உங்களுக்கு 15 செகண்ட் டைம்.. இந்த போட்டோவில் மறைந்திருக்கும் போனை கண்டுபிடிங்க பார்ப்போம்.. சவால்!
சென்னை: டேபிள் ஒன்றின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி இருக்கிறது. இந்த புகைப்படத்தில் இருக்கும் போனை கண்டுபிடிக்க சொல்லி பலர் போட்டோவை பகிர்ந்து வருகின்றனர்.
ஒரு புகைப்படம் பார்த்ததும் உங்களை குழப்புகிறது என்றால் அதை ஆப்டிக்கல் இல்யூஷன் புகைப்படம் என்பார்கள். அதாவது கண்களை குழப்பும் புகைப்படங்கள்.
தமிழர்களுக்கு இது போன்ற ஆப்டிக்கல் இல்யூஷன் புகைப்படங்கள் ஒன்றும் புதிது அல்ல. நந்தி - யானை தலை ஒன்றாக இருக்கும் சிலைகளை நம் முன்னோர்கள் அப்போதே வரைந்து வைத்துவிட்டனர்.

போட்டோ
இப்போது இது போன்ற ஆப்டிக்கல் இல்யூஷன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி இருக்கிறது. ஒரு புகைப்படத்தை வெளியிட்டு.. இதில் ஒரு பொருள் மறைந்து இருக்கிறது கண்டுபிடியுங்கள் என்று கேட்கும் போட்டிகள் பல வைரலாகி வருகின்றன. ஒரே புகைப்படத்தில் இருக்கும் ஏழு உருவங்களை கண்டுபிடியுங்கள், 9 உருவங்களை கண்டுபிடியுங்கள் என்பது போன்ற போட்டிகள் அதிகம் விளையாடப்பட்டு வருகின்றன.

ஆப்டிக்கல் இல்யூஷன்
இந்த நிலையில்தான் தற்போது இணையத்தில் டேபிள் ஒன்றின் புகைப்படம் வைரலாகி வருகிறது. வெள்ளை நிறத்தில் இருக்கும் டேபிள் புகைப்படம் ஆகும் இது. அந்த டேபிள் நீல நிற பூ போட்ட மேட்டில் வைக்கப்பட்டு இருக்கிறது. சரி இதில் என்ன ஆப்டிக்கல் இல்யூஷன் இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம். இந்த புகைப்படத்தில் ஒரு இடத்தில் போன் ஒன்று உள்ளது முடிந்தால் கண்டுபிடியுங்கள்.

க்ளூ இதோ
உங்களுக்கு சரியாக 15 செகண்ட் டைம். அதற்குள் நீங்கள் அந்த புகைப்படத்தை கண்டுபிடித்தால்.. கில்லாடிதான்! சரி முடியவில்லையா.. உங்களுக்கு ஒரு க்ளூ கொடுக்கிறோம் இன்னும் 15 நொடிகள் எடுத்துக்கொள்ளுங்கள். இந்த போன் டேபிளில் இல்லை. கீழே மேட்டில் இருக்கிறது. இப்போது போய் இமேஜை பாருங்கள். சரி இப்பவும் கண்டுபிடிக்க முடியவில்லையா?

விடை இதுதான்
கவலை வேண்டாம் இரண்டாவது க்ளூ இதோ.. அந்த போன் நீல நிறத்தில் இருக்கும் கோடு போன்ற இடத்தில் உள்ளது. என்ன பாஸ் கண்டுபிடிச்சிட்டீங்களா? அட போங்க.. கீழ இருக்கும் இமேஜை பாருங்கள். போன் இருக்கும் இடம் குறி போட்டு காட்டப்பட்டுள்ளது. ஆம் ஐபோன் ஒன்று நீல நிற கவர் போட்டு தலைகீழாக வைக்கப்பட்டு உள்ளது. போனை உடனே கண்டுபிடித்தவர்களுக்கு வாழ்த்துகள்.. கடைசி வரை கண்டுபிடிக்காதவர்களுக்கு பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்!
-
தங்கம் விளையும் 3 இந்திய நதிகள்.. மணலை சலித்து தங்கத்தை அள்ளும் பொதுமக்கள்! சர்ப்ரைஸ் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications