தமிழகத்தில் ஜெய் ஸ்ரீராம் கோஷமா? நாம் அனுமதிக்கலாமா?.. ஆர்எஸ்எஸ் வாலை சுருட்டிக்கணும்.. திருமாவளவன்
சென்னை: ஜெய் ஸ்ரீ ராம் என்ற முழக்கத்தை தமிழகத்தில் அனுமதிக்கவே கூடாது, ஆர்எஸ்எஸ் வாலை சுருட்டிக் கொண்டு ஓட வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் காட்டமாக விமர்சித்துள்ளார்.
சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் நூல் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி, கலந்து கொண்டார். அவர் புத்தகத்தை வெளியிட விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் பெற்றுக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சி திருமாவளவன் திருக்குறள் என்பது தமிழர்களுக்கான நூல் மட்டுமில்லை. இது அனைவருக்கும் பொதுவான நூலாகும். பல லட்சம் ஆண்டுகள் கடந்தும் , இனி வர போகும் தலைமுறையினருக்கும் திருக்குறள் பொருந்தும்.

பெரியாரின் பார்வை
பெரியாரின் பார்வைக் கொண்டு நடப்பு அரசியல் வைத்து இன்று வெளியான இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. ஆன்மீக குடும்ப பின்னணியில் பிறந்து ஜாதி மதம் இல்லை என சொன்னவர் பெரியார். அவர் மக்களின் குரலாக மாறி விடுதலைக்கு போராடினார்.

பெரியாரின் கொள்கைள்
பெரியாருக்கு சிலர் பூணூல் போட்டு பார்க்கிறார்கள். சில பேர் காவி உடுத்தி பார்க்கிறார்கள். பெரியாரின் கொள்கைகளும் வள்ளுவமும் ஒன்றுதான். பெரியார் பிறந்த இந்த மண்ணில் ஜெய் ஸ்ரீ ராம் என்ற குரலை நாம் அனுமதிக்கலாமா? மதத்தின் பெயரால் தமிழகத்தை வன்முறை காடாக மாற்றிட வித்திடுகிறார்கள். நாம் அதை அனுமதிக்கலாமா?

ஆர்எஸ்எஸ் பேரணி
ஆர்.எஸ்.எஸ். பேரணி மூலம் சமூகநீதியை பாதுகாக்க போகிறார்களா? ஜெய் ஸ்ரீராம் என்ற முழக்கத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பது மட்டும்தான் அவர்களின் நோக்கம். புதுவையில் 3 அமைச்சர்கள் அரைக்கால் டவுசர் போட்டுக் கொண்டு ஆர்.எஸ்.எஸ். பேரணியில் கலந்து கொள்வது வெட்கக்கேடானது.

10 ஆண்டுகள்
ஆர்.எஸ்.எஸ் பேரணியை நாம் ஆதரித்தால் அடுத்த 10 ஆண்டுகளுக்கு பிறகு நாம் கருப்பு, நீலம், சிவப்பு சட்டை அணிய முடியாது. 11 ஆம் தேதி சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டத்தில் நாம் காட்டுகிற ஒற்றுமையை பார்த்து அவர்கள் வாலை சுருட்டிக் கொண்டு ஓட வேண்டும். எந்த பிரச்சினை வந்தாலும் அதை எதிர்கொள்ளக் கூடிய துணிச்சல் முதல்வர் ஸ்டாலினுக்கு உண்டு. இவ்வாறு திருமாவளவன் ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் பேசியிருந்தார்.
-
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
எடப்பாடியை சந்திக்காத இரு துருவங்கள்! தவெக தலைமையுடன் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ரகசிய ஆலோசனை? -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!












Click it and Unblock the Notifications