ரோஜாப்பூ மட்டும் இல்லை.. பெண் ஒருவரும் இங்கே இருக்கிறார்? 8 செகண்டில் கண்டுபிடிங்க பார்க்கலாம்!
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டு உள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ரோஜாப்பூ ஒன்று உள்ளது. பெரும்பாலானோரின் கண்களுக்கு பூ மட்டுமே தெரிந்தாலும், இந்த படத்தில் பெண் ஒருவரும் மறைந்து இருக்கிறார். அந்த பெண் எங்கே இருக்கிறார் என்று கண்டுபிடிக்க வேண்டும். அதுவே உங்களுக்கான இன்றைய சவால் ஆகும். அதுவும் 8 செகண்டில் கண்டுபிடிக்க வேண்டும். உங்களால் 8 செகண்டுக்குள் கண்டுபிடிக்க முடிகிறதா என்று முயற்சி செய்து பாருங்கள்.
ஒளியியல் மாயை என்று சொல்லப்படும் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒரு மாயாஜால படங்களாகும். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல ஒரே படத்தில் பல கருத்துக்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட தோற்றங்கள் தெரியும். உதாரணமாக நாம் உற்று பார்த்தால் ஒரு தோற்றத்தையும், மேலோட்டமாக பார்க்கும் போது ஒருவித தோற்றத்தையும் காண்பிக்கும்.

இதனாலேயே இந்த படங்களை கண்கட்டி வித்தை படங்கள் என்றும் சொல்வார்கள். நம் கண்களையே ஏமாற்றிவிடும் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள். இந்த படங்களை ரெகுலராக பார்ப்பவர்களின் கவனிப்புத் திறன் மேம்படுவதாகவும் ஆய்வுகள் சொல்கின்றன. இதனாலேயே இந்த படங்கள் குறித்து அரசு போட்டித்தேர்வுகளில் கூட கேட்கப்படுகிறதாம். சரி இங்கே விஷயத்திற்கு வருவோம்.
இன்று நாம் பார்க்க இருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ரோஜாப்பூ ஒன்று இருப்பது போல் இருக்கிறது. கருப்பு வெள்ளை நிறத்தில் கொடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் முதலில் பார்க்கும் போது பூவை தவிர வேறு ஒன்றும் கண்ணுக்கு தெரியவில்லை. அப்படித்தானே.. ஆனால் நன்கு உற்று பார்த்தீர்கள் என்றால், இந்த பூவுக்குள் பெண் ஒருவர் மறைந்திருப்பது உங்கள் கண்களுக்கு தெரியும்.
நாங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை.. பொய்யில்லை.. அந்த பெண் எங்கே இருக்கிறார் என்று கண்டுபிடிப்பதே உங்களுக்கான இன்றைய சவால் ஆகும். அதுவும் 8 செகண்ட் டைமுக்குள் கண்டுபிடிக்க வேண்டும். என்ன போட்டிக்கு தயாராக இருக்கிறீர்களா?.. பெல் அடித்துவிடலாமா.. 1.. 2.. 3. .. 8. ஓக்கே டைம் முடிந்தது. குறிப்பிட்ட 8 நொடிக்குள் பெண் இருக்கும் இடத்தை கண்டுபிடித்தவர்களுக்கு பாராட்டுக்கள்.
உண்மையிலேயே நீங்க கிரேட் தான். உங்கள் கண்பார்வை அபாரமாக உள்ளது. ஆனால் பெண் இருப்பது போலவே தெரியவில்லையே என்று நினைப்பவர்கள் மீண்டும் ஒருமுறை படத்தை பார்த்தீர்கள் என்றால் கண்டுபிடித்துவிடலாம். பொறுமையாக தேடுங்கள். படத்தில் எங்கு வேண்டுமானாலும் பெண் மறைந்து இருக்கலாம் என்ற கோணத்தில் தேடுங்கள் எளிதில் கண்டுபிடித்துவிடலாம். இப்போது பலரும் கண்டுபிடித்து இருப்பீர்கள் என்று நம்புகிறோம்.
ஆனால் இன்னமும் 5 சதவிகிதம் பேர் விடை தெரியாமல் விழித்துக்கொண்டு இருப்பது தெரிகின்றது. உங்களுக்காகவே ஒரு டிப்ஸ் தருகிறோம். அதாவது படத்தை தலைகீழாக திருப்பி பார்த்தால் விடை தெரிந்துவிடும். அட இவ்வளவு தானா..! விடையை கண்டுபிடித்துவிட்டோம் என்று நீங்கள் சொல்வது புரிகிறது.. இருந்தாலும் இங்கே கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் விடையானது வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது. பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.













Click it and Unblock the Notifications