மாம்பழங்களுக்கு இடையே மறைந்திருக்கும் "கிளி" உங்க கண்களுக்கு தெரிகிறதா? 5 செகண்டில் கண்டுபிடிங்க
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூசன் படத்தில் தித்திக்கும் மாம்பழங்களுக்கு நடுவே ஒரு அழகான கிளி ஒன்று மறைந்துள்ளது. இந்த கிளியை 5 செகண்டில் கண்டுபிடித்தால் நீங்க கில்லாடி தான். என்ன சவாலுக்கு ரெடியா.. கிளியை கண்டுபிடியுங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் எனப்படும் ஒளியியல் மாயை படங்கள் ஒருவரின் கவனிப்புத்திறன் மற்றும் புத்திக்கூர்மை ஆகியவற்றை சோதிக்கும் வகையில் அமைந்து இருக்கின்றன. இதனால், இத்தகைய இல்யூஷன் படங்கள் தற்போது நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.

பொழுதுபோக்கு நேரத்தில் சவால் மிக்க இல்யூஷன் படங்களை பார்ப்பதில் நெட்டிசன்கள் மிகவும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில் இன்று ஒரு ஆப்டிகல் இல்யூஷன் நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இந்த படத்தில் மாம்பழங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. ஆனால் இதில் ஒரு பச்சைக்கிளி ஒன்று மறைந்து இருக்கின்றது.
இந்த கிளியை கண்டுபிடிப்பதே இன்றைய சவால் ஆகும். மாம்பழ நிறத்தில் கிளியும் இருப்பதனால் பார்பதற்கு கொஞ்சம் குழப்பமாக இருக்கும். ஆனால் பலரும் ஈசியாக கிளி எங்கே இருக்கிறது என்பதை கண்டுபிடித்துள்ளனர். உங்களால் 5 செகண்டில் கண்டுபிடிக்க முடிகிறதா என்று சோதித்து பாருங்கள்.. உங்களுக்கான டைம் ஸ்டார்ட்ஸ் நவ்.. 1..2.. 3... 4.. 5. ஒகே டைம் ஓவர்..
சரியாக 5 செகண்டுக்குள் நீங்கள் கிளி எங்கே இருக்கிறது என்பதை கண்டுபிடித்து இருந்தால் பாராட்டுக்கள். உங்கள் கவனிப்பு திறன் அருமையாக இருக்கின்றது. ஆனால் கிளியை கண்டுபிடிக்க முடியாதவர்கள் மீண்டும் ஒருமுறை படத்தை உற்று கவனித்து பார்த்தால் தெரிந்துவிடும். இல்லையென்றால், படத்தின் இடது புறம் மேல் பகுதியில் மட்டும் கூர்ந்து பாருங்கள்..
கண்டிப்பாக இப்போது கிளி எங்கே இருக்கிறது என்பதை கண்டுபிடித்து இருப்பீர்கள். அட! இப்போதும் கூட கிளி எங்கே இருக்கிறது என்பது தெரியவில்லையே என்று சொல்பவர்களுக்கு இங்கே கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் விடை வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது. பார்த்து தெரிந்து கொள்ளலாம். அட இவ்வளவு தானா என்று யோசிக்க தோன்றுகிறதா. இது தான் ஆப்டிகல் இல்யூஷன் படம்.
இப்படித்தான் ஆப்டிகல் இல்யூஷன் படம் பார்க்கும் நம் கண்களை குழப்பி மூளைக்கு வேலை கொடுக்கிறது. விடையை பார்த்த பின்னர், இவ்வளவு தானா என்று எண்ணத்தோன்றும் இந்த வகை ஆப்டிகல் மாயை படங்கள், பொழுதுபோக்கு அம்சங்களோடு, சவால் மிக்கதாகவும் இருப்பதால் பலரும் இதனை விரும்பி பார்த்து தங்களது திறனையும் சோதித்து பார்க்கின்றனர்.













Click it and Unblock the Notifications