உங்க கண்களுக்கு ஒரு டெஸ்ட்! படத்தில் "நத்தை" எங்கே இருக்கு? 8 செகண்டில் கண்டுபிடிச்சா வேற லெவல் பாஸ்
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் நத்தை ஒன்று மறைந்துள்ளது. அந்த நத்தை எங்கே இருக்கிறது என்பதை 8 செகண்டிற்குள் கண்டுபிடிக்க வேண்டும் என்பதே சவால் ஆகும். உங்கள் கண்கள் செம ஷார்ப்பாக இருக்கிறதா? என்பதை இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் நத்தையை கண்டுபிடித்து சோதித்து பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் எனப்படும் ஒளியியல் மாயை படங்கள் பார்க்கும் நம் கண்களை குழப்பி மூளைக்கு வேலை கொடுக்கும். ஓய்வு நேரத்தில் பயனுள்ள வகையில் பொழுதை கழிக்க வேண்டும் என்று விரும்புகிறவர்களுக்கு இந்த ஆப்டிகல் இல்யூஷன் நல்ல தீனியாக அமைந்துள்ளன. ஆப்டிகல் இல்யூஷன் படங்களை பொறுத்தவரை படத்தில் விடை மறைத்து கொடுக்கப்பட்டு இருக்கும்.

நேராக பார்த்தால் நம் கண்களுக்கு புலப்படாது. பார்க்கும் கோணங்களை மாற்றும் போது நமக்கு விடை கண்ணுக்கு தெரியும். ஆப்டிகல் இல்யூஷன் படங்களை பொறுத்தவரை விடைகளை கண்டுபிடிப்பதை விட ஒருவரின் புத்திக் கூர்மை, ஐகியூ திறன் ஆகியவற்றைக் கூட கண்டுபிடித்து விடலாம் என சில ஆய்வுகள் சொல்கின்றன.
ஆனால் பிரக்டிக்ஸ் மேக்ஸ் பெர்பெக்ட் என்ற பழமொழிக்கு இணங்க இந்த படங்களை பார்த்து பழக்கம் உள்ளவர்கள் இதில் மறைந்து இருக்கும் விடையை எளிதில் கண்டுபிடித்து விடுவார்கள். அப்படி இன்று ஒரு ஆப்டிகல் படம் இணையத்தில் வட்டமடித்து வருகிறது. இந்த படத்தில் நத்தை எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிப்பதே சவால் ஆகும். பிளாக் அண்ட் ஒயிட்டில் படம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் பூனை ஒன்று சேரில் அமர்ந்து இருப்பது போலவும், அருகே அலமாரி ஒன்றும் இருக்கிறது. இந்த ரூமில் தான் நத்தை மறைந்துள்ளது. அந்த நத்தை எங்கே இருக்கிறது என்பதை 8 செகண்டிற்குள் கண்டுபிடிக்க வேண்டும். உங்களுக்கான நேரம் தொடங்கியது. 1..2 .. 3.. 4.... 8. ஒகே டைம் ஓவர். 8 செகண்டிற்குள் விடையை கண்டுபிடித்து இருப்பவர்களுக்கு பாராட்டுக்கள். உங்கள் கண்கள் செம ஷார்ப்பாகவே உள்ளது.
ஆனால் 8 செகண்டில் கண்டுபிடிக்க முடியவில்லையே என்று நினைப்பவர்களுக்கு விடை படத்தின் அடிப்பகுதியில் தான் இருக்கிறது என்று ஒரு டிப்ஸ் கொடுக்கப்படுகிறது. எனவே படத்தின் அடிப்பகுதியில் மட்டும் கூடுதல் நேரம் எடுத்து உற்று கவனித்தால் கண்டிப்பாக விடை உங்கள் கண்களுக்கு தெரிந்துவிடும். அப்படியும் கண்டுபிடிக்க முடியாதவர்களுக்கு இங்கே விடை வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது. பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications