Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"சாயும்" வேல்முருகன்.. நிமிரும் திருமாவளவன்.. இதென்ன புதுஸ்ஸா இருக்கே.. காரணமே பாஜகதானாம்.. என்னவாம்

விசிகவின் மசென்னை: தமிழக அரசியலில் சில ஆச்சரியங்கள் அவ்வப்போது ஏற்பட்டுவிடும்.. இப்போதும் அப்படித்தான் சில நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன.. இது ஆரோக்கியமானனித சங்கிலி ஆர்ப்பாட்டத்துக்கு வேல்முருகன் ஆதரவு தந்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசியலில் சில ஆச்சரியங்கள் அவ்வப்போது ஏற்பட்டுவிடும்.. இப்போதும் அப்படித்தான் சில நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன.. இது ஆரோக்கியமான அரசியலாக பார்க்கப்பட்டு வருகிறது.

எப்போதெல்லாம் தேர்தல் வருகிறதோ, அப்போதெல்லாம் சீமான் இந்த முறையாவது யாருடனாவது கூட்டணி வைப்பாரா? என்ற எதிர்பார்ப்பு எழும்..

அந்தவகையில், நாம் தமிழர் கட்சியும், விசிகவும் ஒன்று சேர வாய்ப்புள்ளதா? திருமாவளவனும் சீமானும் ஒன்றாக கூட்டணி வைத்தால், அதற்கு நல்ல பலன் கிடைக்குமே என்ற எதிர்பார்ப்பு தமிழகத்தில் ஏற்படும்.

 தாமரைகள்

தாமரைகள்

காரணம், இருவருமே தமிழக மக்களின் நாடிதுடிப்பை உணர்ந்து செயல்படுபவர்கள்.. பாஜகவை வலிய எதிர்ப்பவர்கள் என்பதால், இந்துத்துவாவுக்கு எதிரான வாக்குகளை இவர்கள் அறுவடை செய்ய வாய்ப்பிருப்பதாக நம்பப்பட்டு வருகிறது. ஆனால், அப்படி எதுவுமே இதுவரை நடந்தது இல்லை.. சமீபத்தில், விசிகவின் ஆர்ப்பாட்டத்துக்கு சீமான் தெரிவித்திருந்த ஆதரவு மலைக்க வைத்துள்ளது.. பாஜகவையே திகைக்கவும் வைத்துள்ளது..

 திருமா பாயிண்ட்

திருமா பாயிண்ட்

"தமிழ்நாட்டில் பயங்கரவாதிகள், தேச விரோதிகள், வன்முறைவாதிகள் தைரியமாக, துணிச்சலாக இருப்பதற்கு காரணமே இந்த திருமாவளவனும், சீமானும் போன்ற தீய சக்திகள் தான்... அரசியலில் இருப்பதற்கு தகுதியற்றவர்கள்... உடனே இவர்கள் 2 பேரையும் கைது செய்யுங்கள்" என்று எச்.ராஜா கொந்தளிக்கும் அளவுக்கு அதிர்வலையை ஏற்படுத்தியவர்கள்.. எனினும், சில முரண்பாடுகள் விசிகவுடன் சீமானுக்கு இருக்கவே செய்கிறது.. சமீபத்தில் திருமாவளவன் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருந்ததாவது:

 காலி + காவி

காலி + காவி

"எனக்கு திமுகவும் வேண்டாம், அதிமுகவும் வேண்டாம்... காங்கிரசும் வேண்டாம். பாஜகவும் வேண்டாம். இப்படி எல்லாம் வேண்டாம் என்று சொல்லிவிட்டு என்னத்தை சாதிக்க போகிறீர்கள்? இதைவிட முட்டாள்தனமான முடிவு வேறெதுவும் இருக்காது. எங்களுக்கும் எல்லா கட்சிகளோடும் முரண்பாடு இருக்கத்தான் செய்கிறது. ஆனாலும் நாங்கள் ஏன் சேர்கிறோம்? பகைவர் பலர் இருக்கலாம் அதில் முதலில் காலி செய்ய வேண்டியது யாரை என்பதை பார்க்க வேண்டும். சனாதன தர்மத்தை தலைதூக்கவிடக்கூடாது. 2024 தேர்தலில் பாஜகவை ஜெயிக்க விடக்கூடாது. அதற்காக பிடிக்காவிட்டாலும் நாமெல்லாம் ஒன்றுசேர வேண்டும். நமக்குள் இருக்கும் பகையை பின்னர் பார்த்துக்கொள்ளலாம்" என்று திருமாவளவன் பேசியிருந்தார்.

 வேல்முருகன்

வேல்முருகன்

இதுஒருவகையான, பாஜகவுக்கு எதிராக திரள்வதற்கான அறைகூவலாக உள்ள நிலையில், இதற்கும் சீமானே அப்போது பதிலளித்திருந்தார்.. "திராவிட கட்சிகளிடம் கூட்டணி வைக்காமல் வெல்ல முடியாது என்று அவர் நினைத்தால் பரவாயில்லை. தம்பி நான் போராடி பார்க்கிறேன். வெல்லவே முடியாது என்றெல்லாம் சொல்ல கூடாது. தற்காலிக வெற்றிக்காக நிரந்தர தோல்வியடைய நான் தயாராக இல்லை என்று சீமான் கூறியிருந்த நிலையில், இவர்கள் கூட்டணி வைக்க சாத்தியமே கிடையாதா?" என்ற எதிர்ப்பார்ப்பை மீண்டும் கிளப்பி விட்டு வருகிறது.

 தவாகா செம்ம

தவாகா செம்ம

இப்படிப்பட்ட சூழலில்தான், தமிழக வாழ்வுரிமை ஆச்சரியத்தை கிளப்பும்படியாக நடந்து கொண்டுள்ளது.. விசிகவின் மனித சங்கிலியில் வாழ்வுரிமை கட்சியும் கலந்து கொள்ளும் என்று வேல்முருகன் அறிவித்துள்ளளார்.. 2 கட்சிகளுமே திமுக கூட்டணியில் இருப்பதால், ஒருகட்சிக்கு இன்னொரு கட்சி ஆதரவு தருவதாக எடுத்துக் கொள்ள முடியாது.. காரணம், வட மாவட்டங்களில் இவர்கள் எதிரெதிர் துருவ அரசியலை செய்ய வேண்டி உள்ளது.. அப்போதுதான், வடமாவட்டத்தில் தங்களுக்கான எதிர்கால அரசியலையும் ஆழமாக ஊன்றி செல்ல முடியும்..

 அரசியல் நாகரீகம்

அரசியல் நாகரீகம்

அதனால்தான் கடந்த முறை தேர்தலின்போதுகூட, இந்த கட்சிகள் ஒன்றுக்கொன்று ஒட்டிக்கொள்ளாமல் நாசூக்காக ஒதுங்கி செயல்பட்டனர்.. அப்படிப்பட்ட சூழலில், தமிழக வாழ்வுரிமைக் கட்சியும் விசிக பேரணியில் கலந்துகொள்ளும் என்று அறிவித்துள்ளது, வேல்முருகனின் இணக்கமான முடிவை வெளிப்படுத்தி உள்ளது.. இந்த முடிவினால், விசிக தமிழக வாழ்வுரிமை கட்சியினர் 2 தரப்புமே ஆச்சரியத்தில் உள்ளனர்.. ஆக, பாஜகவுக்கு எதிராக களவாடுவதில் ஒன்றிணைய வேண்டும் என்ற அரசியல் நோக்கம் இதன்மூலம் தெளிவாகிறது.. அத்துடன், அரசியல் நாகரீகத்தின் இன்னொரு பரிமாணமாகவும் இந்த நிகழ்வு பார்க்கப்பட்டு வருகிறது..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+