கால் விரல் வடிவத்தை வைத்தே உங்கள் கேரக்டரை ஈஸியா சொல்லிடலாம்.. நம்பலியா..? இதோ நீங்களே பாருங்க!
சென்னை: உங்கள் கால்களின் வடிவம் எப்படியிருக்கிறது? அதை வைத்து கூட நீங்கள் எப்படிப்பட்ட ஆளுமை என்பதை நாங்கள் சொல்வோம்.
ஒருவரது உடல் மொழி, முக பாவனை, பேசும் பேச்சு, நடந்துக் கொள்ளும் விதத்தை வைத்தே அவர் எப்படிப்பட்டவர் என்பதை சொல்ல முடியும். அதை சொல்வதற்காக ஜாதகமும் ஜோசியமும் அவசியமில்லை.
அவை இல்லாமலேயே நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை சொல்ல நிறைய வழிகள் உள்ளன. இதுவரை உங்கள் மூக்கின் வடிவம், படுக்கும் நிலை, உட்காரும் நிலை, நடக்கும் விதம், அபிமான காபி உள்ளிட்டவற்றை வைத்து நீங்கள் எப்படிப்பட்டவர் என்பது சொல்லப்பட்டு வந்தது.

கால்களின் வடிவம்
அந்த வகையில் தற்போது உங்கள் கால்களின் வடிவங்களை கொண்டு இப்போது நாங்கள் சொல்கிறோம். இது கதையல்ல நிஜம்தாங்க! நாம் பார்க்கவிருப்பது 4 வகையான கால் வடிங்கள். 1. எகிப்திய வடிவம், 2. ரோமானிய வடிவம், 3. கிரேக்க வடிவம், 4, சதுர வடிவம் ஆகியவை ஆகும்.

45 டிகிரி
முதலில் எகிப்திய வடிவம் குறித்து பார்ப்போம். உங்களது கால் விரலின் கட்டை விரல் மட்டும் பெரிதாக இருக்கும். மற்ற விரல்கள் 45 டிகிரி கோணத்தில் இருக்கும். இதுதான் எகிப்திய வடிவ கால்களாகும். இந்த கால் வடிவத்தை உடையவர்கள் விசுவாசமிக்கவர்கள். நீங்கள் கவனித்துக் கொள்ளப்படுவதையும் செல்லமாக இருப்பதையும் விரும்புகிறீர்கள்.

அழகு
அழகு என்பது உங்களுக்கு மிகவும் பிடிக்கும். நீங்கள் பாதுகாக்கப்பட்டவராகவே உணர்வீர்கள். உங்களது தனியுரிமையில் யாரும் மூக்கை நுழைப்பதை விரும்ப மாட்டீர்கள். வெளியுலகத்திலிருந்து உங்கள் வாழ்க்கை குறித்த முழு விவரங்களும் ரகசியமாகவே வைத்திருப்பீர்கள். கனவு காண்பது உங்களுக்கு மிகவும் பிடிக்கும்.

ரோமானிய கால் வடிவம்
அது போல் ரோமானிய கால் வடிவம் என்பது உங்கள் கால்களின் முதல் மூன்று விரல்கள் ஒரே உயரத்தில் இருக்கும். 4 மற்றும் 5 ஆவது விரல்கள் பெரிதிலிருந்து சிறியதாக இருக்கும். அப்படியென்றால் உங்களது கால் வடிவம் ரோமானிய வடிவமாகும். நீங்கள் தைரியமானவர்கள். எல்லோராலும் விரும்பப்படுவீர்கள்.

புதிய அனுபவம்
புதிது புதிதாக அனுபவங்களை பெற விரும்புவீர்கள். புதிய நபர்களை சந்திக்கவும் புதிய கலாச்சாரங்களை கண்டறிவும் விரும்புவீர்கள். உங்களின் அன்புக்குரியவர்களுடன் நேரத்தை செலவிட விரும்புவீர்கள். விசுவாசமாகவும் இருப்பீர்கள். அவர்களை மகிழ்விக்க கூடுதல் நேரத்தை செலவிடுவீர்கள். நீங்கள் நன்கு சமநிலையை கொண்ட வாழ்க்கையை நடத்துவீர்கள். நீங்கள் பிடிவாதக்காரர்களாகவும் அழுத்தக்காரர்களாகவும் இருக்கலாம்.

கிரேக்க கால் வடிவம்
அடுத்தது, கிரேக்க கால் வடிவம். இந்த கால் வடிவத்தில் இரண்டாவது விரல் மட்டும் பெரிதாக இருக்கும். கட்டை விரலும் 3ஆவது விரலும் ஒரே அளவில் இருக்கும். 4 ஆவது விரல் சற்று பெரிதாகவும் 5ஆவது விரல் 4-ஐ காட்டிலும் சிறியதாகவும் இருக்கும். நீங்கள் ஒரு படைப்பாளி, புதிய புதிய படைப்புகளையும் ஐடியாக்களையும் உருவாக்குவீர்கள்.

ஊக்கம்
கனவை எட்ட துடிப்பவர்களை ஊக்கப்படுத்தி, உற்சாகப்படுத்துவீர்கள். எப்போதும் ஆற்றலுடன் இருப்பீர்கள். எதையும் விளையாட்டாகவே எடுத்துக் கொள்வீர்கள், எப்போதும் துடிப்பாக இருப்பீர்கள். ஆனால் ஒரு முடிவை எடுப்பதற்கு திணறுவீர்கள். அது போல அவ்வளவு எளிதில் உங்கள் கருத்திலிருந்து மாற மாட்டீர்கள்.

நேர்மையானவர்கள்
சதுர வடிவ கால்கள் என்றால் அனைத்து விரல்களும் ஒரே உயரத்தில் இருக்கும். இதை பீசன்ட் ஃபுட் ஷேப் என்றும் அழைப்பார்கள். நீங்கள் நேர்மையானவர்கள், உங்கள் வாழ்க்கையை சீராக நடத்துவீர்கள். நல்லது கெட்டதை சீர்தூக்கி பார்ப்பீர்கள். உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்வீர்கள். மற்றவர்கள் மூளைச்சலவை செய்தாலும் அசர மாட்டீர்கள். நாங்கள் சொன்னது அனைத்தும் சரியா என பாருங்கள்.
-
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார்












Click it and Unblock the Notifications