டிடிவி தினகரனின் "சைலண்ட் சக்சஸ்".. அவசரப்பட்டுட்டாரோ எடப்பாடி பழனிசாமி? கைமாறுதா திமுக ஓட்டுக்கள்?
சென்னை: அதிமுகவுடன் பாஜக மீண்டும் கூட்டணியில் இணையுமா? அப்படி இணைந்தால் டிடிவி தினகரனை எடப்பாடி ஏற்றுக்கொள்வாரா? என்ற சந்தேகங்கள் பரபரத்து வந்தாலும், அமமுக பொதுச்செயலாளர் தன்னுடைய வியூகத்தை சரியான திசையில் செலுத்தி வருவதாக சொல்கிறார்கள். என்ன நடக்கிறது அமமுகவுக்குள்?
சில நாட்களுக்கு முன்பு, அதிமுகவின் மூத்த தலைவர் தம்பிதுரை ஒரு பேட்டி தந்திருந்தார்.. அதில், "முக்குலத்தோர் சமூகம் அவங்க பின்னாலதான் இருக்கு, ஓபிஎஸ்ஸும் தினகரனும் சொன்னால்தான் அந்த சமூகம் கேட்கும்ங்கிறதெல்லாம் ஒருவித மாயை. தேனியில்

எல்லாம் மாயை: ஓபிஎஸ்சுக்கும், தஞ்சை-திருவாரூர் மாவட்டத்துல தினகரனுக்கும் வேண்டுமானால் அவங்க பேச்சை கேட்பாங்க. ஆனால், அதே சமூகத்துல செல்வாக்காக இருக்கிற தலைவர்கள் அதிமுகவில் இருக்காங்க. அதனால, முக்குலத்தோர் ஆதரவு என்பது, அதிமுகவுக்குதான் நிறைய உள்ளது" என்று கூறியிருந்தார்.
அதிமுக தலைவர்களின் கணிப்பு இவ்வாறு இருந்தாலும், களநிலவரம் வேறு மாதிரியாக உள்ளது.. டிடிவி தினகரனை பொறுத்தவரை, கடந்த முறை பிரித்த ஓட்டுக்கள் பெரும்பாலும், அதிமுக + திமுக எதிர்ப்பு ஓட்டுக்கள் என்பதை மறந்துவிட முடியாது. முக்குலத்தோர்: கடந்த சட்டமன்றத் தேர்தலில் 160 தொகுதிகளில் போட்டியிட்ட அமமுக, 10,85,985 வாக்குகளை பெற்றிருந்தது..
திமுக ஓட்டுக்கள்: இன்னும் ஓபனாக சொல்லப்போனால், திமுகவின் அதிருப்தி ஓட்டுக்களை பிரித்ததே தினகரன்தான்.. அதனால்தான், முக்குலத்தோர் ஆதரவு வாக்குகளை அவ்வளவு லேசில் இழந்துவிட பாஜக விரும்பவில்லை.. அதனாலேயே டிடிவி தினகரனை தங்களுடன் அணி சேர்க்க முயல்வதாக தெரிகிறது. இப்போதுவரை, அமமுகவுக்கான முக்கியத்துவத்தையும் பாஜக தந்துவருகிறது.
ஒருவேளை எடப்பாடி பழனிசாமியின் பிடிவாத போக்கு தொடர்ந்தால், தினகரன் + ஓபிஎஸ்ஸை பாஜக கண்டுகொள்ளாமல் விட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள். காரணம், தென்மண்டலங்களில் எடப்பாடி பழனிசாமி மீதான அதிருப்திகள் முக்குலத்தோருக்கு தொடர்வதால், எடப்பாடி இல்லாமலேயே கூட்டணியை கட்டமைக்க பாஜக முயற்சிக்கும் என்றும் சொல்கிறார்கள்.
டிடிவி தினகரன்: இன்னொன்றையும் நாம் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.. ராமநாதபும், சிவகங்கை, தஞ்சாவூர் தொகுதிகளில் தனியாக நின்று, தன்னுடைய வாக்கு வங்கியை டிடிவி தினகரன் நிரூபித்திருந்தார்.. இதையும் பாஜக கவனிக்காமல் இல்லை. அதனால்தான், வரும் தேர்தலில் கூட்டணி வைப்பதுடன், அமமுகவுக்கு தேவையான உதவிகளையும் தாராளமாக செய்யவிருப்பதாக பாஜக மேலிடம் நம்பிக்கை தந்துள்ளதாம்.
அந்தவகையில், அமமுகவுக்கு 4 சீட்வரை கிடைக்கலாம் என்கிறார்கள்.. இது தொடர்பாக, மேலிட பாஜக தலைவர் ஒருவர், பேசிவருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த விஷயத்தை கேள்விப்பட்டு, அமமுக தரப்பினர் குஷியாகிவிட்டார்களாம். அதனால், இந்த முறை நிறைய நிர்வாகிகள், தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டி வருகிறார்களாம்.
ஆக, பாஜகவுடன் கூட்டணி வைத்தால், தினகரனுக்கு பெருத்த வாய்ப்பு கிடைக்கும்.. ஒருவேளை தனித்து போட்டியிட்டால் அது அமமுகவுக்கே சறுக்கலாகிவிடும் என்கிறார்கள் அரசியல் வியூகர்கள்.. ஒருவேளை, பாஜகவுடன் அமமுக கூட்டணியில் இணையும்பட்சத்தில், உச்சக்கட்ட கவனமாக இருக்க வேண்டியது அதிமுகவைவிட, திமுகதான் என்பதையும் மறுக்க முடியாது.
மெகா டவுட்: இன்னொரு சந்தேகமும் நமக்கு எழுகிறது.. மறைந்த முதல்வர்கள் ஜெயலலிதாவையும் அண்ணாவையும் விமர்சித்த பாஜகவுடன், டிடிவி தினகரனும், ஓபிஎஸ்ஸும் இணைய முற்படுவார்களா? அப்படியே கூட்டணியில் இணைந்தாலும், அமமுக, ஓபிஎஸ் ஆதரவாளர்களும், அதிமுக தொண்டர்களும் அதனை வரவேற்பார்களா? களத்தில் இறங்கி வேலைபார்ப்பார்களா? தெரியவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம்..!!
-
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
எடப்பாடி ரொம்ப மாறிட்டாரே.. இது எதிர்பார்க்காத வேகம்.. அதே ஜெயலலிதா ஸ்டைல்.. கவனிச்சீங்களா? -
செக் வைத்த எடப்பாடி பழனிசாமி! அண்ணாமலை அப்செட்? தமிழக பாஜக வேட்பாளர் தேர்வு கூட்டத்தில் மிஸ்ஸிங்! -
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
297 வாக்குறுதி.. சாமானியர்களிடம் சென்று சேராத அதிமுகவின் தேர்தல் அறிக்கை.. ஆர்வம் காட்டாத தொண்டர்கள் -
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா? -
அவிநாசி, ஊட்டி, நாகர்கோவில்! அதிமுக கோட்டைகளை பாஜகவுக்கு தாரை வார்ப்பதா? கொந்தளிக்கும் நிர்வாகிகள் -
கொங்கு மண்டலத்தில் 5, சென்னை 1, மதுரை 1, சேலம் 0.. பாஜகவை கன்ட்ரோலில் எடுத்த எடப்பாடி பழனிசாமி! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி! எடப்பாடி எடுத்த ஸ்மார்ட் முடிவு! வாக்குறுதிக்கு பின்.. இவ்வளவு பிளானிங்கா! -
பாஜக தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்கிய எடப்பாடி.. மயிலாப்பூர் தொகுதி வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன்? -
களம் இப்போதான் சூடுபிடிக்குது..முதல் ஆளாக பிரச்சாரத்துக்கு கிளம்பிய எடப்பாடி! ரேசில் முந்தும் அதிமுக -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications