மூளையை கசக்கி பிழியும் டெஸ்ட்.. "டம்ளரின் உயரம் என்ன?.." 10 செகண்டில் கண்டுபிடிச்சா நீங்க ஜீனியஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இங்கே கொடுக்கபட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் புதிர் படத்தில் மூன்று அடுக்குகளாக டம்ளர்கள் வைக்கப்பட்டுள்ளன. 5 டம்ளர்களை அடுக்கி வைத்ததில் 34 செ.மீட்டரும், இரண்டு டம்ளர்களை அடுக்கி வைத்ததில் 19 செ.மீட்டரும் உயரம் உள்ளது. எனில் ஒரு டம்ளரின் உயரம் என்ன? என்பதே கேள்வி.. 10 செகண்டில் கண்டுபிடித்தால் நீங்கள் கணக்கில் புலி தான்.

ஆப்டிகல் இல்யூஷன் படம் என்பது ஒரு மாயை புகைப்படமாகும். இருப்பதை இல்லாதது போன்றும், இல்லாததை இருப்பது போன்றதுமான தோற்றத்தை காண்பிக்கும். நாம் முதலில் பார்த்த உடன் ஒரு வித தோற்றமும் சற்று ஆழ்ந்து பார்த்தால் வேறுவித தோற்றத்தையும் காண்பிக்கும் கண்கட்டி வித்தை படங்களே ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஆகும்.

Can you find the height of glass in the optical illusion picture within 10 seconds

ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் பலவகை உண்டு. புதிர், பஸ்சுல், அறிவுத்திறனை சோதிக்கும் படங்கள், பொது அறிவு என பலவகைகள் உண்டு. அந்த வகையில் இன்று ஒரு பொது அறிவு ஆப்டிகல் புகைப்படம் இணையத்தில் பரவுகிறது. இந்த புகைப்படமானது போட்டி தேர்வுகளில் கேட்கப்படும் ஒரு கேள்வியை போலவே உள்ளது. கொடுக்கப்பட்டுள்ள படத்தில் எதை கண்டுபிடிக்க வேண்டும் என்றால், ஒரு கிளாசின் உயரம் என்ன? என்பதை தான்.

படத்தில் ஒவ்வொரு அடுக்குகளாக 3 அடுக்குகளில் டம்ளர்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளனர். முதல் அடுக்குகளில் 5 டம்ளர்கள் வைக்கப்பட்டுள்ளன. இதில் நாம் பார்க்கும் போது முதல் டம்ளர் நமது கண்ணுக்கு முழுவதுமாக தெரிகிறது. மீதியுள்ள 4 டம்ளர்கள் நம் கண்களுக்கு பாதியாகவே தெரிகின்றன. இதன் மொத்தம் உயரம் 34 செமீ என கொடுக்கப்பட்டுள்ளது.

இதேபோல் இரண்டாவது அடுக்கில் பார்த்தோமானால், இரண்டு டம்ளர்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு டம்ளர் முழுவதுமாக நம் கண்ணுக்கு தெரிகிறது. இரண்டாவது டம்ளரின் பாதி முதல் டம்ளருக்குள் மறைந்து இருக்கிறது. இந்த இரண்டு டம்ளர்களின் உயரமானது 19 செ.மீ என கொடுக்கப்பட்டுள்ளது. 3 வது அடுக்கில் ஒரே ஒரு டம்ளர் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது டம்ளரின் உயரம் என்ன? என்று கேட்கப்பட்டுள்ளது.

இதற்கான விடையை கண்டுபிடிப்பதே இன்றைய சவால்.. உங்களுக்கான் டைம் ஸ்டார்ட் நவ்.. 1. 2. 3.. . . 10.. ஒகே டைம் ஓவர். கொடுக்கப்பட்டுள்ள படத்தில் உள்ள முழு டம்ளரின் உயரம் என்ன என்பதை கண்டுபிடித்தவர்களுக்கு பாராட்டுக்கள். 10 செகண்டில் கண்டுபிடித்து இருந்தால் உண்மையிலேயே ஜீனியஸ் தான். அதாவது கணக்கில் தெரிந்த பார்முலாவை வைத்து இதற்கான விடையை எளிதில் கண்டுபிடிக்கலாம்.

இல்லை.. எனக்கு கணக்கே வராது என்று சொல்பவர்களுக்கு இங்கே விடையை எப்படி கண்டுபிடிப்பது என்று விளக்கப்பட்டுள்ளது பார்த்து தெரிந்துகொள்ளலாம். கணக்கு பார்முலாவின் படி, டம்ளரின் உயரத்தை X என்றும், பாதியாக தெரிந்துள்ள டம்ளரின் உயரத்தை Y என்று வைத்துக்கொண்டு சமன்பாடு படி தீர்த்துவிடலாம்.

அதாவது, முதல் வரிசையில் கொடுக்கப்பட்டதை X+4Y=34 என்றும், இரண்டாவது கொடுக்கப்பட்டுள்ளதை X+Y=19 என்று எடுத்துக்கொண்டு இரு சமன்பாட்டையும் தீர்த்தால் நமக்கு எக்ஸ் மற்றும் ஒய் இன் மதிப்பு கிடைத்துவிடும். இதை வைத்து டம்ளரின் உயரத்தை நாம் கண்டுபிடித்துவிடலாம். அதாவது எக்ஸின் மதிப்பு 14 என்றும், ஒய் இன் மதிப்பு 5 என்றும் கிடைக்கும்.

அதாவது ஒரு முழு டம்ளரின் உயரம் என்பது 14 செ.மீ என்றும், பகுதியாக தெரியும் டம்ளரின் உயரம் 5 செ.மீ என்றும் கிடைக்கும். இதுவே சரியான விடை. இதை கண்டுபிடித்தீர்கள் என்றால் நீங்கள் ஜீனியஸ் தான். கணக்கில் புலி என்பவர்களுக்கு எல்லாம் இது ஒரு மேட்டரே கிடையாது. வெறும் 5 செகண்டில் இதனை கண்டுபிடித்துவிடுவார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+