தலையை சுற்ற வைக்கும் கேள்வி.. இந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 2 கேள்விக்கு.. முடிஞ்சா பதில் சொல்லுங்க!
சென்னை: நேற்று குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வு நடந்தது. டிஎன்பிஎஸ்சி குரூப் 2ல் கேட்கப்பட்ட கேள்வி ஒன்று கவனம் பெற்றுள்ளது. கணிதம் தொடர்பான இந்த கேள்வி கொஞ்சம் கடினமாக இருந்ததாக தேர்வு எழுதிய பலர் தெரிவித்துள்ளனர்.
நேற்று குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வு நடந்தது. குருப் 2, 2ஏ பணிகளில் அடங்கிய 2,327 காலிப் பணியிடங்களுக்கான இந்த விண்ணப்பங்களை செய்து உள்ளது. இந்த போட்டித் தேர்விற்கு 7 லட்சத்து 90 ஆயிரத்து 376 பேர் விண்ணப்பம் அனுப்பி உள்ளனர். . குருப் 2 பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு இதனால் மிக கடுமையானதாக அமைந்துள்ளது. போட்டி உச்சத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.. இதனால் சரியாக சொல்ல வேண்டும் என்றால் ஒரு பணியிடத்திற்கு 340 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.

இந்த நிலையில்தான் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு இன்று தமிழ்நாடு முழுக்க நடந்தது. இந்த நிலையில் இந்த தேர்வுக்கான விடைக் குறிப்பு இன்னும் 6 வேலை நாட்களில் வெளியிடப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பிரபாகர் தெரிவித்துள்ளார். இதன் வினாத்தாள் தற்போது வெளியாகி உள்ளது.
கேள்வி: டிஎன்பிஎஸ்சி குரூப் 2ல் கேட்கப்பட்ட கேள்வி ஒன்று கவனம் பெற்றுள்ளது. கணிதம் தொடர்பான இந்த கேள்வி கொஞ்சம் கடினமாக இருந்ததாக தேர்வு எழுதிய பலர் தெரிவித்துள்ளனர். நெட்டிசன்கள் பலர் இந்த விடையை கண்டுபிடிக்க கொஞ்சம் அதிக நேரம் எடுத்ததாக குறிப்பிட்டு உள்ளனர்.
Gopi sold a laptop at 12% gain. If it had been sold for Rs. 1,200 more, the gain would have been 20%. Find the cost price of the laptop.
(A) Rs. 15,000
(B) Rs. 16,000
(C) Rs. 14,000
(D) Rs. 15,500
(E) Answer not known
கோபி ஒரு மடிக்கணினியை 12% இலாபத்திற்கு விற்றார். மேலும் அதை ரூ.1,200-க்கு கூடுதலாக விற்றிருந்தால் இலாபம் 20% ஆக இருந்திருக்கும். மடிக்கணினியின் அடக்க விலையைக் காண்க.
(A) Rs 15,000
(B) Rs. 16,000
(C) Rs 14,000
(D) Rs. 15,500
(E) விடை தெரியவில்லை
எப்படி கண்டுபிடிப்பது?:
மடிக்கணினியின் விலை C என்று வைத்துக்கொள்வோம்.
முறை 1: கோபி இதை 12% லாபத்திற்கு விற்றார் என்றால்..
விற்பனை 1= C+0.12C=1.12C
முறை 2: கோபி 1200 ரூபாய் கூடுதலாக விற்று இருந்தால்.. லாபம் 20 சதவிகிதம் ஆகும்
விற்பனை 2 =C+0.20C=1.20C
இரண்டுக்கும் வேறுபாடு Rs. 1,200:
அதாவது விற்பனை 2 - விற்பனை 1 = 1200
இதை பின்வருமாறு எழுதலாம்
1.20C-1.12C=1,200
0.08C=1,200
𝐶 = 1 , 200/ 0.08
𝐶=15, 000
எனவே லேப்டாப்பின் விலை Rs. 15,000.
எனவே சரியான விடை என்பது (A) Rs. 15,000 ஆகும்.
உங்களால் இந்த கேள்விக்கு சரியாக பதில் அளிக்க முடிந்ததா சொல்லுங்கள்?
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்'












Click it and Unblock the Notifications