டெபிட் கார்டு வைத்திருந்தால் 20 லட்சம் கிடைக்குமா ? வங்கிகளிடம் சொல்லாத முக்கியமான விஷயம்
சென்னை: டெபிட் கார்டு வைத்திருந்தால் 20 லட்சம் வரை விபத்து காப்பீடு கிளைம் பண்ண முடியும். ஆனால் வங்கிகள் ஏன் இதுபற்றி சொல்வது இல்லை என்று பலரும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகிறார்கள். நெட்டிசன்கள் கூற்றுப்படி உண்மையில் டெபிட் கார்டு வைத்திருந்தால் 20 லட்சம் வரை விபத்து காப்பீடு கிளைம் பண்ணி பணம் பெற முடியுமா என்றால்... நிச்சயம் முடியும்.. வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு "இலவச விபத்து காப்பீட்டை" வழங்குகின்றன. ஆனால் இதற்கு சில நிபந்தனைகள் உள்ளன.
டெபிட் கார்டு வைத்திருந்தால் 20 லட்சம் வரை விபத்து காப்பீடு கிளைம் பண்ண முடியும் என்றாலும், நீங்கள் வைத்திருக்கும் டெபிட் கார்டின் வகை மற்றும் உங்கள் வங்கியின் விதிமுறைகளைப் பொறுத்து காப்பீடு தொகை மாறுபடும்.பெரும்பாலான வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு "இலவச விபத்து காப்பீட்டை" வழங்கி வருகின்றன.

இது குறித்து மக்கள் அறிய வேண்டிய முக்கியமான தகவல்கள்:
1. 20 லட்சம் காப்பீடு யாருக்குக் கிடைக்கும்? எல்லா கார்டுகளுக்கும் 20 லட்சம் கிடைக்காது. பொதுவாக சாதாரண கார்டுகளுக்கு (Classic/Standard) ₹1 லட்சம் முதல் ₹2 லட்சம் வரை மட்டுமே இருக்கும்.
SBI Visa Signature / MasterCard Debit Card: இந்த வகை கார்டுகளை வைத்திருப்பவர்களுக்கு வான்வழி விபத்து மரணத்திற்கு ₹20 லட்சம் வரை காப்பீடு வழங்கப்படுகிறது.
HDFC/ICICI/Kotak: இங்கும் 'Platinum' அல்லது 'Signature' வகை கார்டுகளுக்கு ₹10 லட்சம் முதல் ₹15 லட்சம் வரை விபத்து காப்பீடு உண்டு.
2. மிக முக்கியமான நிபந்தனை (90 நாட்கள் விதி)இந்த காப்பீடு செல்லுபடியாக வேண்டும் என்றால், விபத்து நடந்த தேதியிலிருந்து கடந்த 90 நாட்களுக்குள் (சில வங்கிகளில் 30 அல்லது 45 நாட்கள்) நீங்கள் அந்த கார்டைப் பயன்படுத்தி குறைந்தபட்சம் ஒரு முறையாவது ஏதேனும் பணப்பரிமாற்றம் (ATM, POS, அல்லது Online Shopping) செய்திருக்க வேண்டும்.
கிளைம் செய்ய தேவையானவை:
விபத்து நடந்துவிட்டால், 30 முதல் 60 நாட்களுக்குள் வங்கிக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். பின்வரும் ஆவணங்கள் பொதுவாகத் தேவைப்படும்:
முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட கிளைம் படிவம்.
மரணச் சான்றிதழ் .
முதல் தகவல் அறிக்கை .
பிரேதப் பரிசோதனை அறிக்கை .
கடந்த 90 நாட்களில் கார்டைப் பயன்படுத்தியதற்கான ஆதாரம் .
குறிப்பு:
உங்களிடம் இரண்டு, மூன்று வங்கிக் கணக்குகள் இருந்தாலும், ஏதாவது ஒரு கார்டின் மூலமாக மட்டுமே நீங்கள் காப்பீடு கோர முடியும்.
உங்கள் கையில் இப்போது என்ன வகை கார்டு (RuPay, Visa, Platinum, or Signature) இருக்கிறது என்று பார்த்தீர்களா? அதன் மூலம் உங்களுக்கு எவ்வளவு காப்பீடு உண்டு என்பதையும் பார்ப்போம்.
ரூபே கிளாசிக் கார்டு இருந்தால் ₹1 லட்சம் காப்பீடு கிடைக்கும், ரூபே பிளாட்டினம் கார்டு இருந்தால் 2 லட்சம் காப்பீடு கிடைக்கும் (விமான விபத்து என்றால் 25 லட்சம் வரை கிடைக்கும்). விசா பிளாட்டினம் இருந்தால் 2 முதல் 5 லட்சம் (₹20 லட்சம் முதல் ₹50 லட்சம் வரை) கிடைக்கும். விசா சிக்னேச்சர் கார்டு இருந்தால் ₹5 லட்சம் முதல் ₹10 லட்சம் வரை ( ₹50 லட்சம் முதல் ₹1 கோடி வரை ) காப்பீடு தருகின்றன. செய்தியுடன் இணைக்கப்பட்ட வீடியோவில் முழு தகவல்களை பாருங்கள்












Click it and Unblock the Notifications