ஒரே குழப்பமா இருக்கா?.. இதில் விடுபட்ட நம்பரை சொல்லுங்க.. ஈசி டிரிக்ஸ் தான்.. 10 செகண்ட் டைம்
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள புதிர் படத்தில் ஒரு எண் மட்டும் விடுபட்டுள்ளது. அந்த எண் எது என்பதை 10 செகண்ட் டைமுக்குள் கண்டுபிடித்தால் நீங்க ஜீனியஸ் தான். கண்டுபிடிக்க முடிகிறதா என்று சோதித்து பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்களை போலவே Puzzle - எனப்படும் புதிர்களும் தற்போது இணையத்தில் நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் பிரபலமாக உள்ளது. ஓய்வு நேரத்தில் இணையத்தில் உலவிக் கொண்டு இருக்கும் நெட்டிசன்களுக்கு இந்த புதிர் படங்கள் நல்ல தீனியாய் உள்ளன. பயனுள்ள வகையில் பொழுதை போக்கும் விதமாக புதிர் கணக்குகள் உள்ளன.

சின்ன வயதில் பள்ளியில் படித்த கணக்கு வகுப்புகளை நியாபகப்படுத்தும் விதமாக இந்த புதிர்கள் இருக்கின்றன. ரொம்பவே ஈசியானதாக இருந்தாலும் சின்ன சின்ன டிரிக்ஸ்கள் இருப்பதால் இந்த கணக்கு மூளையை குழப்பிவிடும். படத்திற்கான விடை எப்படி வந்தது என கண்டுபிடிக்கும் டிரிக்ஸ் தெரிந்தால் ஒரு சில வினாடிகளில் விடையை கண்டுபிடித்துவிடலாம்...
ஆனால், அந்த டிரிக்ஸ் தெரியாவிட்டால் கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல தெரியும்.. அரசு போட்டி தேர்வுகளில் இதுபோன்ற விடுபட்ட எண்ணைக் கண்டுபிடிக்க கூடிய இந்த புதிர் படங்கள் இடம்பெறுகின்றன. அந்த வகையில் இன்று ஒரு புதிர் படம் இணையத்தில் வட்டமடித்து வருகிறது. இந்த படத்தில் விடுபட்ட எண்ணை 10 செகண்டில் கண்டுபிடிப்பதே இன்றைய சவால் ஆகும்.
என்ன சவாலுக்கு ரெடியா?.. உங்களுக்கான டைம் ஸ்டார்ட்ஸ் நவ்.. 1. 2. 3. ... 10. குறிப்பிட்ட 10 செகண்டில் விடுபட்ட எண்ணை கண்டுபிடித்து இருந்தால் நீங்க கணக்கில் புலி தான். உங்கள் அறிவுத்திறனும் மிக ஷார்ப்பாக உள்ளது. ஆனால் 10 செகண்ட் டைம் எடுத்தும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று நினைப்பவர்கள் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக முதல் இரண்டு ரோவில் உள்ள நம்பர்களுக்கு பொதுவாக ஒரு டிரிக்ஸ் இருக்கும்.
அது என்ன என்பதை கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால் மூன்றாவது ரோவிலும் அதே டிரிக்ஸை போட்டால் விடை வந்துவிடும். இப்போது கண்டுபிடித்து இருந்தீர்கள் என்றால் கிரேட். ஆனால் இப்போது விடுபட்ட எண்ணை கண்டுபிடிக்க முடியவில்லை என்பவர்களுக்கு இங்கே விடை எப்படி வந்தது என்பதை நாங்களே சொல்லிவிடுகிறோம்.
முதல் வரிசையில் 5, 21, 2 என கொடுக்கப்பட்டுள்ளது. முதல் எண் 5 ன் வர்க்கம் 25. இதேபோல் மூன்றாம் எண் 2 ன் வர்க்கம் 4. இப்போது முதல் எண்ணில் இருந்து மூன்றாம் எண்ணை கழித்தால் (25 இல் இருந்து 4 கழித்தால் 21 என்று நமக்கு கிடைக்கிறது. அதாவது நடுவில் இருக்கும் எண் கிடைக்கிறது.
இதேபோன்று இரண்டாவது வரிசையில் 6, 20, 4 என்ற எண்கள் உள்ளன. இதில், முதல் எண் 6 ன் வர்க்கம் 36. 3வது எண் 4 ன் வர்க்கம் 16. இப்போது முதல் எண்ணில் இருந்து 3 ஆம் எண்ணை கழித்தால், (36-16=20) நடுவில் உள்ள எண் 20 வந்துவிடுகிறது. இதே பாணியை 3 வது வரிசையிலும் பயன்படுத்தி பாருங்கள் எளிதில் விடை கிடைத்து விடும். இப்போது பெரும்பாலானோர் கண்டுபிடித்து இருப்பீர்கள்.
அப்படியும் லைட்டா குழப்புதே என்று நினைப்பவர்களுக்கு விடையையும் சொல்லிவிடுகிறோம். விடுபட்ட எண் மூன்று (3) என்பதே சரியான விடை. அதாவது 3 வரிசையில் முதல் எண் 8 ஐ வர்க்கம் செய்தால் 64 வரும். மூன்றாம் எண் நமக்கு தெரியாது என்பதால் X என்று எடுத்துக்கொள்வோம். இப்போது 64 - X^2 = 55 என்று நமக்கு கிடைக்கும். இப்போது, X^2 = 64 -55 என்று எழுதலாம். இதனை மேலும் சுருக்கினால் X^2= 9 என்று கிடைக்கும். எனில் X = 3 என கிடைக்கும்.













Click it and Unblock the Notifications