீனின் சத்துக்கள்

அதேபோல, இதயம் மற்றும் சிறுநீரகம் போன்ற முக்கிய உறுப்புகளின் ஆரோக்கியத்திற்கு இதில் உள்ள பாஸ்பரஸ் மற்றும் செலினியம் தாதுக்கள் பெரும் துணையாக நிற்கின்றன.. முக்கியமாக, செலினியம் சத்தானது தைராய்டு தொடர்பான பிரச்சனைகள் நம்மை நெருங்கவிடாமல் தடுக்கும் அரணாக செயல்படுகிறது.

கண்கள் மற்றும் சரும ஆரோக்கியத்திலும் இந்த மீனின் பங்கு அளப்பரியது.. வயதாவதால் ஏற்படும் கண் பார்வை குறைபாடுகளை தடுப்பதுடன், சருமத்திற்கு இயற்கையான பளபளப்பையும் தருகிறது..

உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு சால்மன் மீன் ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.. இதில் அதிகப்படியான புரதம் உள்ளதால், இதனை "லீன் மீட்" என்று அழைக்கிறார்கள்.. சுமார் 100 கிராம் சால்மன் மீனில் 22 முதல் 23 கிராம் வரை புரதம் உள்ளது.. இது நீண்ட நேரம் பசி உணர்வை கட்டுப்படுத்தி, தேவையற்ற உணவுகளை உண்பதை தவிர்க்க உதவுகிறது.

பற்கள் தலைமுடிக்கு ஆரோக்கியம்

அதுமட்டுமல்லாமல், வாத நோய் மற்றும் மூட்டு வலியால் அவதிப்படுபவர்களுக்கு இதிலுள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் மிகுந்த பலனை தருகின்றன.

ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு வியாதிகளிலிருந்து பாதுகாக்க தேவையான வைட்டமின் D இதில் அபரிமிதமாக உள்ளது.. இது எலும்புகளை மட்டுமல்லாமல் பற்கள் மற்றும் தலைமுடியையும் வலுவாக்குகிறது.. சர்க்கரை நோயாளிகள் மற்றும் மன அழுத்தத்தில் இருப்பவர்கள் வாரத்தில் இருமுறை இந்த மீனை உணவில் சேர்த்துக்கொள்வது மிகச்சிறந்த மாற்றத்தை தரும்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+