"10 வருஷம் ஆட்சி பண்ணீங்க.. இதெல்லாம் ஒரு சாதனையா?" பட்டியல் போட்டு பாஜகவை விளாசிய ஆனந்த் சீனிவாசன்!
சென்னை: லோக்சபா தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் ஊடகம் மற்றும் செய்தி தொடர்பு துறைத் தலைவர் ஆனந்த் சீனிவாசன் மத்திய பாஜக அரசை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
நமது நாட்டில் மொத்தம் ஏழு கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. அதில் தமிழ்நாட்டில் முதல் கட்டத்திலேயே அதாவது, ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடக்கிறது.

தேர்தலுக்கு இரண்டு வாரங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது. பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருவதால் தமிழ்நாடு முழுக்க கோடை வெயிலைத் தாண்டி அனல் பறக்கிறது.
ஆனந்த் சீனிவாசன்: தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இங்கே திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி, நாம் தமிழர் என இந்த முறை பல முனை போட்டி ஏற்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் புதுச்சேரி சேர்ந்து மொத்தம் 10 இடங்களில் போட்டியிடுகிறது. இந்தியா கூட்டணி வலுவாக உள்ள மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று என்பதால் இங்கே பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது. பாஜகவைத் தீவிரமாக விமர்சித்து வருகிறார்கள். அப்படிதான் ஆனந்த் சீனிவாசனும் மத்திய பாஜக அரசை விமர்சித்துள்ளார்.
இங்கே தமிழ்நாட்டில் வசிக்கும் முக்கிய பொருளாதார வல்லுநர்களில் ஒருவர் ஆனந்த் சீனிவாசன்.. பொருளாதாரம் சார்ந்து இவர் பல டிப்ஸ்களை வழங்கி வருகிறார். பொருளாதாரம், சேமிப்பு குறித்துக் குழப்பாமல் மிகத் தெளிவாக டிப்ஸ் வழங்கி புகழ் பெற்றவர் இவர், பொருளாதார வல்லுநரான ஆனந்த் சீனிவாசன், பல ஆண்டுகளாகக் காங்கிரஸ் கட்சியிலும் உறுப்பினராக இருந்து வருகிறார்.

அட்டாக்: இவருக்குச் சமீபத்தில் தான் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஊடகம் மற்றும் செய்தி தொடர்பு துறைத் தலைவர் பொறுப்பு கிடைத்தது. அப்போது முதல் ஆனந்த் சீனிவாசன் பாஜகவை நோக்கி மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். இப்போதும் கூட அவர் மத்திய பாஜக அரசை விமர்சிக்கும் வகையில் மிகக் கடுமையான ட்வீட்டை பதிவிட்டுள்ளார்.
புது ஸ்கீம் என்ன: இது குறித்து ஆனந்த் சீனிவாசன் தனது எக்ஸ் பக்கத்தில், "அரசியல் அறியாதவன் கேள்வி.. இந்த பத்து வருஷத்துல ஸ்கீம் பேர்களை மாத்தினதை தவிர என்ன புதுசா ஸ்கீம் கொண்டுவந்தாங்கன்னு யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்க ப்ளீஸ்..." என்று பதிவிட்டுக் கூடவே ஒரு போட்டோ ஒன்றையும் பகிர்ந்துள்ளார். அதில் முந்தை காங்கிரஸ் அரசால் கொண்டு வரப்பட்டு பாஜகவால் பெயர் மாற்றம் செய்யப்பட்ட திட்டங்கள் என்று ஒரு பட்டியல் இருக்கிறது.
அதில் மொத்தம் 32 திட்டங்களின் பெயர்கள் இருக்கிறது. 1975 முதல் கடந்த 2013 வரை பல திட்டங்களின் பெயர்கள் இதில் இருக்கிறது. வருடம் வாரியாக அவை எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது, காங்கிரஸ் ஆட்சியில் அதன் பெயர் என்ன உள்ளிட்ட தகவல்கள் உள்ளது. பாஜக ஆட்சியில் புதிய திட்டங்களைக் கொண்டு வராமல் பழைய திட்டங்கள் பெயர்களை மட்டுமே மாற்றி இருக்கிறார்கள் என்பதே அவரது விமர்சனமாகும். அவரது இந்த ட்வீட் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
ஒன் இந்தியா தளத்தில் இது தொடர்பாக வெளியாகியுள்ள பிற செய்திகள்:
பிராமணர்களுக்கு பாஜகவுக்கு விசுவாசமாக இருந்தாலும் கூட தமிழ்நாட்டில் எந்தவொரு தொகுதியிலும் பிராமண சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு தரப்படவில்லை என்று ஆனந்த் சீனிவாசன் விமர்சித்துள்ளார்.
கரூர் தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் இறங்கி இருந்த ஜோதிமணி திடீரென தனது தாயாரை நினைத்துக் கண்கலங்கினார். அப்போது கூட்டத்தில் இருந்த மூதாட்டி, "நாங்க எல்லாரும் உங்களுக்கு அம்மா தான்" என்று கூறி ஆறுதல்படுத்தினார்கள்.
எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வரம்பை உயர்த்துவதற்கான அரசியலமைப்பு திருத்தம் மேற்கொள்ளப்படும் காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications