நெட்டிசன்களை திணற வைத்த ஒரு போட்டோ.. இந்த புகைப்படத்தில் உள்ள வைர மோதிரத்தை கண்டுபிடிங்க.. சேலஞ்ச்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆப்டிக்கல் இல்யூஷன் படங்கள் இப்போது உலகம் முழுக்க டிரெண்டில் இருக்கிறது. பல நாடுகளிலும் ஆப்டிக்கல் இல்யூஷன் படங்களில் ஒளிந்து இருக்கும் உருவங்களை கண்டுபிடிக்கும் போட்டிகள் நடக்க தொடங்கி உள்ளன.

ஆப்டிக்கல் இல்யூஷன் என்றால் ஒன்றுமல்ல.. ஒரே போட்டோவில் பல உருவங்கள் மறைந்து இருந்தால் அதை ஆப்டிக்கல் இல்யூஷன் என்பார்கள். உதாரணமாக சின்ன வயதில் நாம் மம்மி டாடி பாக்கு சாப்பிட்டு இருப்போம்.

அதை ஒரு பக்கம் பார்த்தால் பெண் போல உருவம் இருக்கும். இன்னொரு பக்கம் பார்த்தால் ஆண் போன்ற உருவம் இருக்கும். இதுவும் கூட ஆப்டிக்கல் இல்யூஷன் புகைப்படம்தான்!

ஆப்டிக்கல் இல்யூஷன்

ஆப்டிக்கல் இல்யூஷன்

அதேபோல் இந்த செய்தியிலும் ஒரு ஆப்டிக்கல் இல்யூஷன் புகைப்படம் உள்ளது. ரீடர் டைஜஸ்ட் நிறுவனத்தில் வில்லியம் மே என்பவர் உருவாக்கிய புகைப்படம் ஆகும் இது. இது ஒரு தோட்டத்தின் புகைப்படம். இதில் முழுக்க முழுக்க கேரட் விளைவிக்கப்பட்டு உள்ளது. பல இடங்களில் கேரட் செடிகள் நடப்பட்டுள்ளன.

கேரட் செடிகள்

கேரட் செடிகள்

கேரட் செடிகள் என்றாலே அங்கு முயலும் வந்துவிடும். அதேபோல் இங்கு சில முயல்களின் கூட்டமும் உள்ளன. இதேபோல் கேரட்டை ஏற்றிச்செல்ல சின்ன வண்டியும் உள்ளது. இந்த தோட்டத்தில்தான் ஒரு வைர மோதிரம் ஒளிந்து இருக்கிறது. முடிந்தால் அந்த மோதிரத்தை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

க்ளூ

க்ளூ

பலருக்கும் கண்டிப்பாக பார்த்தவுடன் மோதிரம் தெரிந்துவிடாது. ஏனென்றால் அந்த மோதிரம் மிகவும் ரகசியமான இடத்தில் ஒளிந்து இருக்கிறது. நன்றாக எல்லா இடங்களிலும் தேடி பாருங்கள். வளையமாக இருக்கும். வண்டி டயர் வளையமாக இருப்பதால் அதை மோதிரம் என்று நினைத்து குழப்பிக்கொள்ள வேண்டாம். சரி ஒரு க்ளூ கொடுக்கிறோம்., அந்த மோதிரம் ஒரு கேரட் மீது உள்ளது.

கேரட்

கேரட்

ஆம் ஒரு கேரட் மீது மோதிரம் வைக்கப்பட்டுள்ளது. இப்போது கண்டுபிடிக்க முடிகிறதா? இப்போதும் முடியவில்லையா? உங்களுக்கு மட்டுமில்லை பல நெட்டிசன்களுக்கும் இந்த படம் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. சரி இந்த போட்டோவில் உள்ள வட்டமிட்ட பகுதியை பாருங்கள். அதில் கேரட் மீது வட்டம் போல இருக்கிறதா? ஆம் அங்குதான் வைரம் ஒளிந்து இருக்கிறது. நன்றாக உற்று பாருங்கள் இப்போது தெரியும். நீங்கள் ஒருவேளை வைரத்தை கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால்.. கங்கிராட்ஸ்! அதுக்குன்னு வைர மோதிரத்தை எல்லாம் கேட்காதீங்க பாஸ்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+