ஒரு பைக்கை வச்சு.. பதம் பார்த்துட்டாங்களே! டிஎன்பிஎஸ்சி குரூப் 2வில் ஷாக்கிங் கேள்வி.. பதில் என்ன?
சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு கடந்த 2 நாட்களுக்கு முன் தமிழ்நாடு முழுக்க நடந்தது. இந்த நிலையில் இந்த தேர்வுக்கான விடைக் குறிப்பு இன்னும் 4 வேலை நாட்களில் வெளியிடப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பிரபாகர் தெரிவித்துள்ளார். இந்த தேர்வில் பல சுவாரசியமான கேள்விகள் கேட்கப்பட்டன.
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு மூலம் பல முக்கியமான அரசு பதவிகளை பெற முடியும். இந்த தேர்வு மூலம் கிடைக்கும் பதவிகள் என்னென்ன என்று இங்கே பார்க்கலாம்.

- ஜூனியர் வேலைவாய்ப்பு அதிகாரி (மாற்றுத் திறனாளிகள் அல்லாதவர்கள்)
- சிறைச்சாலைகள் மற்றும் சீர்திருத்த சேவைகள் திணைக்களத்தில் நன்னடத்தை அதிகாரி
- தொழிலாளர் துறையில் தொழிலாளர் உதவி ஆய்வாளர்
- துணைப் பதிவாளர், பதிவுத் துறையில் தரம்-II
- வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சியில் (வேலைவாய்ப்பு பிரிவு) இளைய வேலைவாய்ப்பு அலுவலர் (மாற்றுத் திறனாளிகள்)
- விஜிலென்ஸ் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையில் சிறப்பு உதவியாளர்
- காவல் ஆணையர் அலுவலகத்தின் புலனாய்வுப் பிரிவில் சிறப்புப் பிரிவு உதவியாளர்
- குற்றப் புலனாய்வுத் துறையின் சிறப்புப் பிரிவில் சிறப்புக் கிளை உதவியாளர் (மாநில உளவுப் பிரிவு)
இதில் விஜிலென்ஸ் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையில் சிறப்பு உதவியாளர், துணைப் பதிவாளர், பதிவுத் துறையில் தரம்-II, குற்றப் புலனாய்வுத் துறையின் சிறப்புப் பிரிவில் சிறப்புக் கிளை உதவியாளர் (மாநில உளவுப் பிரிவு), காவல் ஆணையர் அலுவலகத்தின் புலனாய்வுப் பிரிவில் சிறப்புப் பிரிவு உதவியாளர் ஆகிய பதவிகள் நல்ல பவர் நிறைந்த பதவிகள் ஆகும்.
கேள்வி: இந்த தேர்வில் பல சுவாரசியமான கேள்விகள் கேட்கப்பட்டன. இதில் கேட்கப்பட்ட பைக் பற்றிய கேள்வி ஒன்றை இங்கே பார்க்கலாம்.
The value of a motor cycle 2 years ago was Rs. 80,000. It depreciates at the rate of 4% p.a. in first year. In second year it increases by 4% p.a. Find the present value.
(A) Rs. 76,800
(B) Rs. 80,000
(C) Rs. 80,128
(D) Rs. 79,872
(E) Answer not known
இரு சக்கர வாகனம் ஒன்றின் விலை இரண்டு ஆண்டுகளுக்கு முன் ரூ. 80,000. முதல் ஆண்டு ஆண்டிற்கு 4% குறைகிறது. இரண்டாம் ஆண்டு 4% அதிகரிக்கிறது. எனில் அதன் தற்போதைய விலை என்ன?
(A) Rs. 76,800
(B) Rs. 80,000
(C) Rs. 80,128
(D) Rs. 79,872
(E) விடை தெரியவில்லை
விடை கண்டுபிடிக்கும் பார்முலா:
படி 1: முதல் ஆண்டில் தேய்மானம்
2 ஆண்டுகளுக்கு முன்பு மோட்டார் சைக்கிளின் மதிப்பு ரூ. 80,000. முதல் ஆண்டில் 4% என்ற விகிதத்தில் தேய்மானம் அடைந்தது.
தேய்மானம் மதிப்பு=80,000×(1-4/100)=80,000×0.96=76,800
படி 2: இரண்டாம் ஆண்டில் தேய்மானம்:
இரண்டாவது ஆண்டில் தேய்மானம் மதிப்பு 4% அதிகரித்துள்ளது. இந்த உயர்வை இப்போது உள்ள தேய்மானத்திற்குப் பிறகு (ரூ. 76,800) பயன்படுத்த வேண்டும்.
தற்போதைய மதிப்பு=76,800×(1+4/100 )=76,800×1.04=79,872
இதனால், மோட்டார் சைக்கிளின் தற்போதைய மதிப்பு ரூ. 79,872.
இதனால் சரியான விடை:
(D) ரூ. 79,872












Click it and Unblock the Notifications