பட்டா இல்லாத நிலத்தை வாங்கலாமா? அது அரசு நிலமா? ஒரு குட்டி தப்பு.. உங்க ஆயுள் கால சேமிப்பே காலியாகும்
சென்னை: நிலம் என்பது ஒரு மனிதனின் வாழ்நாள் சேமிப்பும் கனவும் ஆகும்.. பலர் பல ஆண்டுகள் உழைத்து சேமித்த பணத்தை வைத்து ஒரு சிறிய நிலம் வாங்க வேண்டும் என்ற ஆசையுடன் வாழ்கிறார்கள்.. ஆனால் நிலம் வாங்கும் அவசரத்தில் அதன் சட்டப்பூர்வமான ஆவணங்களைச் சரிபார்க்காமல் வாங்கிவிட்டால், அந்த கனவு சில நேரங்களில் பெரிய சிக்கலாக மாறிவிடும்.. அந்தவகையில் பட்டா விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.
நம்முடைய தமிழகத்தை பொறுத்தவரை நிலத்தின் உரிமையை உறுதிப்படுத்தும் முக்கியமான ஆவணங்களில் ஒன்றாக பட்டா கருதப்படுகிறது.. எனவே பட்டா இல்லாத ஒரு நிலத்தை வாங்குவது வீணானது,.

பட்டா என்பது வருவாய்த் துறையினரால் வழங்கப்படும் நில உரிமை பதிவாகும்.. ஒரு நிலம் யாருடைய பெயரில் இருக்கிறது, அதன் சர்வே எண் என்ன, பரப்பளவு மற்றும் எல்லைகள் என்ன என்பது போன்ற விவரங்கள் இதில் பதிவு செய்யப்பட்டிருக்கும்.. இதனால் அந்த நிலத்தின் தற்போதைய உரிமையாளர் யார் என்பதைக் கண்டறிய பட்டா ஒரு முக்கியமான ஆதாரமாக செயல்படுகிறது.. அதனால் தான் நிலம் வாங்கும் போது முதலில் பார்க்க வேண்டிய ஆவணங்களில் ஒன்றாக பட்டா கருதப்படுகிறது..
பிரிக்கப்படாத நிலம்
அதே நேரத்தில், பட்டா இல்லாத நிலத்தை வாங்குவது முற்றிலும் சட்டவிரோதம் என்று சொல்ல முடியாது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்..
சில நேரங்களில் புதியதாக பிரிக்கப்பட்ட நிலங்கள், விவசாய நிலங்கள் அல்லது கிராம நாதம் நிலங்கள் போன்றவற்றிற்கு ஆரம்பத்தில் பட்டா மாற்றம் செய்யப்பட்டிருக்காமல் இருக்கலாம்.. அத்தகைய சூழலில் விற்பனை பத்திரம் முதன்மை உரிமை ஆவணமாக இருக்கும்.. ஆனால் அந்த நிலத்திற்கு பின்னர் பட்டா பெற முடியுமா, அந்த நிலத்தின் உரிமை தெளிவாக உள்ளதா என்பதை மிகவும் கவனமாகச் சரிபார்க்க வேண்டியது அவசியம்..
பட்டா இல்லாத நிலங்களை வாங்குவதில் இருக்கும் மிக முக்கியமான ஆபத்து 'அரசு நில ஆக்கிரமிப்பு' பிரச்சனையாகும்.. பல நேரங்களில் நீர்நிலைகள், மேய்ச்சல் புறம்போக்கு நிலங்கள் அல்லது அரசுக்குச் சொந்தமான தரிசு நிலங்களைச் சிலர் போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்ய முயல்வார்கள்.. இத்தகைய நிலங்களுக்கு ஒருபோதும் பட்டா கிடைக்காது..
பட்டா இல்லாத நிலங்கள்
நீங்கள் பணம் கொடுத்து வாங்கிய பிறகு அரசு அந்த நிலத்தை மீட்க முயன்றால், எந்த இழப்பீடும் இல்லாமல் அந்த நிலத்தை இழக்கும் அபாயம் ஏற்படலாம்..
அதுமட்டுமல்ல, பட்டா இல்லாத நிலங்களுக்கு வங்கிகளில் கடன் பெறுவதும் மிகவும் கடினமாக இருக்கும்.. வங்கிகள் பொதுவாக பட்டா, சிட்டா, அடங்கல் போன்ற வருவாய் பதிவுகளை வைத்து தான் நிலத்தின் உரிமையை உறுதிப்படுத்துகின்றன.. அதனால் பட்டா இல்லாத நிலத்தில் முதலீடு செய்தால், பின்னர் வீடு கட்ட கடன் பெற முடியாமல் சிக்கல் ஏற்படலாம்..
ஆன்லைன் பதிவுகள்
இதில் இன்னொரு சிக்கல் என்னவென்றால், அந்த நிலம் ஏற்கனவே பலருக்கு விற்கப்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது.. பட்டா இருந்தால் தற்போதைய உரிமையாளர் யார் என்பது ஆன்லைன் பதிவுகள் மூலம் தெளிவாக தெரிந்துவிடும். ஆனால் பட்டா இல்லாத சூழலில் விற்பனையாளர் பழைய பத்திரங்களை காட்டி ஏமாற்றவும் வாய்ப்பு உள்ளது.. மேலும் அந்த நிலத்தை உங்கள் பெயருக்கு மாற்றுவதற்கும், வீடு கட்டுவதற்கான DTCP அல்லது CMDA அனுமதி பெறுவதற்கும் பட்டா மிக முக்கியமான ஆவணமாக கருதப்படுகிறது..
எனவே குறைந்த விலைக்கு கிடைக்கிறது என்பதற்காக பட்டா இல்லாத நிலத்தை வாங்குவது புத்திசாலித்தனமான முடிவு கிடையாது என்கிறார்கள் நிபுணர்கள்..
வில்லங்க சான்றிதழ், பழைய பத்திரங்கள்
நிலம் வாங்குவதற்கு முன்பு வில்லங்கச் சான்றிதழ், பழைய பத்திரங்கள், நிலத்தின் வரலாறு மற்றும் பட்டா நிலை போன்றவற்றை முழுமையாகச் சரிபார்க்க வேண்டும்.. தேவையானால் சட்ட நிபுணர்களின் ஆலோசனையும் பெறுவது நல்லது.. ஆவணங்கள் தெளிவாக இல்லாத நிலத்தில் முதலீடு செய்வது உங்கள் சேமிப்பையும் நிம்மதியையும் ஒரே நேரத்தில் பாதிக்கக்கூடும்.. சரியான ஆய்வு மற்றும் உறுதிப்படுத்தல் மட்டுமே நிலம் வாங்கும் கனவை பாதுகாப்பாக மாற்றும்...!!
நிலம் வாங்குவது உங்கள் வாழ்நாள் கனவு. அதைச் சரியாகச் செய்ய பட்டா மற்றும் பத்திரங்களைச் சரிபார்ப்பது அவசியம். இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், நிலம் வாங்கத் திட்டமிடும் உங்கள் நண்பர்களுக்கும் இதைப் பகிருங்கள்!
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications