நீங்க அதி புத்திசாலியா? படத்தில் ஒரு மிஸ்டேக் இருக்கு.. 7 செகண்டில் கண்டுபிடிங்க பார்க்கலாம்
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் ஒரு தவறு இருக்கிறது. அது என்ன தவறு என்பதை நீங்கள் 7 செகண்டில் கண்டுபிடித்தீர்கள் என்றால் அதிபுத்திசாலி தான். உங்களால் அந்த தவறை கண்டுபிடிக்க முடிகிறதா என்று முயற்சித்து பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் எனப்படும் ஒளியியல் மாயை படங்கள் இணையத்தில் அதிகம் பிரபலம் ஆகிவிட்டது. கண்கட்டி வித்தை என்று சொல்லப்படும் இந்த இல்யூஷன் படங்களில் விடை நேரடியாக இருக்காது. உதாரணமாக ஒரு படத்தை மேலோட்டமாக பார்த்தால் ஒரு மாதிரியாகவும் ஆழ்ந்து கவனித்தால் வேறு மாதிரியாகவும் இருக்கும்.

சற்று சவால் மிக்கவையாக இருப்பதால் இந்த படங்கள் நெட்டிசன்களின் ஓய்வு நேரத்தில் நல்ல தீனியாக உள்ளது. இதனால், இந்த படங்களுக்கான விடையை கண்டுபிடிக்கும் நெட்டிசன்கள் அதை தங்கள் நட்பு வட்டாரத்தில் உள்ளவர்களுக்கும் பகிர்ந்து அவர்களையும் சோதித்து பார்க்கிறார்கள். அந்த வகையில் இன்று ஒரு ஆப்டிகல் இல்யூசன் படம் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் பார்க் ஒன்றில் பெண் ஒருவர் அமர்ந்து படித்து கொண்டு இருக்கிறார். ஜோடி ஒன்று குடையை பிடித்தபடி தங்களுக்குள் பேசிக்கொண்டு வருகிறார்கள். மற்றொரு பெண் நாயை அழைத்துக் கொண்டு வாக்கிங் சென்றுகொண்டு இருக்கிறார். இந்த படத்தில் ஒரு தவறு உள்ளது. அது என்ன என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்பதே உங்களுக்கான இன்றைய டாஸ்க்..
அதுவும் வெறும் 7 செகண்டில் கண்டுபிடிக்க வேண்டும்.. என்ன சவாலுக்கு ரெடியா.. படத்தை நன்கு உற்று பாருங்கள்.. உங்களுக்கான நேரம் தொடங்கியது.. 1,2,3,....7 ஓகே டைம் முடிந்தது. படத்தில் இருக்கும் தவறு என்ன கண்டுபிடித்து விட்டீர்களா? விடையை சரியாக கண்டுபிடித்து இருந்தீர்கள் என்றால் உங்கள் ஐகியூ லெவல் வேற லெவல் உள்ளது என்பதை ஒப்புக்கொண்டே ஆக வேண்டும்.
ஏனெனில் 90 சதவிகிதம் பேர் இதற்கு தவறான விடையையே கண்டுபிடித்து இருக்கிறார்கள். எனவே குறிப்பிட்ட 7 செக்கண்டில் விடையை கண்டுபிடித்து இருந்தீர்கள் என்றால் நீங்கள் கிரேட்தான் போங்க.. சரி அதெல்லாம் இருக்கட்டும். விடை என்ன என்று நினைப்பது புரிகிறது. படத்தில் உள்ள தவறு என்னவென்றால் மர சேர் ஒன்றில் அமர்ந்து எதையோ மும்முரமாக படித்துக் கொண்டு இருக்கிறாரே அந்த பெண் வைத்திருக்கும் புத்தகத்தை நன்றாக பாருங்கள்..
படத்தில் உள்ள மிஸ்டேக் அதில் தான் உள்ளது. அட.. இதை கவனிக்காமல் விட்டுட்டோமே என நீங்கள் நினைப்பது புரிகிறது. இப்பவும் விடை என்ன கண்டுபிடிக்காதவர்களுக்கு விடையை நாங்களே சொல்லிவிடுகிறோம். படத்தில் புத்தகதை அந்த பெண் தலைகீழாக வைத்து படித்துக் கொண்டு இருக்கிறார். அதுவே படத்தில் உள்ள மிஸ்டேக் ஆகும்.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications