80:20.. நேரம் பார்த்து திமுகவை சாய்க்க 3 மாஸ்டர் பார்முலா? விஜய் இறக்கும் தவெக வேட்பாளர்கள் இவர்களா?
சென்னை: தமிழக அரசியலில் திமுக, அதிமுகவுக்கு சவால் விடும் வகையில் தவெக தனது தேர்தல் வியூகத்தை வகுத்து வருகிறது. விஜய்யின் செல்வாக்கு எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை அறிய உள்ளாட்சி தேர்தல் ஒரு முக்கிய வாய்ப்பாக அமையும். இதனால் வேட்பாளர் தேர்வு முதல் கூட்டணி கட்சிகளுக்கு இடங்களை ஒதுக்குவது வரை தவெக கவனமாக காய்களை நகர்த்தி வருகிறதாம்...!!!
உள்ளாட்சி தேர்தலுக்கு திமுக ஜரூராக ரெடியாகி வருகிறது.. திருச்சி கிழக்கு தொகுதிக்கு முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, விராலிமலைக்கு புதுக்கோட்டை வடக்கு மாவட்ட செயலர் கே.கே.செல்லப்பாண்டியன், கரூருக்கு முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, அம்பாசமுத்திரத்துக்கு திருநெல்வேலி மேற்கு மாவட்ட செயலர் ஆவுடையப்பன் ஆகியோரை திமுக பொறுப்பாளர்களாக நியமித்து விட்டது.. இனி முன்கூட்டியே தேர்தல் பணிகளையும் தொடங்க போகிறதாம்.

திமுகவின் வேகம்
தேர்தல் அறிவிப்பு வெளியானதுமே, வேட்பாளர்களை தேர்வு செய்வதுடன், மாவட்ட செயலர்கள் மற்றும் பொறுப்பாளர்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பையும் வலுப்படுத்த வேண்டிய கட்டாயம் திமுகவுக்கு ஏற்பட்டுள்ளது.
கடந்த 2 நாட்களாகவே ஒரு உத்தேச லிஸ்ட் இணையத்தில் கசிந்து வருகிறது.. அதன்படி, திருச்சி கிழக்கு தொகுதிக்கு அன்பில் மகேஷ், கரூருக்கு அசோக்குமார், விராலிமலைக்கு எம்.எம்.அப்துல்லா, அம்பாசமுத்திரத்துக்கு ரவீந்திரநாத், பெருந்துறைக்கு முத்துசாமி ஆகியோரின் பெயர்களை பொறுப்பாளர்கள் பரிந்துரைத்துள்ளதாக தெரிகிறது..
அன்பில் மகேஷ்
ஆனால், தற்போது அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டிருப்பது திமுகவுக்குள் அதிர்வலையை உண்டுபண்ணியிருக்கிறது. ஆனால் இது தவெகவுக்கு தெம்பை தந்து வருகிறதாம்.. எப்படியாவது வரப்போகும் உள்ளாட்சி தேர்தலுக்குள் திமுகவின் அரசியல் வேகத்தை கட்டுப்படுத்த தவெக திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
திமுகவுக்கு எதிராக தவெகவின் நகர்வு இப்படியென்றால், கூட்டணிக்குள்ளேயே 3 விதமான கணக்குகளை தவெக போட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தவெக போடும் கணக்கு
காரணம், உள்ளாட்சி தேர்தலில் மட்டும்தான், மக்களிடம் எந்த அளவுக்கு ஆதரவு இருக்கிறது என்பதை நேரடியாக தவெகவால் தெரிந்துகொள்ள முடியும். அதனால்தான் பெரும்பாலான இடங்களில் தனித்தே போட்டியிட கட்சி தலைமை விரும்புகிறதாம்.
அதன்படி, மொத்த இடங்களில் சுமார் 80 சதவீத இடங்களில் தவெகவே நேரடியாக களமிறங்குவதாகவும், மீதமுள்ள 20 சதவீத இடங்களை காங்கிரஸ், விசிக, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கலாம் என்றும் திட்டமிட்டு வருகிறதாம்.
பொதுவாக, எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும், தங்களுக்கு அதிக இடங்கள் கிடைக்க வேண்டும், முக்கிய பதவிகளிலும் பங்குகள் வேண்டும் என்றே எதிர்பார்க்கும்.. அப்படியிருக்கும்போது, தவெகவின் இந்த வியூகங்கள், கூட்டணி கட்சிகளிடம் எந்த அளவுக்கு எடுபடும் என தெரியவில்லை.
உள்ளாட்சி தேர்தல் வியூகம்
ஆனால், கடந்த இடைத்தேர்தல் போல, உள்ளாட்சி தேர்தலில் திணறிவிடக்கூடாது என்பதில் தெளிவாக உள்ளதாம்.. அதனால், வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளர்களை தேர்வு செய்வதில் கட்சி தீவிர கவனம் செலுத்தி வருகிறதாம்... அத்துடன் அமைச்சர்கள் உள்ளிட்டோரே நேரடியாக உள்ளாட்சி தேர்தலுக்கு பொறுப்பேற்று செயல்பட வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாம்.
இதற்காக உள்ளூர் அளவில் மக்களின் ஆதரவைப் பெற்றவர்களுக்கு, உள்ளூரில் செல்வாக்கு கொண்டவர்களுக்கு வேட்பாளர் தேர்வில் முக்கியத்துவம் கொடுக்கப்பட உள்ளதாம்.
வேட்பாளர்கள் யார் யார்
குறிப்பாக அந்தந்த பகுதியில் மக்களுடன் நேரடியாக தொடர்பில் இருப்பவர்களுக்கும், உள்ளூர் பிரச்சினைகளை அறிந்தவர்களுக்கும் வாய்ப்பு அளித்தால் வெற்றியை எளிதாக்க முடியும் என தவெக கணக்கு போடுகிறது..
ஆக, திமுகவுக்கு எதிரான அரசியல் நகர்வுகள், கூட்டணி கட்சிகளுடனான இடப்பங்கீடு, உள்ளூர் செல்வாக்குள்ளவர்களுக்கு முக்கியத்துவம் என தவெக பல கணக்குகளைப் போட்டு வருகிறது. விஜய்யின் செல்வாக்கு வாக்குகளாக மாறுமா, திமுக, அதிமுகவுக்கு சவால் விடும் அளவுக்கு தவெக வளர்ந்துள்ளதா என்பதற்கான விடை உள்ளாட்சி தேர்தல் முடிவுகளில் தெரியவரும். பொறுத்திருந்து பார்ப்போம்..!!


Click it and Unblock the Notifications
