இதெல்லாம் லிஸ்ட்லயே இல்லையே.. பச்சை துரோகம்.. ஆடிப்போன தினகரன்..எடப்பாடி விஷயம் வேற தெரிஞ்சிடுச்சாமே
சென்னை: அமமுகவுக்குள் அனல் அடிக்க துவங்கியிருக்கிறதாம்.. அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், முக்கிய முடிவு ஒன்று எடுக்கப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சசிகலா பெங்களூரு சிறையிலிருந்தபோதே, அமமுகவின் "பொதுச்செயலாளர்" பதவியை அவருக்காக ஒதுக்கி வைத்து காத்திருந்தார் தினகரன்.. இதற்கு பிறகு, சசிகலா விடுதலையானபோது, அவரை சென்னைக்கு தடபுடலாக அழைத்து வந்து, அதிரடியை காட்டியிருந்தார் தினகரன்..

தினகரன்: எப்படியும் சித்தியின் ஆதரவு தனக்கு வெகுவாரியாக கிடைக்கும் என்பதுடன், தேர்தலிலும் பிரச்சாரம் செய்யும்போது, அமமுகவுக்கான செல்வாக்கு மேலும் எகிறும் என்று தினகரன் கணக்கு போட்டதாக தெரிகிறது.
ஆனால், தேர்தல் நேரத்தில், திடீரென அரசியலில் ஓய்வு என்று சசிகலா அறிவித்துவிடவும், அளவுக்கு அதிகமாக அதிர்ச்சி அடைந்தது அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்தான். இரவெல்லாம் தூங்காமல், மனஉளைச்சலுக்கு ஆளானதாக அன்றைய தினங்களில் மீடியாக்களில் செய்திகள் கசிந்தன.
சசிகலா: அதுவரை, சசிகலாவின் நிகழ்வுகளில், அமமுகவினர் திரண்டு சென்று வரவேற்பு தந்து பங்கேற்று வந்தநிலையில், திடீரென தினகரன் அதற்கு செக் வைத்துவிட்டதாக மீண்டும் செய்திகள் பரபரத்தன.
அதாவது, சசிகலா கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில், அமமுக நிர்வாகிகள் யாரும் கலந்துகொள்ளக்கூடாது, அவரை சந்திக்க கூடாது" என்று வாய்மொழி உத்தரவு போட்டுவிட்டாராம் தினகரன்.. அதுவரை சசிகலா எந்த ஊருக்கு போனாலும், அங்குள்ள அமமுக நிர்வாகிகள் அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்து திணற வைத்துவந்த நிலையில், தினகரனின் அதிரடி உத்தரவால், அமமுகவில் பல நிர்வாகிகளே அதிர்ச்சி அடைந்துவிட்டார்களாம்.
சித்தி: ஆனால், இந்த தகவலையெல்லாம் தினகரன் மறுத்திருந்தார்.. ஒருமுறை இதுகுறித்து, செய்தியாளர்கள் தினகரனிடமே கேட்டிருந்தனர். அதற்கு தினகரன், "சித்தியுடன் எனக்கு பிரச்சனைன்னு நீங்களே காத்துல செய்திகளை எழுதினால் எப்படி? அதுக்கெல்லாம் நான் பதில் சொல்லிட்டு இருக்க முடியுமா? நான் பலமுறை சொல்லிட்டேன், எங்களுக்குள் பிரச்சனை இருக்கா இல்லையா? என்பதை காலம் பதில் சொல்லும்..
ஏன் என்றால், பலமுறை இதுக்கு நான் பதில் சொல்லி, என் வாயே வலிக்குது.. நான் அவங்களை சந்திப்பது என்பது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி எல்லாம் கிடையாது.. அவங்க என் அம்மாவுடைய தங்கை, என்னுடைய சித்தி, என் மனைவிக்கு அத்தை.. அதனால எப்பவுமே சந்திக்கதானே செய்வோம்? தேவை ஏற்படும்போதெல்லாம் அவங்களை சந்திப்பேன்.. அப்படித்தான் சமீபத்திலும் சந்தித்துவிட்டு வந்தேன்" என்று யதார்த்தமாக கூறியிருந்தார்.
அதிருப்திகள்: எனினும், சசிகலா - அமமுக இடையே ஏற்பட்டிருந்த அந்த அதிருப்தி சூழல் இன்னமும் மாறவில்லை என்றே தெரிகிறது.. அதற்கேற்றபடி, சசிகலாவும் தொடர்ந்து அமமுகவை பற்றி கவலைப்படாமல் அதிமுகவுக்கே உரிமைக் கொண்டாடி வருவதும், தினகரனுக்கு மேலும் கடுப்பை தந்து வருகிறதாம்.
இப்போது விஷயம் என்னவென்றால், அமமுகவில் இருக்கும் முக்கிய நிர்வாகிகள் சிலர் சசிகலா தரப்பிடமும், எடப்பாடி பழனிசாமி தரப்பிடமும் மறைமுகமாக நெருக்கம் காட்டிவருவது தினகரனின் கவனத்துக்கு வந்திருக்கிறதாம்.
பச்சை துரோகம்: மொத்த கூடாரமும் காலியாகி விடக் கூடாதே என்ற அச்சத்தில்தான், 10 மாவட்ட சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்களை அழைத்து தஞ்சாவூரில் ஆலோசனைக் கூட்டம் நடத்தியிருக்கிறார் தினகரன்.. அப்போதுதான், இந்த விஷயமெல்லாம் தெரியவந்துள்ளது.. இதைக்கேட்ட தினகரன், கட்சிக்கு துரோகம் செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள்மீது தயங்காமல் நடவடிக்கை எடுப்பேன் என்று அந்த ஆலோசனை கூட்டத்திலேயே கொந்தளித்துவிட்டாராம் தினகரன்..!
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications