டிஎன்பிஎஸ்சி குரூப் 1ல்..சட்டென பார்த்தால் கமல் பெயரில் கேள்வி! இப்படி ஒரு கேள்வியா! பதில் சொல்லுங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 கேட்கப்பட்ட கமல் என்ற பெயரை கொண்ட கேள்வி ஒன்று பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த ஜூன் 9ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை நடத்தியது. தமிழகத்தில் பல்வேறு துறைகளில் உள்ள 6624 க்ரூப் 4 காலியிடங்களை நிரப்பவே இந்தத் தேர்வு நடத்தப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் 7,247 தேர்வு மையங்களில் நடந்த 10 ஆம் வகுப்பு கல்வி தகுதி கொண்ட குரூப் 4 தேர்வை 15.8 லட்சம் பேர் எழுதியுள்ளனர் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

tnpsc group 4 exam tnpsc jobs job tamil nadu

ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்கள் இதன் மூலமே நிரப்பப்படும். குரூப் 1, குரூப் 2, 2ஏ, குரூப் 4 என பல்வேறு நிலைகளில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இரண்டு நாட்களுக்கு முன் துணை கலெக்டர் 16 இடங்கள், துணை காவல் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி)-23, வணிகவரித்துறை உதவி ஆணையர்-14, கூட்டுறவு துறை துணை பதிவாளர்- 21, ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குநர்- 14, மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி 1, மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி 1 பணியிடம் என 90 இடங்களை நிரப்புவதற்கான முதல் நிலை தேர்வு நடைபெற்றது.

குரூப் 1 தேர்வு: இந்த நிலையில் நேற்று நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் புதிதாக இன்வேலிட் மதிப்பெண் முறை மீண்டும் கடைப்பிடிக்கப்பட உள்ளது. குரூப் 4 தேர்வில் இந்த புதிய முறை பயன்படுத்தப்பட்ட நிலையில் மீண்டும் குருப் 1 தேர்வில் இதே முறை பயன்படுத்தப்பட உள்ளது.

இந்த முறைப்படி ஒரே கேள்விக்கு தவறான பதிலை முதலில் தேர்வு செய்து பின்னர் ஷெட்டில் அதை அடித்து விட்டு பிறகு வேறு பதிலை தேர்வு செய்ய கூடாது.

அப்படி குறித்தால் அந்த கேள்விக்கான மதிப்பெண் இன்வேலிட் ஆகிவிடும். அதாவது மாற்றி சரியான விடையை கொடுத்தாலும் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஓஎம்ஆர் ஷீட்டில் எது சரியான விடையோ அதை மட்டும் தேர்வு செய்ய வேண்டும்.

கேள்வி; இந்த நிலையில், டிஎன்பிஎஸ்சி குரூப் 1 கேட்கப்பட்ட கமல் என்ற பெயரை கொண்ட கேள்வி ஒன்று பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.

அதன்படி, In a class of 35 students Kamal is placed seventh from the bottom whereas Suresh is placed ninth from the top. Ramesh is placed exactly in between the two. What is Kamal's position from Ramesh?

(A) 9
(B) 10
(C) 11
(D) 13
(E) Answer not known

ஒரு வகுப்பில் 35 மாணவர்கள் உள்ளனர், கீழிலிருந்து கணக்கிடும்போது கமல் என்பவர் ஏழாவது இடத்தில் உள்ளார், மேல் இருந்து கணக்கிடும் போது சுரேஷ் என்பவர் ஒன்பதாவது இடத்தில் உள்ளார். ரமேஷ் என்பவர் இவ்விருவருக்கும் இடையில் உள்ளார். ரமேஷ் உடன் ஒப்பிடும் போது கமல் எந்த இடத்தில் உள்ளார்?

(A) 9
(B) 10
(C) 11
(D) 13
(E) விடை தெரியவில்லை

கேள்விப்படி கமல் 29வது இடத்தில் உள்ளார்.

சுரேஷ் 9வது இடத்தில் உள்ளார்.

ரமேஷ் என்பவர் இவ்விருவருக்கும் இடையில் உள்ளார் என்றால் இவர் 19வது இடத்தில் உள்ளார்.

எனவே: ரமேஷ் உடன் ஒப்பிடும் போது கமல் எந்த இடத்தில் உள்ளார்? - விடை (B) 10

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+