உங்க கண்பார்வைக்கு சவால்.. திராட்சை பழங்களுக்கு இடையே மறைந்து இருக்கும் ”பூனை” எங்கே? கண்டுபிடிங்க
சென்னை: இன்று நாம் பார்க்க உள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் திராட்சை பழத்திற்கு மத்தியில் ஒரு பூனைக்குட்டி ஒளிந்திருக்கிறது. இந்த பூனைக்குட்டி எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க வேண்டும் என்பதே உங்களுக்கான இன்றைய சவால் ஆகும். அதுவும் 6 செகண்டில் கண்டுபிடிக்க வேண்டும் என்று உங்கள் கண்பார்வைக்கு சவால் விடப்படுகிறது. என்ன சவாலுக்கு தயாரா?..
ஆப்டிகல் இல்யூஷன் எனப்படும் ஒளியியல் மாயை படங்கள் நமது புத்திக் கூர்மையை சோதித்து பார்ப்பவை. ஒருவரின் சிந்தனைத்திறன், ஐகியூ லெவல் உள்ளிட்டவற்றை கூட புதிர் படங்களுக்கு விடையை கண்டுபிடிப்பதை வைத்து கணிக்க முடியும் என்று சில ஆய்வுகள் சொல்கிறதாம். ஆப்டிகல் இல்யூஷன் படங்களை பொறுத்தவரை கானல் நீருடன் ஒப்பிடலாம்.

ஆப்டிகல் இல்யூஷன் படம்
கானல் நீர் எப்படி தொலைவில் இருந்து பார்த்தால் தண்ணீர் ஓடுவது போல தோன்றி.. நெருங்கி சென்றால் எதுவுமே இல்லாமல் இருக்குமோ அதேபோல இல்யூஷன் படங்களை மேலோட்டமாக பார்த்தால் ஒரு மாதிரியாகவும் ஆழ்ந்து பார்த்தால் வேறு விதமாகவும் இருக்கும். அதேபோல, கணித புதிர்கள் போன்ற புதிர் படங்களும் சுவாரசியமானது. சிறு வயதில் பள்ளி காலத்தில் படித்த கணித புதிர்கள், பார்முலாக்களை நினைவுபடுத்த வைக்கும் புதிர் படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
ரீல்ஸ் மட்டுமே பார்த்து சலிப்படைந்து விட்டது என நினைக்கும் நெட்டிசன்களுக்கு பயனுள்ள அதேவேளையில் மூளையை சுறு சுறுப்பாக்கும் இத்தகைய புதிர் படங்களை விரும்பி பகிர்கிறார்கள். புதிர்களுக்கு விடையை கண்டுபிடித்துவிட்டு, அதை தங்கள் நட்பு வட்டத்தில் உள்ளவர்களுக்கும் பகிர்ந்து அவர்களின் அறிவுத்திறனை சோதித்து பார்க்கிறார்கள்.
கருப்பு திராட்சைக்குள் பூனை
இதனால், இத்தகைய இல்யூஷன் புதிர் படங்கள் தற்போது இணையதளங்களில் நல்ல வரவேற்பை பெறுகிறது. இன்று இங்கே நாம் பார்க்க இருக்கும் இல்யுஷன் படம் கொஞ்சம் சவாலானது. கருப்பு திராட்சைகள் நிறைந்துள்ள இந்த படத்தில் ஒரு பூனைக்குட்டி ஒளிந்துள்ளது. அதுவும் கருப்பு பூனைக்குட்டி.. அது எங்கே மறைந்து இருக்கிறது என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் உங்களுக்கான சவால்..
அதிலும் 6 செகண்டில் கண்டுபிடிக்க வேண்டும். உங்களின் கண்பார்வையை சோதித்து பார்த்துவிடலாம் வங்க.. உங்களுக்கான நேரம் தொடங்கியது. 1.. 2.. 3.. ... 6. ஓக்கே டைம் ஓவர். பூனை எங்கே இருக்கிறது என்று கண்டுபிடித்து விட்டீர்களா. குறிப்பிட்ட 6 செகண்டுக்குள் கண்டுபிடித்து இருந்தால் உங்க கண் பார்வை செம ஷார்ப்பாகவே இருக்கிறது. உங்கள் கவனிப்புத் திறனும் அபாரமாக இருக்கிறது. உங்களுக்கு பாராட்டுக்கள்.
உங்களுக்காக ஒரு "டிப்ஸ்"
ஆனால் பூனை எங்கு தேடியும் இல்லை என்று நினைப்பவர்கள் மீண்டும் ஒருமுறை படத்தை உற்று பாருங்கள். பூனை இல்லை என்று நினைக்க வேண்டாம். உங்கள் கண்களுக்கு தெரியாதவாறு மறைந்து இருக்கிறது அவ்வளவு தான். எனவே உங்களை ஏமாற்றும் இந்த படத்தை ஏமாற்றி நீங்கள் பூனையை கண்டுபிடிக்க வேண்டும் என்பதே சவால். எனவே கூடுதலாக இன்னும் ஒரு 6 செகண்ட் டைம் எடுத்துக்கொண்டு மீண்டும் தேடிப்பாருங்கள்.
இப்போது நிறைய பேர் கண்டுபிடித்து இருக்க வாய்ப்பு உள்ளது. கண்டுபிடித்தவர்களுக்கு பாராட்டுக்கள். ஆனால் இன்னும் ஒரு சிலருக்கு பூனை இருக்கும் இடம் தெரியவில்லை என்று புரிகிறது. உங்களுக்காக ஒரு டிப்ஸ் தருகிறோம். இந்த டிப்ஸை சொன்னாலே பலரும் ஈசியாக விடையை கண்டுபிடித்து விடுவார்கள். அது என்ன என்றால், கொஞ்சம் படத்தை ஜூம் செய்து பார்த்தால் போதும். எளிதில் நீங்க கண்டுபிடித்து விடலாம்.
பூனை எங்கே இருக்கிறது?
அட ஆமா.. இதை பார்க்காமல் விட்டுவிட்டோமே என்று நீங்கள் நினைப்பது புரிகின்றது. படத்தில் உள்ள ஒவ்வொரு திராட்சை கனியையும் சேர்த்து மொத்தமாக பூனை உருவத்தில் இருக்கும் என்று பார்க்காமல், ஒரே ஒரு திராட்ச்சையில் தான் பூனை இருக்கிறது என்று தேடினாலும் ஈசியாக கண்டுபிடித்துவிடலாம். 100 க்கு 99.9 சதவீதம் பேர் சரியாக விடையை கண்டுபிடித்து இருப்பீர்கள் என்று நம்புகிறோம்.

எனினும் விடையை சரிபார்த்துக்கொள்ள இங்கே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் விடை வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளதை பார்த்து தெரிந்துகொள்ளலாம். குறிப்பிட்ட 6 செகண்டுக்குள் நாங்கள் கண்டுபிடித்துவிட்டோம் என்று சொல்பவர்கள் கமெண்ட் செய்யுங்கள்..












Click it and Unblock the Notifications