Optical Illusion: படத்தில் ”கிளி” எங்கே இருக்கு? 7 செகண்ட் தான் டைம்.. சரியா கண்டுபிடிச்சா நீங்க கில்லி!
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் (Optical Illusion) படத்தில் கிளி ஒன்று மறைந்துள்ளது. பச்சை பசேல் என ஒரு பெரிய மரம் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் தான் ஒரு கிளி இருக்கிறது. இந்த கிளி எங்கே இருக்கிறது என 7 செகண்டுக்குள் கண்டுபிடிக்க வேண்டும். இதுவே உங்களுக்கான சவால். குறிப்பிட்ட செகண்டுக்குள் கண்டுபிடித்தால் நீங்க கிரேட் தான்.. என்ன சவாலுக்கு ரெடியா?..
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள், பார்க்கும் நம் கண்களை குழப்பி மூளைக்கு வேலை கொடுக்கும். ஒருவரது புத்திக்கூர்மை எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை சோதிக்கும் வகையிலும் இந்த படங்கள் இருக்கின்றன. இதேபோன்று தொடர்ச்சியாக இந்த புகைப்படங்களை பார்த்து விடையளிப்பவர்களது ஐகியூ திறன் அதிகரிப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆப்டிகல் இல்யூஷன் படம்
ஒருவரது ஐகியூ திறனை சோதனையிடவும் இது போன்ற படங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் எளிதில் இல்யூஷன் படங்களுக்கு விடையளிக்க முடியாது. இல்யூஷன் படங்களுக்கு விடையளிக்க கொஞ்சம் மூளையை கசக்க வேண்டியிருக்கும். சில புகைப்படங்கள் மிகவும் சவால் மிக்கதாக இருக்கும். சில புகைப்படங்களில் சின்ன சின்ன டிரிக்ஸ்கள் தான் பயன்படுத்தப்பட்டு இருக்கும்.
இன்று நாம் பார்க்க இருக்க ஆப்டிகல் இல்யூஷன் புகைப்படமானது சற்று வித்தியாசமானது. உங்கள் கண்பார்வையை சோதிக்கும் வகையில் இந்த படமானது கொடுக்கப்பட்டுள்ளது. படத்தினை நாம் பார்க்கும் போது, ஒரு பெரிய மரம் உள்ளது. அந்த மரத்தின் படர்ந்த கிளைகள் காண்பிக்கப்பட்டுள்ளது. பச்சை பசேல் என இருக்கும் இந்த படத்தில் பச்சைக் கிளி ஒன்று இருக்கிறதாம்..
கிளி எங்கே இருக்கிறது?
ஆம் இந்த கிளி படத்தில் எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க வேண்டும். இதுவே உங்களுக்கான இன்றைய சவால் ஆகும். அதுவும் 7 செகண்டில் உங்களால் கண்டுபிடிக்க முடிகின்றதா என்று சோதித்து பாருங்கள். உங்களுக்கான நேரம் தொடங்கியது. 1.. 2.. 3.. ..7. ஓக்கே டைம் ஓவர். படத்தில் கிளி இருக்கும் இடத்தினை கண்டுபிடிக்க முடிந்ததா.. கண்டுபிடித்து இருந்தீர்கள் என்றால் உங்கள் பார்வை கழுகுப்பார்வை தான்..
ஆனால் 7 செகண்ட் டைம் முடிந்த பிறகும் கிளி எங்கே இருக்கிறது என தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு ஒரு சின்ன டிப்ஸ் கொடுக்கப்படுகிறது. படத்தின் வலப்புறம் மேல் பகுதியில் தான் கிளி இருக்கிறது. படம் முழுக்க சுத்தி சுத்தி தேடாமல் குறிப்பிட்ட இப்பகுதியில் மட்டும் தேடினீர்கள் என்றால் எளிதில் விடையை கண்டுபிடித்து விடலாம். இப்போது பலரும் கண்டுபிடித்து இருப்பீர்கள் என்று நம்புகிறோம்.
விடை இது தான்!

ஆனால் இன்னும் கிளி எங்கே இருக்கிறது என தெரியாமல் தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு நாங்களே விடையை சொல்லிவிடுகிறோம். இங்கே மேலே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் கிளி இருக்கும் இடம் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது. பார்த்து தெரிந்துகொள்ளலாம். 7 செகண்டுக்குள் கிளி இருக்கும் இடத்தை கண்டுபிடித்தவர்கள் கமெண்ட் செய்யுங்கள்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications