உங்க கண்களுக்கு சவால்.. படத்தில் பூனை எங்கே இருக்கு? 8 செகண்டில் கண்டுபிடிங்க பார்க்கலாம்!
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் புகைப்படத்தில் பூனை எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க வேண்டும். படத்தில் வீடுகள் அடுக்கடுக்காக உள்ளது போல் தெரிந்தாலும், உங்கள் கண்களுக்கு சவால் அளிக்கும் வகையில், இங்கே ஒரே ஒரு பூனை ஒளிந்து இருக்கிறது. இந்த பூனையை 8 செகண்டில் கண்டுபிடித்து சொல்லுங்கள் பார்க்கலாம்.
காட்சிப்பிழை என்பது போல் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இருப்பதை இல்லாதது போன்றும், இல்லாததை இருப்பது போன்றும் காண்பிக்கும். ஆப்டிகல் மாயை புகைப்படங்கள் நம் கண்களை ஏமாற்றிவிடும். உண்மையில் ஒரு படத்தில் என்ன தெரிகிறது என்பதை கண்களை மட்டும் வைத்து பார்த்தால் சொல்லிவிட முடியாது.

உடல் மற்றும் உணர்வு ரீதியாக ஆராய்ந்தால் மட்டுமே கண்டுபிடிக்க இயலும். அந்த அளவுக்கு ஆப்டிகல் மாயை புகைப்படங்கள் உருவாக்கப்பட்டிருக்கும். இத்தகைய மாயை புகைப்படம் ஒன்று தான் இன்று இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. இந்த இல்யூஷன் படத்தில் பூனை ஒன்று மறைந்து இருக்கிறது. ஆனால் நாம் படத்தை மேலோட்டமாக பார்க்கும் போது இந்த பூனை நம் கண்களுக்கு தெரியாது.
ஒரு முறை பார்த்தால் நம் கண்களுக்கு விடை தெரியாது. பலமுறை படம் முழுக்க, அங்கும், இங்குமாக தேடிப்பார்த்தால் மட்டுமே விடையை கண்டுபிடிக்க முடியும். இல்லையெனில் கொஞ்சம் மூளையை கசக்கி பிழிந்தால் உடனடியாக விடையை கண்டுபிடித்து விட முடியும். இந்த இல்யூஷன் படத்திற்கான விடையை 8 செகண்டில் கண்டுபிடிக்க வேண்டும் என்று சவால் விடுக்கப்பட்டுள்ளது.
உங்களால் முடிகிறதா என்று முயற்சி செய்து பாருங்கள். உங்களுக்கான டைம் தொடங்கியது.. 1.. 2.. 3.. .. 8. ஓக்கே டைம் ஓவர். 8 செகண்டுக்குள் பூனை இருக்கும் இடத்தை கண்டுபிடித்தவர்கள் கிரேட் தான். ஆனால் 8 செகண்ட் டைம் முடிந்த பிறகும் பூனை இருக்கும் இடம் தெரியாமல் தேடிக்கொண்டிருப்பவர்கள் கவலைப்பட வேண்டாம். உங்களுக்காக நாங்கள் ஒரு டிப்ஸ் தருகிறோம். அதாவது படத்தின் வலதுபுறம் டாப்பில் மட்டும் பாருங்கள். பூனை இருப்பது தெரிந்துவிடும்.
இப்போது 100க்கு 95 பேர் விடையை கண்டுபிடித்து இருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆனால் இன்னமும் எங்கள் கண்களுக்கு பூனை இருக்கும் இடம் தெரியவில்லையே என்று சொல்பவர்களுக்கு நாங்களே விடையை சொல்லிவிடுகிறோம். இங்கே கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் விடை வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது. பார்த்து தெரிந்துகொள்ளலாம்.













Click it and Unblock the Notifications