உங்க கண்களுக்கு சவால்.. படத்தில் ”பட்டாம்பூச்சி” எங்கே இருக்கு? சரியாக சொன்னால் நீங்க தான் ஜீனியஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் மாயை புகைப்படத்தில் அழகு அழகாக பல வண்ணங்களில் கிளிகள் மரத்தில் அமர்ந்திருப்பது போல் இருக்கிறது. இந்த கிளிகளுக்கு மத்தியில் ஒரு அழகான பட்டாம்பூச்சியும் இருக்கிறது. ஆனால் இந்த பட்டாம்பூச்சி எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை. இந்த பட்டாம்பூச்சியை கண்டுபிடிப்பதே உங்களுக்கான இன்றைய டாஸ்க். அதுவும் 6 செகண்டில் கண்டுபிடிக்க வேண்டும். என்ன முடியுமா?.. வாருங்கள் பார்க்கலாம்.

பார்க்கும் நம் கண்களை குழப்பி மூளைக்கு வேலை கொடுக்கும் மாயாஜால புகைப்படங்களே ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஆகும். இந்த இல்யூஷன் படங்களால் ஒருவரது கவனிப்புத் திறன், சிந்தனைத் திறன் வளர்ச்சியடையும் என்று ஆய்வுகள் சொல்கின்றன. தொடர்ச்சியாக இதுபோன்ற படங்களை பார்த்து அதில் மறைந்து இருக்கும் விடையை கண்டுபிடித்து வருவதனால், அவனது கவனிப்புத்திறன் மேம்படுகிறது.

optical illusion offbeat trend


மேலும் ஒருவரது சிந்தனை எப்படி இருக்கிறது, அவர் அந்த படத்தை எந்த கோணத்தில் அனுகுகிறார் என்பதை வைத்து அவரது குணாதிசியங்களை கூட சொல்லிவிட முடியுமாம். இதன் காரணமாகவே இது போன்ற படங்கள் தற்போது அதிகம் இணையத்தில் வட்டமடித்து வருகின்றன. சரி இங்கே நாம் விஷயத்திற்கு வருவோம்.. இன்று நாம் பார்க்க இருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பட்டாம் பூச்சியை கண்டுபிடிக்க வேண்டும்.


பட்டாம்பூச்சி தானே எளிதாக கண்டுபிடித்துவிடலாம் என்று எண்ணிவிட முடியாது. உங்கள் கண்களுக்கு சவால் அளிக்கும் வகையில் இந்த இல்யூஷன் படமானது கொடுக்கப்பட்டுள்ளது. எனவே உங்கள் மூளையை கசக்கி பிழிந்து இதற்கான விடையை கண்டுபிடிக்க வேண்டியிருக்கும். அதுவும் 6 செகண்ட் மட்டுமே டைம். எனவே கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் பட்டாம்பூச்சியை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம். ஒக்கே உங்களுக்கான நேரம் தொடங்கியது.


1. 2.. 3.. .. 6. ஓக்கே டைம் ஓவர்.. 100க்கு 50 சதவிகிதம் பேர் பட்டாம்பூச்சி இருக்கும் இடத்தை கண்டுபிடித்து இருப்பீர்கள் என்று நம்புகிறோம். உங்களுக்கு பாராட்டுக்கள். நீங்க ஒரு ஜீனியஸ் என்று நிரூபித்து விட்டீர்கள். ஆனால் பட்டாம்பூச்சி எங்கே இருக்கிறது?.. எல்லா பக்கமும் பார்த்துவிட்டோமே.. ஆனால் பட்டாம்பூச்சி இருக்கும் இடம் மட்டும் தெரியவில்லையே என்று ஒருசிலர் நினைப்பது புரிகின்றது.. படத்தை ஒருமுறை உற்று பாருங்கள்.. படத்தில் அழகு அழகாக வண்ண வண்ண நிறங்களில் கிளிகள் உள்ளன.

மரத்தின் கிளையில் கூட்டமாக அமர்ந்திருக்கும் இந்த வண்ண வண்ண கிளிகளுக்கு இடையிடையே மரத்தின் இலைகள் தெரிகின்றன. கொஞ்சம் பின்னாடி பார்த்தால் பூக்கள் தெரிகின்றன. மேலே வானம் தெரிகின்றது. ஆனால் நீங்கள் கேட்ட பட்டாம்பூச்சியை மட்டும் காணவில்லையே என்று நினைப்பது புரிகின்றது. இது தான் டாஸ்க்.. எனவே பட்டாம்பூச்சி இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க உங்களுக்காக ஒரு டிப்ஸ் தருகின்றோம். படத்தின் இடதுபுறம் மட்டும் பாருங்கள்.. அதுவும் கிளிகளுக்கு இடையில் மட்டும் பாருங்கள்.


இப்போது 100க்கு 90 சதவிகிதம் பேர் சரியாக பட்டாம்பூச்சி இருக்கும் இடத்தை கண்டுபிடித்து இருப்பீர்கள் என்று நம்புகிறோம்.. ’அட போங்கப்பா.. இங்கே பட்டாம்பூச்சியே இல்லை’ என்று சிலர் நினைப்பது புரிகின்றது. உங்களுக்காகவே இங்கே கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் பட்டாம்பூச்சி இருக்கும் இடத்தை வட்டமிட்டு காட்டியுள்ளோம். பார்த்து சந்தேகத்தை தீர்த்துக் கொள்ளலாம். அட ஆமா! என நீங்கள் நினைப்பது புரிகின்றது..

optical illusion offbeat trend
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+