நல்லா பாருங்க.. எடப்பாடி பழனிசாமியிடம் திடீரென தெரிந்த மாற்றம்.. கவனிச்சீங்களா? திமுகவுக்கு செக்?
சென்னை: எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியிடம் மிகப்பெரிய அளவில் அரசியல் ரீதியான மாற்றங்கள் தெரிய தொடங்கி உள்ளன.
கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 59ஆக உயர்ந்து உள்ளது. கள்ளக்குறிச்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சிறுவங்கூரை சேர்ந்த 34 வயது இளைஞர் மரணம் அடைந்துள்ளார். விஷச் சாராய விவகாரத்தில் இதுவரை 12 பேரை கைது செய்துள்ளனர் சி.பி.சி.ஐ.டி. போலீசார்.

இன்று காலைதான் கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் சம்பவம் தொடர்பாக மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர். அய்யாசாமி, தெய்வாரா ஆகியோரை கைது செய்தது சிபிசிஐடி போலீஸ். சிவக்குமார்(40), கதிரவன்(30) ஆகிய இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
அதிமுக எழுச்சி: இந்த கள்ளக்குறிச்சி விவகாரம் அதிமுகவை எழுச்சி அடைய செய்துள்ளது. எடப்பாடி தலைமைக்கு கீழ் அதிமுக அடுத்தடுத்து தோல்வி அடைந்ததே சசிகலா இப்படி பொங்கி எழ காரணம். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி வந்த காலத்தில் இருந்து வரிசையாக அக்கட்சி தோல்விகளை தழுவி வருகிறது. வரிசையாக 10 தேர்தல்களில் அதிமுக தோல்வி அடைந்து உள்ளது.
அதன்படி 2017 ஆம் ஆண்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல், அதே ஆண்டு 22 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தல், 2020 ஊரக உள்ளாட்சி தேர்தல், 2021 சட்டசபை தேர்தல், 2021 ஆம் ஆண்டு நடந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல், 2022 ஆம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், 2023 ஆம் ஆண்டு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், 2020ல் நடந்த கன்னியாகுமரி லோக்சபா இடைத்தேர்தல் என மொத்தம் 9 தோல்விகளை எடப்பாடி தலைமையிலான அதிமுக சந்தித்தது. இதோடு 10வது தேர்தலில் தோல்வி அடைந்து உள்ளது.
அப்செட்: இந்த தொடர் தோல்விகள் காரணமாக எடப்பாடி மீது அதிமுக தலைவர்கள் பலரும் அப்செட்டில் இருந்தனர். முக்கியமாக எடப்பாடி ஆக்டிவாக இல்லை. அவர் பெரிதாக வலுவான முடிவுகளை எடுக்கவில்லை என்று விமர்சனங்கள் வைக்கப்பட்டன. அந்த விமர்சனங்களுக்கு தற்போது எடப்பாடி பழனிசாமி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
எடப்பாடியிடம் தெரியும் மாற்றங்கள்: அதிமுக எங்கே உடையுமோ என்று கருதப்பட்ட நிலையில்தான் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியிடம் மிகப்பெரிய அளவில் அரசியல் ரீதியான மாற்றங்கள் தெரிய தொடங்கி உள்ளன.
1. முன்பு எடப்பாடி அடிக்கடி ஓய்வு எடுத்தது, பெரிதாக வெளியே தலைகாட்டாமல் இருந்தது போன்ற நடவடிக்கைகள் இப்போது இல்லை.
2. எடப்பாடி பழனிசாமி மேலும் ஆக்டிவ் ஆகி உள்ளார். அவரின் செயல்பாடுகளில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டு உள்ளது.
3. கடுமையான விமர்சனங்களை வைப்பது, நேரடியாக களத்திற்கு செல்வது அதிமுகவிடம் அதிகம் மிஸ் ஆனது. அது தற்போது எடப்பாடியிடம் தெரிய தொடங்கி உள்ளது.
4. திமுக முன்பு எதிர்க்கட்சியில் இருந்த போது போராட்டம், ஆர்ப்பாட்டம் என்று எப்போதும் ஸ்டாலின் லைம்லைட்டில் இருப்பார். அது அதிமுகவிடம் மிஸ் ஆனது. தற்போது அது மீண்டும் வந்துள்ளது.
5. முக்கியமாக மக்களை நேரில் சந்திப்பது... மக்களிடம் இருந்து அரசியலை செய்வது என்று எடப்பாடி பழனிசாமியிடம் நல்ல மாற்றங்கள் தெரிய தொடங்கி உள்ளன.












Click it and Unblock the Notifications