Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பீஸ் பீஸா உடையுதே.. உலை வெச்ச பிரபலம்.. "6 புள்ளி" வைத்து ஆட்டத்தை ஆரம்பிக்கும் திமுக.. கலரே மாறுதே

Subscribe to Oneindia Tamil

சென்னை: கூட்டணி கட்சிக்கு போக, மிச்ச இடங்களில் திமுக போட்டியிடும் தொகுதிகளில், தேர்தல் வேலைகள் மும்முரமாகி வருகின்றன.. அத்துடன் திமுகவின் சில வியூகங்களும் வட்டமடிக்க துவங்கி உள்ளன.

உதயநிதியை பொறுத்தவரை, அரசியல்வாதிகளுக்கே உரிய வெள்ளை வேட்டி சட்டை யூனிபார்ம்களை கடந்து, கேஷூவலான அமைச்சராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.. யதார்த்தமான பேச்சு, அதேசமயம், எதிர்க்கட்சிகளுக்கு எரிச்சலூட்டும் பேட்டிகளை தந்து கலங்கடித்து வருகிறார்.

Can Udhayanidhi Stalin get 6 seats for DMK Youth Wing and Are there any Dissatisfaction from the Senior Leaders

படுவேகம்: முக்கியமாக, இளைஞர் அணியின் தலைவராக அவரின் செயல்பாடு கட்சிக்குள் "பாசிட்டிவ்" வைபரேஷனையே" தந்திருப்பதாக கூறப்படுகிறது. அந்தவகையில், திமுக இளைஞரணி தற்போது படுவேகமாக பயணித்து வருகிறது.. அந்தவகையில், வரப்போகும் தேர்தலில், இளைஞர் அணியில் இருந்து தீவிரமாக "உழைக்கக்கூடிய " பலர், வேட்பாளர் லிஸ்ட்டில் இடம்பெறலாம் என்ற தகவல் சில மாதங்களுக்கு முன்பே வட்டமடித்தது..

திமுக இளைஞரணியில் 9 மாநில துணை செயலாளர்களும் உள்ள நிலையில், சமீபத்தில் இவர்கள் தமிழகம் முழுவதும் சுற்றுப்பணயம் செய்து மாவட்ட, இளைஞரணி நிர்வாகிகள் நியமனத்தை செய்திருந்தனர்... அதுமட்டுமல்ல, கட்சிக்காக கடுமையாக உழைத்தவர்கள் யார் யார் என்பதை கண்டறிந்து, அவர்களுக்கு எம்பி சீட் வழங்கவும் திட்டமிடுவாக தகவல்கள் கசிந்திருந்தன.

உதயநிதி: குறிப்பாக, இளைஞரணிக்கு, வரும் எம்பி தேர்தலில் 6 சீட்களை, தலைமையிடம் பிரத்யேகமாக கேட்டு வாங்கும் முடிவிலும் உதயநிதி இருக்கிறாராம்..

இப்படித்தான், கடந்த எம்பி தேர்தலின்போது, 3 எம்பி சீட்கள் இளைஞரணி சார்பாகத்தான் கேட்டு பெறப்பட்டது. இந்த முறை, 6 ஆக உயர்த்தி கேட்கும் முடிவில் உள்ளதாக தெரிகிறது.. இதில், நிறைய புதுமுகங்கள் + அர்ப்பணிப்புடன் உழைப்பவர்களுக்கு சீட் வழங்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.

அதாவது, திமுக இந்த முறை 21 தொகுதிகளில் போட்டியிட உள்ள நிலையில், இவைகளில் 6 தொகுதிகளில் இளைஞர் அணியைச் சேர்ந்த புதியவர்களுக்கு வாய்ப்புக் கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாம்...

ஈர்ப்பு: தேர்தல் குறித்த அனைத்து முடிவுகளையும், உதயநிதியே எடுப்பதாக சொல்லப்பட்டு வரும்நிலையில், 6 இளைஞர்களுக்கு வாய்ப்பு என்பது, மிகப்பெரிய ஈர்ப்பை கட்சிக்குள் ஏற்படுத்தக்கூடும் என்கிறார்கள். மேலும், இந்த 6 சீட்டுக்களை, மேலிடத்தில் கேட்டு வாங்குவதால், உதயநிதிக்கும் எந்தவித சிக்கலும் இருக்காது என்றே நம்பப்படுகிறது.

இப்போது விஷயம் என்னவென்றால், தற்போது எம்பியாக இருப்பவர்களில் சிறந்த செயல்பாடு உடையவர்களுக்கு மட்டுமே மறுபடியும் போட்டியிட வாய்ப்பு தரப்பட உள்ளதால், சரியாக செயல்படாத மற்ற எம்பிக்களுக்கு மாற்றாக, 6 புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

பரபரப்பு: ஆக மொத்தம், சிறிது காலமாகவே ஓய்ந்திருந்த ஜூனியர் Vs சீனியர் பஞ்சாயத்துக்கள், சீட் விவகாரம் காரணமாக மறுபடியும் திமுகவில் எழுவதற்கு நிறையவே வாய்ப்புள்ளதாம். எனினும், புதுமுகங்களின் வருகையால், திமுகவின் "கலர்" வேறுவிதமாக பிரதிபலிக்கும் என்பதால், மிகுந்த எதிர்பார்ப்பு கூடிவருகிறது..

இன்னொன்றையும் இங்கு சுட்டிக்காட்டுகிறார்கள்.. தேர்தல் நெருங்கிவிட்டதால், கட்சி தொடர்பான முழு பணிகளையும், பிரச்சனைகளையும் சேர்த்து கவனிக்கும்படி, உதயநிதியை, முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டாராம்.

குறிஞ்சி இல்லம்: அதனால், "குறிஞ்சி இல்லம்" போலவே, "அறிவாலயத்துக்கும்" வந்து, அதிகாரபூர்வமற்ற செயல் தலைவராக பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறாராம்.. இதனால், உதயநிதியின் செயல்பாட்டின் வேகமும் கூடியிருப்பதாகவே சொல்கிறார்கள்.. பொறுத்திருந்து பார்ப்போம்..!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+