3 "தாமரைகள்" ரெடியாமே.. மேலிடம் போட்ட உத்தரவு.. தீயாய் இறங்கிய தமிழக பாஜக.. காரணமே இதுதான்.. செம
3 டிவி சேனல்களை துவக்க தமிழக பாஜக முயன்று வருவதாக கூறப்படுகிறது
சென்னை: தமிழக பாஜகவுக்கு முக்கிய தகவல் ஒன்று மேலிடத்தில் இருந்து வந்துள்ளதாம்.. இதையடுத்து, அக்கட்சி படுகுஷியில் காணப்படுகிறது.. என்ன காரணம்?
இன்றைய சூழலில் சோஷியல் மீடியா இல்லாமல் அரசியல் கட்சிகளை நடத்துவது கடினமான ஒன்று.. தமிழ்நாட்டில் அனேகமாக அனைத்து பிரதான அரசியல் கட்சிகளுமே தங்களுக்கென்று ஒரு சேனலை, அல்லது ஏதாவது செய்தி நிறுவனத்தை கையில் வைத்துள்ளன..
திமுகவுக்கு கலைஞர் செய்திகள், அஇஅதிமுகவுக்கு ஜெயா டிவி மற்றும் ஜெயா பிளஸ் நியூஸ், காங்கிரசுக்கு வசந்த் டிவி, மெகா டிவி, தேமுதிகவுக்கு கேப்டன் நியூஸ், இந்திய ஜனநாயக கட்சிக்கு வேந்தர் டிவி, நாம் தமிழர் கட்சிக்கு தமிழன் டிவி, விசிகவுக்கு வெளிச்சம் டிவி, மதிமுகவுக்கு மதிமுகம், என சேனல்கள் படர்ந்து உள்ளன.

லோட்டஸ்
அந்தவகையில், பாஜகவுக்கு லோட்டஸ் சேனல் இருப்பதாக தெரிகிறது.. ஆனால், இந்த சேனல் அந்த அளவுக்கு பிரபலமாகவில்லை.. மற்ற அரசியல் கட்சிகள், தங்கள் சேனலை தேர்தல் சமயங்களில் பயன்படுத்தி கொள்ளும் அளவுக்குகூட, பாஜகவுக்கு அப்படி ஒரு சோர்ஸ் எங்குமே இல்லை.. அதனால்தான், தங்களுக்கும் ஒரு சேனல் வேண்டும் என்று தமிழக பாஜக நீண்ட நாட்களாகவே கோரிக்கை விடுத்து வருகிறது.. மாநில தலைவராக பொன்.ராதா இருந்தபோத இதற்காக சில முயற்சிகளும் எடுக்கப்பட்டன. ஆனால், அந்த முயற்சிகள் அப்படியே கிடப்பில் போடப்பட்டுவிட்டன..

தாமரைகள்
தற்போது மீண்டும் தமிழக பாஜகவுக்கு சேனல் வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.. அந்தவகையில், 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாகவே, தமிழத்தில் பாஜகவுக்கென 3 சேட்டிலைட் சேனல்களை தொடங்க வேண்டும் என்று டெல்லி தலைமை உத்தரவு போட்டுள்ளதாம்.. பொழுதுபோக்கு அம்சங்கள் மட்டுமே கொண்டதாக ஒரு சேனலும், பக்தி நிகழ்வுகளுக்காக ஒரு சேனலும், 24 மணி நேரமும் செய்திகளை வாசிக்கும் ஒரு சேனலும் என 3 சேனல்களை ஆரம்பிக்க போகிறார்களாம்..

ஹைதராபாத்
இதற்கான வேலைகளும் ஆரம்பமாகிவிட்டனவாம்.. இந்த சேனல்களுக்கு ஆசிரியர்களாகவும், முக்கிய பொறுப்பிலும் யாரை நியமிப்பது என்பது குறித்த ஆலோசனைகள் நடப்பதாகவும், இதுகுறித்த விளம்பரங்களையும் விரைவில் எதிர்பார்க்கலாம் என்றும் தகவல்கள் வட்டமடிக்க ஆரம்பித்துள்ளன.. இந்த தகவல் பாஜகவுக்கு புத்துணர்ச்சியை தந்து வருகிறது.. காரணம், பாஜகவை பொறுத்தவரை, இந்த முறை எம்பி தேர்தலை இப்போதே எதிர்நோக்க துவங்கிவிட்டது.. இதைதான் கடந்த மாதம் ஹைதராபாத்தில் அமித்ஷா பேசிய பேச்சில் இருந்து நம்மால் அறிய முடிந்தது..

அமித்ஷா
"அடுத்த 30 முதல் 40 ஆண்டுகள் பாஜக-வின் சகாப்தமாக இருக்கும்... சர்வதேச அளவில் இந்தியா தலைமை வகிக்கும். தெலங்கானா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் குடும்ப ஆட்சிக்கு பாஜக விரைவில் முடிவுகட்டும். அதுமட்டுமல்லாமல், தெலங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் கூடிய விரைவில் பாஜக ஆட்சி அமைக்கும்" என்று அமித்ஷா கூறியிருந்தார்.

மைனஸ் - பலவீனங்கள்
தமிழகத்தில் ஒவ்வொரு முறை தேர்தல் வரும்போதும், காலூன்ற பாஜக இப்படி முயலுவது வழக்கம்தான் என்றாலும், இந்த முறை, அமித்ஷா ஹைதராபாத்தில் பேசிய பேச்சில், புது நம்பிக்கை அக்கட்சிக்கு தென்பட்டுள்ளது.. தமிழகத்தில் ஆட்சி அமைக்கக்கூடிய அளவுக்கு ஏதோ பலமான காரணமும் அவர்களுக்கு சிக்கி உள்ளதாகவும் தெரிகிறது.. அநேகமாக, தமிழக அரசியல் கட்சிகளின் பலவீனங்களே இதற்கெல்லாம் பிரதான காரணமாக இருக்கலாம் என்கிறார்கள்.. தங்களுக்கு தொடர்ந்து எரிச்சலூட்டும் செயல்களை செய்து வரும் எடப்பாடி பழனிசாமியை, முன்புபோல் பெரிதாக நம்பக்கூடிய சூழலில் தற்போது பாஜக மேலிடம் இல்லை..

டிடிவி + சசிகலா + ஓபிஎஸ்
அதனால், இந்த முறை தமிழகத்தில் தனித்து நின்று தேர்தலை சந்தித்தாலும் ஆச்சயரிப்படுவதற்கில்லை என்கிறார்கள்.. வேண்டுமானால், ஓபிஎஸ் + சசிகலா + தினகரன் ஆதரவுடன் தேர்தலை பாஜக எதிர்கொள்ள வேண்டிய சூழலும் வரலாம் என்றும் சொல்கிறார்கள்.. அதனால்தான், தங்களுக்கென டிவி சேனல்கள் ஒன்று இருந்தால், அது தேர்தல் சமயத்தில் மிகவும் பயனுள்ளதாகவும், பலமுள்ளதாகவும் இருக்கும் என்று அக்கட்சியினர் நம்புகிறார்கள்.. தமிழகத்தில் இந்த முறை 25 தாமரைகளை டெல்லிக்கு அனுப்ப தயாராகிவரும் பாஜகவுக்கு, இந்த சேனல்கள் உறுதுணையாக மட்டுமல்லாமல் பாலமாகவும் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது....!
-
பாஜகவில் இருந்து விலகலா.. ஆதரவாளர்களுடன் ஆலோசனை குறித்து சரத்குமார் பரபரப்பு விளக்கம் -
அமமுகவுக்கு 12 சீட்? குக்கர் சின்னத்தில் போட்டி.. பியூஷ் கோயல் - டிடிவி தினகரன் சந்திப்பில் உறுதி?! -
ஆதரவாளர்களுடன் சரத்குமார் ரகசிய ஆலோசனை.. மீண்டும் உதயமாகிறதா சமக.. அதிர்ச்சியில் பாஜக -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
எடப்பாடி பழனிசாமிக்கே ஷாக்.. மாப்பிள்ளை அவர் தான்.. ஆனால் சட்டை? பாஜக வெயிட்டிங் கேம் பின்னணி என்ன? -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
பொறுப்பு வழங்கப்பட்டால்தானே செயல்பட முடியும்! முடிவுக்கு வரும் பாஜகவுடனான சரத்குமாரின் பயணம்? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
புதுச்சேரியில் 9 தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு.. ஜான் குமாருக்கு மீண்டும் சீட்! -
மம்தாவுக்கு குடைச்சலை கொடுக்கும் பாஜக.. மேற்கு வங்கத்தில் மலரும் தாமரை? 7 முக்கிய பாயிண்டுகள் -
சாத்தூர் தொகுதியில் போட்டியா? எங்கும் போட்டியிடுவேன்.. நயினார் நாகேந்திரன் நேரடியாக சொன்ன பதில்! -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி












Click it and Unblock the Notifications